- Advertisement 3-
Homeவிளையாட்டுஇப்படி பவுலிங் பண்ணா எப்படி ஜெய்க்குறது.. 16 ஓவரில் முடிந்த கேம்.. கதறிய ஆர்சிபி ரசிகர்கள்..

இப்படி பவுலிங் பண்ணா எப்படி ஜெய்க்குறது.. 16 ஓவரில் முடிந்த கேம்.. கதறிய ஆர்சிபி ரசிகர்கள்..

- Advertisement 1-

ஐபிஎல் போட்டிகளில் பலம் வாய்ந்த அணியாக கருதப்படும் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் புள்ளி பட்டியலில் கடைசி இடங்களில் இருந்ததால் இரு அணிகளின் ரசிகர்களும் அதிக வருத்தத்தில் இருந்து வருகின்றனர். அப்படி ஒரு சூழலில் தான் இந்த இரு அணிகளும் நடப்பு தொடரின் 25 வது போட்டியில் மோதி இருந்தது. இந்த போட்டிக்கு முன்பாக பெங்களூர் அணி 5 போட்டிகளில் ஒன்றில் மட்டும் வெற்றி பெற்றிருந்தது.

மறுபுறம் மும்பை இந்தியன்ஸ் அணி நான்கு போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்றிருந்தது. அப்படி ஒரு சூழலில் இந்த இரு அணிகளுமே மோதியிருந்த நிலையில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணி, 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 196 ரன்கள் எடுத்திருந்தது. இந்த தொடரில் அந்த அணியின் சிறந்த பினிஷராக இருந்து வரும் தினேஷ் கார்த்திக், மீண்டும் ஒருமுறை வித்தை காட்டியதுடன் ஃபோர்கள் மற்றும் சிக்ஸர்களையும் பறக்க விட்டிருந்தார்.

கடைசி கட்டத்தில் அவர் 23 பந்துகளில் நான்கு சிக்ஸர்களுடன் 53 ரன்கள் எடுத்ததால் பெங்களூரு அணி நினைத்ததை விட நல்ல ஸ்கோரை எட்டி இருந்தது. மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட் ஆக டூபிளெஸ்ஸிஸ் 61 ரன்களையும் பட்டிதர் 50 ரன்களையும் எடுத்திருந்தனர்.

இதனை தொடர்ந்து இலக்கை நோக்கி ஆடிய மும்பை அணி ஆறு ஓவர்களிலேயே விக்கெட் இழக்காமல் 72 ரன்கள் எடுத்திருந்தது. சர்வதேச போட்டிகளில் ஆடாமல் இருந்ததால் அதிக விமர்சனத்தை சந்தித்திருந்த இஷான் கிஷன், பவர் பிளேவிலேயே அரைச் சதத்தை கடந்திருந்தார். இருவரும் இணைந்து 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில், இஷான் கிஷன் அவுட்டானார்.

- Advertisement 2-

பின்னர் வந்த சூரியகுமார் யாதவ், கடந்த போட்டியில் டக் அவுட்டாகி இருந்த நிலையில், இந்த முறை ஆர்சிபி பவுலர்களை சிதறடித்தார். 12 ஓவரிலேயே அவர்கள் 150 ரன்களை கடக்க, அதே ஓவரில் 38 ரன்கள் எடுத்த ரோஹித் ஷர்மா அவுட்டாகி இருந்தார். முன்னதாக இஷான் கிஷன் 23 பந்துகளில் அரைசதம் கடந்திருந்த நிலையில், சூர்யகுமார் யாதவ் 17 பந்துகளில் அரைசதத்தை அடித்து சாதனை புரிந்திருந்தார்.

இதற்காக 4 சிக்ஸர்கள் மற்றும் 5 ஃபோர்களை அவர் அடித்திருந்த நிலையில், ஐபிஎல் தொடரில் அவரது அதிவேக அரைச்சதமாகவும் இது பதிவாகி இருந்தது. இறுதியில் ஹர்திக் பாண்டியா மற்றும் திலக் வர்மாவும் பவுண்டரிகளை அடிக்க, அந்த அணி 16 வது ஓவரிலேயே 197 ரன்கள் என்ற இலக்கை எட்டி அசாத்திய சம்பவம் செய்துள்ளது. ஆர்சிபி வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு இருந்த போதிலும், பந்து வீச்சாளர்கள் ரன்களை வாரி வழங்கியதால் அந்த வாய்ப்பையும் அவர்கள் தவற விட்டு, ரசிகர்களை புலம்ப விட்டுள்ளனர்.

சற்று முன்