- Advertisement -
Homeவிளையாட்டு4 நாட்களில் களத்தில் 75 ஓவர்கள் நின்றுள்ளார். எஸ் அவருக்கு இஞ்சூரி இருக்கு. ஆனா அதன்...

4 நாட்களில் களத்தில் 75 ஓவர்கள் நின்றுள்ளார். எஸ் அவருக்கு இஞ்சூரி இருக்கு. ஆனா அதன் நிலை என்ன? – ஆர்சிபி பயிற்சியாளர் சஞ்சய் பாங்கர் சொன்ன தகவல்

- Advertisement-

இந்த ஐ.பி.எல்-லில் பல போட்டிகள் விறுவிறுப்பிற்கு பஞ்சம் இல்லாத வகையில் இருந்தது. அதிலும் குறிப்பாக கடைசி லீக் போட்டியான பெங்களூரு மற்றும் குஜராத் அணிக்கு இடையே நடந்த போட்டி பலரையும் இருக்கையின் நுனிக்கே அழைத்து சென்றது. இந்த ஐ.பி.எல்-லில் கோலி மீண்டும் தன்னையொரு ரன் மெஷின் என நிரூபித்துள்ளார். அவரின் தொடர் சதங்கள் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

இந்நிலையில் குஜராத் அணிக்கு எதிரான கடைசி லீக் போட்டியின்போது விஜய் ஷங்கரின் கேட்ச்சை கோலி பிடித்த போது அவரின் முழங்காலில் அடிபட்டது. அதன் பின்னர் அவர் சரியாக நடக்க முடியாமல் தவ்வி தவ்வி நடந்தார். இதனால் அவர் கடைசி ஐந்து ஓவர்கள் ஃபீல்ட் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் போட்டி முடிந்ததும் பேசியுள்ள ஆர்சிபி பயிற்சியாளர் சஞ்சய் பாங்கர் “அவருக்கு முழங்காலில் கொஞ்சம் சுணக்கம் உள்ளது. ஆனால் தீவிரமான காயம் எதுவும் இருப்பதாக நான் நினைக்கவில்லை. 2 நாட்கள் இடைவெளியில் தொடர்ச்சியாக இரண்டு சதங்களை அடித்த அவர் எப்போதும் பேட்டிங்கில் மட்டும் பங்களிக்க விரும்பாதவர்.

அவர் பீல்டிங்கிலும் நிறைய பங்களிக்க விரும்புவர். இரண்டு நாட்களுக்கு முன்பு 40 ஓவர்கள் மற்றும் இன்று, 35 ஓவர்களுக்கு அவர் களத்தில் இருந்தார். அவர் எப்போதுமே  தனது  பெஸ்ட்டைக் கொடுப்பவர். ஆனால் அவரது இஞ்சுரி தீவிரமானது என்று நான் நினைக்கவில்லை” என்று போட்டிக்குப் பிறகு பாங்கர் கூறினார்.

- Advertisement-

அதுமட்டுமில்லாமல் கோலி இங்கிலாந்தில் நடக்க உள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்காக செல்லும் ஏழு வீரர்களில் ஒருவராக இன்று இந்தியாவில் இருந்து புறப்படுகிறார் என்பதால், அவரின் காயம் தீவிரமான பிரச்சனையாக உருவாகவில்லை என்பதை நாம் அறியலாம்.

இதையும் படிக்கலாமே: ஏற்கனவே 3 முறை சொதப்பியாச்சு. இவரை ஆரம்பத்திலேயே தூக்கலனா சிஎஸ்கேவின் நிலமை கொஞ்சம் கஷ்டம் தான். வரலாற்றை மாற்றி அமைக்குமா சிஎஸ்கே?

அதுமட்டுமில்லாமல் கோலி, தன்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையில் அதிகளவில் காயங்களால் பாதிக்கப்படாமல் தன் உடல் பிட்னெஸ்ஸை பார்த்துக் கொள்பவர் என்பது கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் அறிந்த ஒன்று.

சற்று முன்