- Advertisement -
Homeவிளையாட்டுRCB வெற்றியால் தவிக்கிறதா மும்பை? புள்ளிப்பட்டியல் என்ன சொல்கிறது?

RCB வெற்றியால் தவிக்கிறதா மும்பை? புள்ளிப்பட்டியல் என்ன சொல்கிறது?

- Advertisement-

நேற்றைய போட்டியில் ஆர் சி பி அணி வெற்றி பெற்றிருப்பதால் ப்ளே ஆஃப் செல்ல காத்திருக்கும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு மிகப்பெரிய சிக்கல் உருவாகியுள்ளது. இந்த வெற்றியால் மும்பை அணி தங்கள் கடைசி போட்டியில் வென்றாலும் RCB-ன் முடிவுக்காகக் காத்திருக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.

நேற்றைய SRH அணிக்கு எதிரான வெற்றியின் மூலம் RCB புள்ளி பட்டியலில் நான்காவது இடத்திற்கு முன்னேறியது. ஆர்சிபி மும்பை இந்தியன்ஸை விட சிறந்த ரன் ரேட்டைக் கொண்டிருக்கிறது. மும்பை இந்தியன்ஸ் தங்கள் கடைசி போட்டியில் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியை எதிர் கொள்ள பெங்களூர் அணியோ புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

குஜராத் டைட்டன்ஸுடன் ஒப்பிடும்போது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பலம் குறைந்த அணிதான். ஆனால் குஜராத் டைட்டன்ஸ் ஏற்கனவே ப்ளே ஆஃப்க்கு தகுதி பெற்று விட்டதால் தங்கள் அணியின் இளம் வீரர்களுக்கு வாய்ப்பை வழங்கலாம். எனவே ஆர்.சி.பி அணிக்கு அது சாதகமாக அமையலாம்.

ஆர்சிபியின் இந்த வெற்றி கொல்கத்தா நைட் ரைடர்ஸ், பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் போன்ற அணிகளுக்கும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. RCB கடைசி ஆட்டத்தில் தோற்றாலும், 3 முதல் 4 அணிகள் 14 புள்ளிகளுடன் சமநிலையில் இருக்கும் சூழ்நிலை வந்தாலும், சிறந்த நிகர ரன் ரேட் அதிகமாக உள்ள காரணத்தால் பெங்களூர் அணிக்கு வாய்ப்புகள் அதிகமாக இருக்கும். இதனால் ஆர்சிபி ப்ளே ஆஃப் செல்லும்.

- Advertisement-

இருப்பினும், அந்த சூழ்நிலை உருவாக, KKR லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸை தோற்கடிக்க வேண்டும். அதே போல தர்மசாலாவில் வெள்ளிக்கிழமை நடக்கும் போட்டியில் பஞ்சாப் அல்லது ராஜஸ்தான் போட்டியில் ஒரு அணி பெரிய மாரிஜின் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும். இப்படி இடியாப்ப சிக்கலில் சிக்கிக் கொள்ளாமல் இருக்க ஆர்.சி.பி அணி குஜராத் டைட்டன்ஸ் அணியை வெல்லவேண்டும்.

இதையும் படிக்கலாமே: ரோகித் சர்மா, கிறிஸ் கெயில் சாதனைகள் எல்லாம் அவுட் – ஒரே போட்டியில் 4 சாதனைகளை படைத்தது கிங் என நிரூபித்த கோலி

தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் ஆகிய இரு அணிகளும் 15 புள்ளிகளோடு இரண்டாம் மற்றும் மூன்றாம் இடத்தில் உள்ளன. ஆர்சிபியின் இந்த வெற்றி ப்ளே ஆஃப் ரேஸில் இருக்கும் மற்ற அணிகளான மும்பை இந்தியன்ஸ் உள்ளிட்ட சில அணிகளை நேரடியாக பாதிக்கும். ஒரு வேளை அடுத்த போட்டிகளில் அந்த அணிகள் தோற்றால் ரன் ரேட் அடிப்படையில் ஆர்.சி.பி அணிக்கு ப்ளே ஆஃப் செல்லும் வாய்ப்பு அதிகமாகியுள்ளது.

சற்று முன்