- Advertisement -
Homeவிளையாட்டுமேட்ச் தோத்தாலும் கப் ஆர்சிபிக்கு தான்.. உலக கோப்பையில் ஆஸ்திரேலியாவுக்கு நடந்த அதே சம்பவம்.. சூப்பர்...

மேட்ச் தோத்தாலும் கப் ஆர்சிபிக்கு தான்.. உலக கோப்பையில் ஆஸ்திரேலியாவுக்கு நடந்த அதே சம்பவம்.. சூப்பர் கணக்கு போட்ட ரசிகர்கள்..

- Advertisement-

முதல் மேட்ச் தோத்தா என்ன கப்பு நமக்கு தான் என்ன ஆர்சிபி ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது ஒரு அருமையான செய்தி. சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டி என வந்துவிட்டாலே சிஎஸ்கே அணியை அங்கே வீழ்த்துவது மிக மிக கடினமான ஒன்றாகும். அப்படி இருந்தும் கடந்த சீசன்களில் ஒரு சில அணிகள் சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கேவை வீழ்த்தி இருந்தது. ஆனால் மிகப்பெரிய அணியாக கருதப்படும் ஆர்சிபி, கடந்த 2008 ஆம் ஆண்டு சிஎஸ்கேவை சேப்பாக்கம் மைதானத்தில் வீழ்த்தி இருந்தது. அதன் பிறகு தொடர்ச்சியாக 8 போட்டிகளில் தோல்வி அடைந்து அவர்களை வீழ்த்தும் வாய்ப்பை இந்த முறையும் பறி கொடுத்துள்ளது.

சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கேவை தொடக்கூட முடியாமல் தொடர்ந்து ஆர்சிபி அணி இருந்து வரும் நிலையில் இந்த தோல்வியுடன் அவர்கள் தொடங்கியுள்ளதால் ரசிகர்கள் சற்று ஏமாற்றம் அடைந்து தான் போயிருந்தனர். கோலி, பாப் டு பிளெஸ்ஸிஸ், மேக்ஸவெல் என ஆர்சிபி அணியின் பேட்டிங் பலமாக இருந்தபோதிலும் அந்த வீரர்களை வைத்துக் கொண்டு நல்லபடியான ரன்னை ஆரம்பத்தில் அவர்களால் குவிக்க முடியவில்லை.

தினேஷ் கார்த்திக் மற்றும் அனுஜ் ராவத் ஆட்டத்தால் தான் 173 ரன்கள் என்ற சிறப்பான ஸ்கோரை அவர்கள் எட்டி இருந்தனர். இதே போல ஆர்சி அணியின் பந்துவீச்சும் பெரிதாக எடுபடவே இல்லை. ஒரு சில இடங்களில் சில முக்கிய விக்கெட்டுகளை அவர்கள் எடுத்திருந்தாலும் அதனை தொடர முடியாமல் போனதால் 19 வது ஓவரில் சிஎஸ்கே அணி வெற்றி பெற்று ஆர்சிபிக்கு அதிர்ச்சி அளித்து இருந்தது.

இந்த ஆண்டு நடைபெற்ற மகளிர் ப்ரீமியர் லீக் தொடரை ஆர்சிபி அணி வென்றிருந்த நிலையில் அதனை ஐபிஎல் தொடரிலும் சாதித்துக் காட்டுவார்கள் என்ற நம்பி இருந்த ரசிகர்களுக்கு இந்த தோல்வி மிகப்பெரிய வேதனை தான். இனிவரும் போட்டிகளில் தோல்வி பாதையில் இருந்து மாறி வெற்றி பெற வேண்டும் என்பதும், பந்துவீச்சில் சிறப்பான வீரர்களை தேர்வு செய்து நேர்த்தியாக அவர்களை ஆட வைக்க வேண்டும் என்பதும் ரசிகர்களின் கோரிக்கையாக உள்ளது.

- Advertisement-

அப்படி இருந்தால் மட்டும்தான் தொடர்ச்சியாக வென்று இந்த முறை எப்படியாவது ஐபிஎல் கோப்பை அவர்களால் தூக்க முடியும் என்றும் தெரிகிறது. இந்த நிலையில் தான், ஐபிஎல் கோப்பையை ஆர்சிபி அணி கைப்பற்றும் என ஒரு சரியான கனெக்சன் செய்தி ரசிகர்களை திக்கு முக்காட வைத்துள்ளது. கடந்தாண்டு இந்தியாவில் வைத்து நடந்த உலகக் கோப்பையை பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி வென்றிருந்தது. மேலும் அவர்கள் சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த முதல் போட்டியில் தோல்வி அடைந்து அதிலிருந்து மீண்டு வந்து அந்த தொடரையே சொந்தமாக்கி இருந்தனர்.

இதேபோல தற்போது ஆரம்பமாகியுள்ள ஐபிஎல் தொடரின் முதல் போட்டியும் சேப்பாக்கம் மைதானத்தில் தான் நடந்தது. இதில் ஆர்சிபி அணி தோல்வியடைந்துள்ள நிலையில், ஆஸ்திரேலியா ஃபார்முலாவை போல சேப்பாக்கம் மைதானத்தில் தோல்வியின் பின்னர் கம்பேக் கொடுத்து அவர்கள் கோப்பையை கைப்பற்றுவார்கள் என எப்படி எல்லாமோ ரசிகர்கள் குறிப்பிட்டு வருகின்றனர். ஆஸ்திரேலியாவுக்கு நடந்தது போல நிச்சயம் ஆர்சிபிக்கும் நடக்கும் என்பதும் அவர்களின் கருத்தாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்