- Advertisement 3-
Homeவிளையாட்டுகம்பேக்னா இப்படி இருக்கணும்.. ஆட்டம் காட்டிய ஆர்சிபி.. தோனி இனி எடுக்க போகும் முடிவு என்ன?..

கம்பேக்னா இப்படி இருக்கணும்.. ஆட்டம் காட்டிய ஆர்சிபி.. தோனி இனி எடுக்க போகும் முடிவு என்ன?..

- Advertisement 1-

இந்த ஐபிஎல் தொடரிலேயே பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஆகிய அணிகளுக்கு இடையேயான போட்டி நடந்து முடிந்துள்ளது. இந்த போட்டியில், மழை நிச்சயம் குறுக்கிடும் என வானிலை அறிக்கை வெளியாகி இருந்த நிலையில், போட்டி முழுதாக நடக்க வேண்டும் என்று தான் ரசிகர்கள் வேண்டி வந்தனர்.

அதன்படி, இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, முதலில் பந்து வீச்சைத் தேர்வு செய்ய, ஆர்சிபி அணியின் தொடக்க வீரர்கள் பாப் டு பிளெஸ்ஸிஸ் மற்றும் கோலி ஆகியோர் தங்களின் பேட்டிங்கைத் தொடங்கினார்கள். முதல் 3 ஓவரில் ஆர்சிபி அணி சில சிக்ஸர்களை எளிதாக பறக்க விட, அவர்கள் 31 ரன்களை எட்டி இருந்தனர்.

தனது ஸ்ட்ரைக் ரேட் மூலம் அதிக விமர்சனத்தை சந்தித்திருந்த விராட் கோலி, சர்வ சாதாரணமாக சிக்ஸர்களை அடித்திருந்தார். இதற்கிடையே, மழை குறுக்கிட போட்டியும் கொஞ்ச நேரம் நின்று போனது. மழை பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தாததால் போட்டியும் உடனடியாக தொடங்க, அடுத்த சில ஓவர்கள் பந்து அதிகம் திரும்பியதால் ரன் சேர்க்கவே சிரமப்பட்டது ஆர்சிபி.

அதே நேரம் விக்கெட் விழாமல் கோலி மற்றும் பாஃப் பார்த்துக் கொள்ள, பின்னர் அதிரடியை வந்த அனைவருமே காட்டத் தொடங்கினார்கள். கோலி 47 ரன்களில் அவுட்டாக, பாப் டு பிளெஸ்ஸிஸ் 54 ரன்களையும், படிதர் 41 ரன்களையும் எடுத்து அவுட்டாகி இருந்தனர்.

- Advertisement 2-

அதே போல, கேமரூன் க்ரீன் அதிரடி காட்டி 17 பந்துகளில் 38 ரன்கள் சேர்க்க, ஆர்சிபி அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 218 ரன்கள் சேர்த்திருந்தது. இந்த போட்டியில் சிஎஸ்கே அணி இலக்கை எட்டாமல் போனால் கூட அவர்கள் 201 ரன்களை எடுத்தாலே பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறி விடலாம். அதே வேளையில், இன்னொரு பக்கம் ஆர்சிபி அணி சிஎஸ்கேவை 200 ரன்களுக்குள் கட்டுப்படுத்தினால் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறி விடலாம் என்ற சூழலில் தான் 2 வது இன்னிங்ஸ் ஆரம்பமானது.

மேக்ஸ்வெல் இந்த போட்டியில் முதல் ஓவரை வீச, அதற்கு முதல் பந்திலேயே ஆர்சிபிக்கு கை மேல் பலன் கிடைத்திருந்தது. சிஎஸ்கே அணிக்காக இந்த சீசனில் அதிக ரன் சேர்த்த கேப்டன் ருத்துராஜ், முதல் பந்திலேயே அவுட்டாகி அதிர்ச்சி அளித்திருந்தார். இவரை தொடர்ந்து, மிட்செல்லும் 4 ரன்களில் நடையை கட்ட, 19 ரன்களில் 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது சிஎஸ்கே.

ஆனால், அடுத்து கைகோர்த்த ரச்சின் ரவீந்திரா மற்றும் ரஹானே ஆகியோர் சிறப்பாக ஆடி ரன் சேர்த்தனர். ஆனால், அவர்கள் இருவரும் அவுட்டான பின்னர் போட்டி அப்படியே தலைகீழாக மாறியது. அதிலும் சிறப்பாக ஆடிக் கொண்டிருந்த ரச்சின் ரவீந்திரா, 37 பந்துகளில் 61 ரன்கள் எடுத்து அவுட்டாக, போட்டியும் சிஎஸ்கே கைவிட்டு போக தொடங்கியது. கடைசி 4 ஓவர்களில் வெற்றிக்கு 80 ரன்கள் தேவைப்பட்டாலும், 63 ரன்கள் சேர்த்தால் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறி விடலாம் என்ற நிலை இருந்தது.

மேலும், இரு அணிகளும் வெற்றியை பற்றி கருதாமல் குறிப்பிட்ட ரன்னில் மட்டும் தான் கவனம் செலுத்தி ஆடி வந்தனர். அடுத்த 2 ஓவர்களில் மொத்தம் 28 ரன்கள் சேர்க்கப்பட, கடைசி 12 பந்துகளில் 35 ரன்கள் சேர்த்தால் சிஎஸ்கே பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறி விடலாம் என்ற நிலை இருந்தது.

மைதானத்தில் இருந்த இரு அணியின் ரசிகர்களும் என்ன நடக்கும் என்பதே தெரியாமல் உச்சகட்ட கலக்கத்தில் இருக்க, 19 வது ஓவரில் 18 ரன்கள் சேர்க்கப்பட்டது. இதனால் 6 பந்தில் 17 வேண்டுமென்ற சூழலில், முதல் பந்தை தோனி சிக்சருக்கு பறக்க விட, அடுத்த பந்தில் அவுட்டானார். பின்னர் உள்ளே வந்த தாக்கூர், ரன் சேர்க்க திணற, சிஎஸ்கே அணியால் 20 ஓவர்கள் முடிவில் 191 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

இப்படி ஒரு த்ரில்லரான போட்டியில் வெற்றி பெற்று தற்போது 4 வது அணியாக உள்ளே வந்து சிஎஸ்கே மட்டுமில்லாமல், ஒட்டுமொத்த ஐபிஎல் ரசிகர்களையும் ஒரு நிமிடம் மெய்சிலிர்க்க வைத்துள்ளது. மேலும் இந்த தோல்வியால் சிஎஸ்கே அணி தற்போது வெளியேறி உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

சற்று முன்