உலகக்கோப்பை அட்டவணையில் 9 போட்டிகள் மாற்றம்.. இந்தியாவுக்கு 2 போட்டிகள் மாற்றம்.. புதிய அட்டவணையால் குழம்பிய ரசிகர்கள்!

- Advertisement -

உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடரும் வரும் நவ.5ஆம் தேதி முதல் நவ.19ஆம் தேதி நடத்த ஐசிசி மற்றும் பிசிசிஐ திட்டமிட்டிருந்தது. இதற்கான அட்டவணையை 100 நாட்கள் கவுண்ட் டவுன் வைத்து பிசிசிஐ மும்பையில் கடந்த ஜூன் 27ஆம் தேதி அறிவித்தது. இதில் இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் அக்.15ஆம் தேதி அகமதாபாத் மைதானத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

ஆனால் அக்.15ஆம் தேதி நவராத்திரி திருவிழா தொடங்குவதால் பாதுகாப்பு ஏற்பாடுகளில் சிக்கல் இருப்பதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதேபோல் நவ.12ல் கொல்கத்தாவில் துர்கா பூஜை திருவிழா நடக்கப்பதால், ஈடன் கார்டன்ஸில் நடக்கவுள்ள போட்டிகளிலும் மாற்றங்கள் வரலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.

- Advertisement -

இதனை பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா உறுதிப்படுத்தினார். இந்த நிலையில் ஐசிசி உலகக்கோப்பை அட்டவணையில் மொத்தமாக 9 போட்டிகளுக்கு தேதி மாற்றப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் அக்.15ல் நடக்கவிருப்பதாக அறிவிக்கப்பட்ட இந்தியா பாகிஸ்தான் ஆட்டம், அக்.14ல் நடக்கவுள்ளது. இதனால் இங்கிலாந்து – ஆஃப்கானிஸ்தான் இடையிலான ஆட்டம் அக்.15க்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

அதேபோல் பாகிஸ்தான் – இலங்கை அணிகளுக்கு இடையிலான ஆட்டம் அக்.10ஆம் தேதியும், ஆஸ்திரேலியா – தென்னாப்பிரிக்கா இடையிலான ஆட்டம் அக்.13ஆம் தேதி நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் அக்.14ஆம் தேதி நடக்கவிருந்த நியூசிலாந்து – வங்கதேசம் இடையிலான ஆட்டம், அக்.13ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. அதேபோல் இங்கிலாந்து – வங்கதேசம் இடையில் தரம்சாலாவில் நடக்கவிருந்த பகலிரவு ஆட்டம், பகல நேர ஆட்டமாக மாற்றப்பட்டுள்ளது.

- Advertisement -

அதேபோல் நவ.12ல் நடக்கவிருந்த ஆஸ்திரேலியா – பாகிஸ்தான் ஆட்டம் நவ.11ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. அதேபோல் நவ.12ல் இந்தியா – நெதர்லாந்து அணிகளுக்கு இடையிலான போட்டி பெங்களூருவில் பகலிர்வு ஆட்டமாக நடக்கும் என்று அறிவிக்கபட்டுள்ளது. இதனால் எந்தப் போட்டி எப்போதும் எங்கு நடக்கும் என்பதிலேயே ரசிகர்களுக்கு குழப்பம் ஏற்பட்டுள்ளது.

மற்ற நாட்டு கிரிக்கெட் வாரியங்கள் உலகக்கோப்பையை நடத்தினால் வெளிநாட்டு பயணிகளைஒ மனதில் வைத்து அட்டவணையை ஒரு ஆண்டுக்கு முன்பாக அட்டவணை வெளியாகும். ஆனால் பிசிசிஐ நடத்தி வரும் உலகக்கோப்பைத் தொடரில் இப்போது கூட உறுதியான அட்டவணை இதுதானா என்பது தெரியாமல் ரசிகர்கள் உள்ளனர்.

- Advertisement -

சற்று முன்