- Advertisement -
Homeவிளையாட்டுஒவ்வொருவருக்கும் கடமைப்பட்டுள்ளேன்.. அதிக விக்கெட்டுகள் வீழ்த்துவதற்கு காரணம் எது தெரியுமா? சாதனை படைத்த முகமது ஷமி...

ஒவ்வொருவருக்கும் கடமைப்பட்டுள்ளேன்.. அதிக விக்கெட்டுகள் வீழ்த்துவதற்கு காரணம் எது தெரியுமா? சாதனை படைத்த முகமது ஷமி பேச்சு

- Advertisement-

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய இந்திய வீரர்கள் பட்டியலில் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி முதலிடத்திற்கு முன்னேறி இருக்கிறார். இந்திய அணியின் முன்னாள் வீரர்களான ஜாகீர் கான் 44 மற்றும் ஜவகல் ஸ்ரீநாத் இருவரும் 44 விக்கெட்டுகள் வீழ்த்தி முதலிடத்தில் இருந்தனர்.

இந்த சூழலில் முகமது ஷமி 13 இன்னிங்ஸ்களில் 40 விக்கெட்டுகளை வீழ்த்தி 3வது இடத்தில் இருந்தார். தற்போது இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலமாக 14 இன்னிங்ஸ்களில் 45 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார். அதேபோல் உலகக்கோப்பை தொடரில் 50 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்திய வீரர் என்ற பெருமையையும் முகமது ஷமி பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதைப் பற்றி முகமது ஷமி பேசும் போது, இந்திய அணியின் பவுலிங் மிகச்சிறந்த கவலையுடன் உள்ளது. அனைவரும் நல்ல லைன் மற்றும் லெந்தில் வீசி வருகிறோம். ஒரு பவுலரின் வெற்றியை மற்ற பவுலர்களும் கொண்டாடி வருகிறோம். அதேபோல் பவுலிங் குழுவாக சிறப்பாக விளையாடி வருவதே எங்களுக்கு முக்கியமானதாக அமைந்துள்ளது. அதன் மூலமாகவே நாங்கள் இந்திய அணிக்கு சாதகமான முடிவுகளை கொண்டு வருகிறோம்.

உலகக்கோப்பை போன்ற பெரிய தொடர்களில் சிறந்த ரிதத்தில் பந்துவீச வேண்டும். ரிதம் என்பது நல்ல வேகம், லைன் மற்றும் லெந்தை மாற்றாமல் இருப்பது தான். ஒருமுறை நாம் ரிதத்தை விட்டுவிட்டால் அடுத்து அதனை மீண்டும் கண்டறிவது கடினமானதாகும். எப்போதும் எனது கவனம் முழுக்க சரியான லைன் மற்றும் லெந்தில் வீசுவது தான். இந்திய வீரர்கள் முதலிடத்திற்கு எட்டி சாதனை படைத்தது மகிழ்ச்சி தான்.

- Advertisement-

ஆனால் புதிய பந்தில் சரியான லைன் மற்றும் லெந்தில் வீசினால் தான் ஆடுகளத்தின் உதவியை பெற முடியும். அதிலும் வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் லைன் மற்றும் லெந்த் மிக முக்கியம். அதேபோல் ஒவ்வொரு போட்டியிலும் மிகச்சிறந்த ஆதரவை ரசிகர்கள் வழங்கி வருகிறார்கள். அவர்கள் ஒவ்வொருவருக்கும் நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன்.

இந்தியா மட்டுமல்லாமல், வெளிநாடுகளிலும் இதேபோன்று ஆதரவை பெறுகிறோம். இந்திய வீரர்களின் ஓய்வறை மகிழ்ச்சியாக உள்ளது. அதேபோல் அல்லாவுக்கு நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன். அதிக விக்கெட்டுகளை பெறுவதில் எந்த அறிவியலும் கிடையாது. சரியான லைன் மற்றும் லெந்தில் கவனம் செலுத்துவது தான் என்று கூறியுள்ளார்.

சற்று முன்