- Advertisement -
Homeவிளையாட்டுடெல்லி அணியின் வேற மாதிரி பிளான்.. கவனமா இருங்க.. சிஎஸ்கேவை எச்சரித்த ரிக்கி பாண்டிங்..

டெல்லி அணியின் வேற மாதிரி பிளான்.. கவனமா இருங்க.. சிஎஸ்கேவை எச்சரித்த ரிக்கி பாண்டிங்..

- Advertisement-

ஐபிஎல் தொடரில் இன்றைய தினம் (31.03.2024) இரண்டு போட்டிகள் நடைபெறுகிறது. இதன் முதல் போட்டியில், குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் என இரண்டு பலம் வாய்ந்த அணிகள் அகமதாபாத் மைதானத்தில் மோதுகிறது. இரு அணிகளுமே தலா இரண்டு போட்டிகளில் ஆடி ஒன்றில் வெற்றி கண்டு ஒரே புள்ளியுடன் இருப்பதால் இந்த போட்டி இரு அணிகளுக்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

இதனைத் தொடர்ந்து, இரவு நடைபெறும் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதுகின்றது. சென்னை சூப்பர் கிங்ஸ் ஒரு பக்கம், தங்களின் இரண்டு போட்டிகளையும் சேப்பாக்கம் மைதானத்தில் ஆடி உள்ளதுடன் அவற்றில் வெற்றி பெற்று முதலிடத்திலும் உள்ளனர். மறுபுறம், டெல்லி கேப்பிடல்ஸ் அணி ரிஷப் பந்த் தலைமையில் இரண்டு போட்டிகளிலும் தோல்வி அடைந்துள்ளது.

பல நட்சத்திர வீரர்கள் அந்த அணியில் இருந்த போதிலும் அவர்களால் வெற்றியை ருசிக்க முடியவில்லை. மேலும் இந்த சீசனில், இதுவரை நடந்த 11 போட்டிகளின் முடிவில் பெங்களூர் மட்டும் தான் தங்களின் சொந்த மைதானத்தில் தோல்வி அடைந்துள்ளது. மேலும் சென்னை – டெல்லி அணிகள் மோதும் போட்டி விசாகப்பட்டணத்தில் நடைபெற உள்ளதால் ரிஷப் பந்த்திற்கு இது ஒரு சிறந்த வாய்ப்பாக இருக்கும் என்றே தெரிகிறது.

இரண்டு போட்டிகளை சொந்த மைதானத்தில் ஆடி விட்டு டெல்லிக்கு எதிராக வேறு மைதானத்தில் சிஎஸ்கே ஆட உள்ளதால், இங்கே எப்படி தங்களை தயார் செய்து கொண்டு ஆட போகிறார்கள் என்பதை அறியவும் ரசிகர்கள் ஆர்வமாக இருக்கின்றனர். இப்படி இன்றைய இரண்டு போட்டிகளும் பட்டையை கிளப்பும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement-

இந்த நிலையில், டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங், சிஎஸ்கே அணிக்கு எதிராக ஆடவுள்ள போட்டி பற்றி சில கருத்துக்களைத் தெரிவித்துள்ளார். “ஒரு அணியாக நாங்கள் என்ன செய்கிறோம் என்பதை பற்றி தொடர்ந்து நாங்கள் கலந்துரையாடி வருகிறோம். வீரர்கள் தான் முன் வந்து விஷயங்களை செய்ய வேண்டும். நாங்கள் சிறந்த மற்றும் மோசமான கிரிக்கெட்டையும் ஆடி வருகிறோம். டெல்லி அணியில் சிறந்த கிரிக்கெட் என்பது தொடர்ச்சியாக ஒரு போட்டியின் 40 ஓவர்களிலும் இருக்க வேண்டும்.

நாங்கள் தோல்வி அடைந்த இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றிருக்க வேண்டும். இஷாந்த் ஷர்மா முதல் போட்டியின் பாதியில் காயம் அடைந்திருந்தது எங்களுக்கு தோல்வியை தந்தது. இரண்டாவது போட்டியில் பந்து வீச்சாளர்கள் கொஞ்சம் ரன்களை அதிகம் கொடுத்ததால் தோல்வி அடைந்தோம். ஆனால், சிஎஸ்கேவுக்கு எதிராக நடைபெற உள்ள போட்டியில் 40 ஓவர்களில் சிறப்பாக ஆடி ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்த உள்ளோம்” என தெரிவித்துள்ளார்.

சற்று முன்