- Advertisement -
Homeவிளையாட்டுபும்ரா கூட அந்த இடதுகை பவுலர கூட்டிட்டு போங்க.. மாஸ் பண்ணுவான்.. ஐடியா கொடுத்த முன்னாள்...

பும்ரா கூட அந்த இடதுகை பவுலர கூட்டிட்டு போங்க.. மாஸ் பண்ணுவான்.. ஐடியா கொடுத்த முன்னாள் வீரர்..

- Advertisement-

இந்திய அணி இலங்கைக்கு எதிரான ஒரு நாள் தொடரை இழந்தாலும் அது முக்கியமான தொடர் இல்லை என்பது தான் நிதர்சனமான உண்மை. இலங்கை அணிக்கு எதிராக தொடரை இழந்தது ஒரு சின்ன அவமானமாக இருந்தாலும் வரும் போட்டிகளில் இந்திய அணியை எந்த விதத்திலும் அந்த தொடர் பாதிக்கப் போவதும் கிடையாது.

இதனிடையே ரோஹித் மற்றும் கோலி ஆகியோர் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றது அடுத்தடுத்து வரும் ஐசிசி தொடர்களை வெல்வதற்காக தான் என்றும் தகவல்கள் வெளியானது. அந்த வகையில் இந்திய அணி இரண்டு முறையும் இறுதி போட்டிக்கு முன்னேறி தவறவிட்ட உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப், அடுத்த ஆண்டு ஜூன் மாதம் நடைபெறும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றது

இதில் இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேற அடுத்து சில முக்கியமான டெஸ்ட் தொடர்களும் நடைபெற உள்ள நிலையில் அதில் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருப்பது தான் பார்டர் கவாஸ்கர் டிராபி தொடர். ஆஸ்திரேலிய மண்ணில் கடந்த இரண்டு முறை நடந்த பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரை இந்திய அணி சிறப்பாக கைப்பற்றி சரித்திரம் படைக்க, இந்த முறை ரோஹித் ஷர்மா கேப்டன்சியிலும் அதனை அவர்கள் தவற விட மாட்டார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால், அதே வேளையில் இரண்டு முறையும் இந்திய அணிக்கு எதிராக சொந்த மண்ணில் ஆஸ்திரேலியா போன்ற பலம் வாய்ந்த அணி தோல்வி அடைந்தது நிச்சயம் அவர்களுக்கு மிகப்பெரிய அவமானம் தான். அந்த இரண்டு தோல்விகளுக்கும் சேர்த்து இந்த முறை நிச்சயம் பதிலடி கொடுக்க முயற்சி செய்யும் என்றும் தெரிகிறது.

- Advertisement-

இதனிடையே ஆஸ்திரேலியா மண்ணில் சிறப்பாக ஆட வேண்டும் என்றால் இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர்கள் தேர்வும் முக்கியமானதாக இருக்கும். அந்த வகையில் பும்ரா, முகமது ஷமி, சிராஜ் ஆகியோர் இருக்க, அவர்களைத் தாண்டி அர்ஷ்தீப் சிங், மயங்க் யாதவ் உள்ளிட்ட வீரர்களின் பெயர்களையும் பலர் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் ஆஸ்திரேலிய அணியின் ஜாம்பவானான ரிக்கி பாண்டிங் இந்த இடது கை வேகப்பந்து வீச்சாளர் கலீல் அகமது இந்திய அணியில் இடம்பெற வேண்டும் என்று தெரிவித்துள்ளார். “கலீல் அகமது போன்ற ஒரு வீரருக்கு நிச்சயம் இந்த டெஸ்ட் தொடரில் தன்னை பற்றி அறிந்து கொண்டு கொள்ள முடியும் என்று நான் நினைக்கிறேன்.

ஜிம்பாப்வே தொடரில் அவர் விளையாடியது எனக்கு தெரியும். என்றாலும் இடது கை பந்து வீச்சாளரான அவர், பார்டர் கவாஸ்கர் தொடரில் இந்திய அணியில் இடம் பிடிக்க சிறந்த தேர்வாக இருப்பார். கலீல் அகமதுடன் முகமது ஷமியும் ஃபிட்டாக திரும்பி வந்தால் சிராஜ் மற்றும் பும்ரா ஆகியோரும் இருப்பார்கள்,

அப்படி நடக்கும் போது இரண்டு அணிகளின் பந்து வீச்சு லைன் அப்பும் மிக பலமாக இருக்கும் என்பது தான் உண்மை” என ரிக்கி பாண்டிங் கூறி உள்ளார்.

சற்று முன்