- Advertisement 3-
Homeவிளையாட்டுஅப்படியே தோனி செய்ததையே இவரும் செய்கிறார். தோனியோடு ஒப்பிட்டு சிஎஸ்கே வீரரை புகழ்ந்து தள்ளிய ரிக்கி...

அப்படியே தோனி செய்ததையே இவரும் செய்கிறார். தோனியோடு ஒப்பிட்டு சிஎஸ்கே வீரரை புகழ்ந்து தள்ளிய ரிக்கி போயிண்டிங்.

- Advertisement 1-

நடப்பு உலக டெஸ்ட் சாம்பியனான ஆஸ்திரேலியா தற்போது இங்கிலாந்து நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையே அண்மையில் நடைபெற்று முடிந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியை 43 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்த ஆஸ்திரேலியா அணியானது தற்போது ஐந்து போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இரண்டுக்கு பூஜ்யம் (2-0) என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

இந்த போட்டியில் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இங்கிலாந்தின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் தனி ஒருவராக இரண்டாவது இன்னிங்சில் சதம் அடித்தும் அவர்களது அணியை காப்பாற்ற முடியாமல் போனது. இங்கிலாந்து அணியின் கேப்டன் ஸ்டோக்ஸ் 214 பந்துகளை சந்தித்து 155 ரன்களை விளாசினார். இதில் 9 சிக்ஸர்களும், 9 பவுண்டரிகளும் அடங்கும்.

இப்படி பென் ஸ்டோக்ஸ் விளையாடிய விதம் அனைவரது மத்தியிலும் பாராட்டினை பெற்றுள்ளது. ஏற்கனவே இதே போன்று 2019-ஆம் ஆண்டு ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலியா அணியை ஒற்றை ஆளாக வீழ்த்திய ஸ்டோக்ஸ் 135 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் இங்கிலாந்து அணியை வெற்றி பெறச் செய்தார். அதேபோன்று இம்முறையும் வெற்றியை பெறலாம் என்று நினைத்த வேளையில் அவர் ஆட்டமிழந்தது இங்கிலாந்து அணியின் தோல்வியை உறுதி செய்தது.

இந்நிலையில் இந்த போட்டியில் ஸ்டோக்ஸ் விளையாடிய விதத்தை தோனியுடன் ஒப்பிட்டு பேசிய ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் கூறுகையில் : எந்த ஒரு சர்வதேச வீரரும் எந்த நேரத்திலும் அழுத்தத்தில் தான் களத்திற்கு பேட்டிங் செய்ய வருவார்கள் என்று நான் நினைக்கிறேன்.

- Advertisement 2-

ஆனால் பென் ஸ்டோக்ஸ் மிடில் ஆர்டரில் பேட்டிங் செய்வது சற்று இயல்பாகவே இருக்கிறது. மற்ற சிலரை விட அதிக வெற்றி வாய்ப்புகளை தன்னுள் வைத்து அணியை காப்பாற்றும் வீரராக பென் ஸ்டோக்ஸ் இருக்கிறார். இப்படி அணியை காப்பாற்ற வேண்டும் என்ற நம்பிக்கையுடன் விளையாடும் வீரர்களில் முதலாவதாக என் நினைவுக்கு வருவது தோனி தான். அவர் நிறைய டி20 போட்டிகளில் தனி ஒருவராக நின்று கடைசி வரை போட்டியை முடித்து கொடுத்திருக்கிறார்.

அதேசமயம் தற்போது டெஸ்ட் போட்டிகளில் பென் ஸ்டோக்ஸ் அதனை செய்து வருகிறார். இப்படி போட்டியின் இறுதிவரை நின்று போட்டிகளை முடித்துக் கொடுக்கும் வீரர்களாக கேப்டன்களே இருந்து வருகின்றனர். அந்த வகையில் தோனி டி20 கிரிக்கெட்டில் என்ன செய்தாரோ அதனை ஸ்டோக்ஸ் டெஸ்ட் கிரிக்கெட்டில் செய்து வருவதாக பாண்டிங் கூறியது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்