- Advertisement -
Homeவிளையாட்டுகோலியே இத என்கிட்டே சொன்னாரு. இந்த முறை ஆஸ்திரேலிய அணிக்கு அப்போ சம்பவம் இருக்கு. ரகசியம்...

கோலியே இத என்கிட்டே சொன்னாரு. இந்த முறை ஆஸ்திரேலிய அணிக்கு அப்போ சம்பவம் இருக்கு. ரகசியம் பகிர்ந்த ரிக்கி

- Advertisement-

கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஐபிஎல் ஜுரம் முடிவதற்குள் அடுத்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டியின் ஜுரம் தாக்க ஆரம்பித்து விட்டது. ஜூன் 7 ஆம் தேதி நடக்கும் போட்டிக்காக இங்கிலாந்தில் முகாமிட்டுள்ளனர் இந்தியா மற்றும் ஆஸி அணியினர்.

கடந்த 2 ஆண்டுகளாக நடந்த டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் லீக் போட்டிகளில் முதல் இரண்டு இடங்களை ஆக்கிரமித்த இந்தியா மற்றும் ஆஸி அணிகள் இறுதிப் போட்டியில் மோதுகின்றன. கடந்த முறை இந்திய அணி இறுதிப் போட்டிக்கு வந்து நியுசிலாந்து அணியிடம் வீழ்ந்தது.

கடந்த முறை பார்மில் இல்லாத கோலி, இந்த முறை மீண்டும் தன்னுடைய ரன்மெஷின் பார்முக்கு திரும்பியுள்ளார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக கேப்டன் ரோஹித் இம்முறை ஃபார்மில் இல்லாமல் தவிக்கிறார். அணியில் இருந்து வெளியில் உட்கார வைக்கப்பட்ட புஜாரா மற்றும் ரஹானே ஆகியோரும் மீண்டும் அணியில் இணைந்துள்ளது கூடுதல் பலம். புஜாரா அதிகளவில் இங்கிலாந்தில் கவுண்ட்டி கிரிக்கெட் விளையாடியுள்ளார் என்பது அணிக்குக் கூடுதல் பலம்.

இங்கிலாந்து அணியின் தட்ப வெப்ப நிலை இந்திய அணி போல ஆஸி அணிக்கு பெரிதாக பாதிப்புகளை ஏற்படுத்தாது. ஏனெனில் ஆஸியின் தட்பவெப்ப நிலையும் கிட்டத்தட்ட இங்கிலாந்து தட்பவெப்ப நிலை போன்றதுதான்.  இது அந்த அணிக்கு கூடுதல் பலமாக அமைந்துள்ளது

- Advertisement-

ஆஸி அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் இரு அணிகள் குறித்தும் பேசியுள்ளார். அதில் “ஆஸி அணியினர் கோலி குறித்தும், புஜாரா குறித்தும் தங்கள் அணி மீட்டிங்கில் பேசுவார்கள் என்பதில் சந்தேகம் இல்லை. இருவருமே முக்கியமான வீரர்கள்.  குறிப்பாக புஜாரா கடந்த காலங்களில் ஆஸி அணிக்கு பயங்கர சேதங்களை விளைவித்திருக்கிறார்” எனக் கூறியுள்ளார்.

மேலும் சமீபத்தில் ஃபார்முக்கு திரும்பியுள்ள கோலி பற்றி பேசியுள்ள பாண்டிங் “விராட் கோலி ஐபில் தொடரில் அபாயகரமான இன்னிங்ஸை ஆடியுள்ளார். தான் ஃபார்முக்கு திரும்பி விட்டதாக அவரே என்னிடம் பேசியுள்ளார். இது ஆஸி அணிக்கு மிகப்பெரிய எச்சரிக்கையாகும்” எனக் கூறியுள்ளார்.

சற்று முன்