- Advertisement 3-
Homeவிளையாட்டுரோஹித் ஸ்பெஷலா ஒன்னும் சொல்லல.. நான் உடைஞ்சு போனப்போ அவர் சொன்ன இரண்டே வார்த்தை.. மனம்...

ரோஹித் ஸ்பெஷலா ஒன்னும் சொல்லல.. நான் உடைஞ்சு போனப்போ அவர் சொன்ன இரண்டே வார்த்தை.. மனம் திறந்த ரிங்கு சிங்

- Advertisement 1-

ஐபிஎல் போட்டி முடிந்த கையோடு இன்னும் சில தினங்களில் டி20 உலக கோப்பை நடைபெற உள்ளது. இதன் காரணமாக, ரோஹித் ஷர்மா தலைமையில் இந்திய வீரர்கள் அனைவரும் அமெரிக்காவிற்கு கிளம்பி விட்டனர். வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் வைத்து டி20 உலக கோப்பை நடைபெற உள்ள நிலையில் அனைத்து அணிகளுமே மிகுந்த பலத்துடன் தான் காணப்படுகின்றனர்.

அதிலும் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியில் விராட் கோலி, ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன், ரிஷப் பந்த், ஹர்திக் பாண்டியா, ஷிவம் துபே, பும்ரா உள்ளிட்ட பலரும் இடம் பெற்றது அந்த அணிக்கு பெரிய பலமாக இருக்கிறது. மேலும் கடந்த ஆண்டு ஒருநாள் உலக கோப்பையை தவறவிட்டதற்கு பதிலடியாக இந்த சீசனில் டி20 உலக கோப்பையை இந்திய அணி கைப்பற்றுவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் அதே வேளையில் இந்திய அணி சில வீரர்களை தேர்வு செய்யாமல் போனதும் அதிக கேள்விகளை எழுப்பி இருந்தது. அதில் குறிப்பிடத்தக்க ஒருவர் தான் ரிங்கு சிங். பினிஷர் ரோலில் மிகச் சிறப்பாக டி20 போட்டிகளில் ஆடி வந்த ரிங்கு சிங்கிற்கு அணியில் இடம் கிடைக்கவில்லை. இதனால் அவரும் அதிகம் மனமுடைந்து போயிருந்த நிலையில், ஐபிஎல் தொடருக்கு நடுவே, இந்திய அணி அறிவிக்கப்பட்ட பின்னர் ரிங்கு சிங்கை ரோஹித் ஷர்மா சந்தித்திருந்தார்.

இந்த நிலையில், தான் தேர்வாகாமல் போன சமயத்தில் சந்தித்த துன்பமும் அதற்கு பின்னர் ரோஹித் தனக்கு அனுப்பிய மெசேஜ் பற்றியும் சில கருத்துக்களை தெரிவித்துள்ளார் ரிங்கு சிங். “யாராக இருந்தாலும் நன்றாக ஆடியும் வாய்ப்புகள் கிடைக்காமல் போகும்போது ஏமாற்றம் அடைய தான் செய்வார்கள். அணியின் காம்பினேஷன் சிறப்பாக இருக்க வேண்டும் என்பதால் தான் நான் தேர்வு செய்யப்படவில்லை. நமது கையில் எதுவும் இல்லை என்ற போது நாம் அதை நினைத்து பெரிதாக யோசிக்க கூடாது.

- Advertisement 2-

முதலில் நான் சற்று கலங்கி போயிருந்தாலும் பின்னர் என்னை நானே சரி செய்து கொண்டேன். நடப்பதெல்லாம் நமது நன்மைக்கு என்றும் நான் தீர்மானித்து விட்டேன். ரோஹித் ஷர்மா என்னிடம் ஸ்பெஷலாக எதுவும் சொல்லவில்லை. ‘நீ கடினமாக உழைத்துக் கொண்டே இரு. இரண்டு ஆண்டுகளில் உலக கோப்பை இருக்கிறது. இதனை நினைத்து நீ பெரிதாக கவலை கொள்ள வேண்டாம்’ என ரோஹித் சர்மா என்னிடம் கூறினார்.

ரோஹித் ஷர்மா இப்போது அணியில் உள்ள இளம் வீரர்களுக்கு தொடர்ந்து ஆதரவை அளித்து வருகிறார். இளம் வீரர்கள் நன்றாக ஆட வேண்டும் என விரும்பும் அவர் தொடர்ந்து சிறப்பாக செயல்படுங்கள் என்று மட்டும் தான் அவர்களிடம் கூறி வருவார்” என ரிங்கு சிங் தெரிவித்துள்ளார்.

சற்று முன்