- Advertisement 3-
Homeவிளையாட்டுரிங்கு சிங் ஆடுவது ஒரு வீரரை எனக்கு நினைவூட்டுகிறது.. அந்த பெயரை நான் சொல்ல தேவையில்லை.....

ரிங்கு சிங் ஆடுவது ஒரு வீரரை எனக்கு நினைவூட்டுகிறது.. அந்த பெயரை நான் சொல்ல தேவையில்லை.. அனைவருக்கும் தெரியும்.. சூர்யகுமார் யாதவ் பேச்சு

- Advertisement 1-

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இந்திய அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றுள்ளது. திருவனந்தபுரத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி கேப்டன் மேத்யூ வேட் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதன்பின் களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 235 ரன்கள் குவித்தது.

இந்திய அணி தரப்பில் ருதுராஜ் 58 ரன்களும், யஷஸ்வி ஜெய்ஸ்வால் 53 ரன்களும், இஷான் கிஷன் 52 ரன்களும், ரிங்கு சிங் 31 ரன்களும் விளாசினர். இதையடுத்து 236 ரன்கள் என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி, 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 191 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது.

இந்திய அணி தரப்பில் ரவி பிஷ்னாய் மற்றும் பிரசித் கிருஷ்ணா இருவரும் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதனால் இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இந்த வெற்றி பற்றி கேப்டன் சூர்யகுமார் யாதவ் பேசும் போது, எங்கள் வீரர்கள் எனக்கு எந்த அழுத்தத்தையும் கொடுப்பதில்லை.

அவர்களே சூழலை அறிந்து சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள். நான் எங்களுக்கு முதல் பேட்டிங் செய்ய தயாராக இருக்குமாறு முன்பே கூறியிருந்தேன். ஏனென்றால் அதிகளவிலான பனிப்பொழிவு காணப்பட்டது. அதேபோல் நாங்கள் டிஃபெண்ட் செய்ய பணிக்கப்பட்டோம். கடந்த போட்டியில் ரிங்கு சிங் பேட்டிங் செய்ய வரும் போது, அவரின் நிதானம் என்னை பிரமிக்க வைத்தது.

- Advertisement 2-

அதனை பழைய வீரர் ஒருவரை நினைவூட்டியது. அது யார் என்று அனைவருக்கும் தெரியும் என்று கூறினார். ஃபினிஷிங் ரோலில் களமிறங்கும் ரிங்கு சிங் நேற்றைய போட்டியில் 9 பந்துகளில் 31 ரன்களை குவித்தார். அதுமட்டுமல்லாமல் 19வது ஓவரில் மட்டும் மொத்தமாக 4 பவுண்டரி, 2 சிக்சர் என்று 25 ரன்களை விளாசினார்.

கடைசி நேரத்தில் களமிறங்கி ரிங்கு சிங் இந்திய அணிக்கு வெற்றியை தேடி கொடுத்து வருவதால் ரசிகர்கள் அவரை தோனியுடன் ஒப்பிட்டு வருகின்றனர். இளம் வீரரான அவரை தோனியுடன் ஒப்பிடுவது சரியில்லை என்றாலும், முழு மன உறுதியுடன் எந்த பவுலரையும் விளாசும் திறன் கொண்டிருக்கும் அவர் ஃபினிஷிங்கில் மிக பெரிய உயரத்தில் இருப்பார் என்று பார்க்கப்படுகிறது.

சற்று முன்