- Advertisement -
Homeவிளையாட்டுஉங்க நல்லதுக்காக இப்படியா பண்ணுவீங்க.. ரிங்கு சிங்கிற்கு நடந்த அநியாயம்.. கம்பீர் திட்டத்தால் நடந்த சொதப்பல்?..

உங்க நல்லதுக்காக இப்படியா பண்ணுவீங்க.. ரிங்கு சிங்கிற்கு நடந்த அநியாயம்.. கம்பீர் திட்டத்தால் நடந்த சொதப்பல்?..

- Advertisement-

இந்தியா மற்றும் இலங்கை ஆகிய அணிகளுக்கு எதிரான முதல் டி20 போட்டி தற்போது நடந்து முடிந்துள்ளது. இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றாலும் ஒரு சில தவறுகள் பற்றி இந்திய ரசிகர்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

இந்த போட்டியில் இலங்கை அணி டாஸ் வென்று முதலில் பந்து வீச்சைத் தேர்வு செய்ய அதன்படி ஆடியிருந்த இந்திய அணி, 213 ரன்கள் எடுத்திருந்தது. அனைவருமே கிடைத்த வாய்ப்பை கச்சிதமாக பயன்படுத்திய நிலையில் நல்ல ஸ்கோரை எட்ட உதவி இருந்தது. கடைசி கட்டத்தில் சில வீரர்கள் ரன் அடிக்க முடியாமல் போனாலும் இந்திய அணி நல்ல ரன்னை எட்டி இருந்ததால் அவர்கள் மிக எளிதாக வெற்றி பெற்று இலங்கையை வீழ்த்தி விடுவார்கள் என்று தான் எதிர்பார்த்தனர்.

ஆனால் அதிக ரன்களை நோக்கி பேட்டிங்கைத் தொடங்கிய இலங்கை அணியும் இந்திய அணிக்கு சவால் கொடுக்க 14 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 140 ரன்களையும் அவர்கள் சேர்த்திருந்தனர். இதனால் கடைசி கட்டத்தில் விறுவிறுப்பு உருவாக இந்திய அணியின் பந்து வீச்சும் சிறப்பாக அமைந்திருந்தது.

இதனால் இலங்கை அணியை 170 ரன்களுக்கு ஆல் அவுட் செய்த இந்திய அணி சிறப்பாக திரும்பி வர, இந்த தொடரையும் வெற்றியுடன் ஆரம்பித்து அமர்க்களப்படுத்தி உள்ளனர். கம்பீர் பயிற்சியாளராக அதே வேளையில் புதிய கேப்டனாக சூர்யகுமார் யாதவ் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த காம்போ வெற்றிகரமான பயணத்தை இந்திய அணிக்காக தொடங்கியுள்ளது.

- Advertisement-

ஆனால் அதே வேளையில் ஒரு சில முக்கியமான முடிவுகள் இந்த போட்டியில் எடுக்கப்பட்டது தற்போது ரசிகர்கள் மத்தியில் விமர்சனத்தை சந்தித்து வருகிறது. பொதுவாக ஐந்தாவது அல்லது ஆறாவது வீரராக களமிறங்கும் ரிங்கு சிங், இந்த போட்டியில் ஏழாவது வீரராக களமிறங்கி அசத்தி இருந்தார்.

தொடர்ந்து இந்திய அணி வலது – இடது கை பேட்டிங் வரிசையை பயன்படுத்தி வந்ததால் கடைசி ஓவருக்கு முன்பு தான் அதிரடியை காட்ட வேண்டும் என்ற நேரத்தில் இரண்டாவது பந்திலேயே அவுட்டான ரிங்கு சிங் ஒரு ரன் மட்டும் தான் எடுத்திருந்தார். டி20 போட்டிகளில் சிறந்த பினிஷராக இருக்கும் ரிங்கு சிங்கை கடைசி கட்டத்தில் சில ஓவர்களுக்கு முன்பே களமிறக்கி இருந்தால் நிச்சயம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருப்பார் என்றும் ரசிகர்கள் குறிப்பிட்டு வருகின்றனர்.

உலகக் கோப்பை தொடரிலேயே ரிங்கு சிங்கிற்கான வாய்ப்பு புறக்கணிக்கப்பட்ட நிலையில் தற்போதும் லெப்ட் ரைட் பேட்டிங் காம்பினேஷனுக்காக அவர் கடைசி கட்டத்தில் களமிறங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்