ஆசிய விளையாட்டுப் போட்டிகள் தற்போது பரபரப்பாக நடந்து கொண்டிருக்கிறது. இந்த போட்டியில் ஏற்கனவே இந்தியாவிற்கு 13 தங்கப் பதக்கங்களும் 24 வெள்ளி மற்றும் 23 வெண்கல பதக்கங்களும் கிடைத்துள்ளது.
இந்த வருடம் இந்திய அணி தனது கிரிக்கெட் வீரர்களையும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் களம் இறக்கி உள்ளது. இதில் ஏற்கனவே மகளிர் இந்திய அணி தங்கம் வென்று அசத்தியது. அதனைத் தொடர்ந்து தற்போது ஆண்கள் அணியும் நிச்சயம் தங்கம் வெல்லும் என்று பெரிதும் எதிர்பார்க்க படுகிறது.
இதில் இந்தியா, இலங்கை, பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் அணிகள் நேரடியாக கால் இறுதி சுற்றுக்கு தகுதி பெற்ற நிலையில், இன்று ருதுராஜ் தலைமையிலான இந்திய அணி நேபால் அணியோடு மோதியது. இதில் முதலில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் செய்ய தீர்மானித்தது. அந்த வகையில் ஓபனிங் வீரர்களாக யாஷ்வி யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோர் களமிறங்கினர்.
இதில் ருதுராஜ் ஆரம்பம் முதலே தனது மெதுவான ஆட்டத்தை வெளிப்படுத்த, மறுமுனையில் ஜெய்ஸ்வால் அதிரடியான ஆட்டத்தை தொடர்ச்சியாக வெளிப்படுத்தி வந்தார். ஒரு கட்டத்தில் ருதுராஜ் 23 பந்துகளில் 25 ரன்கள் எடுத்து வெளியேற, அடுத்து வந்த திலக் வர்மா இரண்டு ரண்களில் ஆட்டம் இழந்தார்.
அதேபோல ஜிதேஷ் சர்மாவும் 5 ரன்களில் வெளியேற, சிவம் துபே மற்றும் ரிங்கு சிங் ஆகியோர் அடுத்தடுத்து களமிறங்கி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். சிவம் துபே 19 பந்துகளில் 25 ரன்களும், ரிங்கு சிங் 15 பந்துகளில் 37 ரன்களும் அடித்து இறுதிவரை ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.
இந்த போட்டியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 49 வது களில் நூறு ரன்கள் விலாசி டி20 போட்டியில் இளம் வயதில் சதம் அடித்த இந்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். அதேபோல் ரிங்கு சிங் ஐபிஎல்-ல் எப்படி அதிரடி காட்டினாரோ அதேபோன்ற அதிரடியை இந்த போட்டியிலும் காட்டினார். அவர் கடைசி ஓவரில் மட்டும் 4, 6, 4, 6 என விளாசி 20 ரன்கள் எடுத்தார். இந்த போட்டியில் அவர் 4 சிக்ஸர்களும் 2 பவுண்டரிகளும் அடித்தது குறிப்பிடத்தக்கது.
அடித்து களம் இறங்கிய நேபால் அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கட்டை இழந்து 179 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில், இந்திய அணி இதில் மகத்தான வெற்றியை பெற்றுள்ளது.