- Advertisement 3-
Homeவிளையாட்டு6,6,6.. 2 ஓவர்களில் ஆட்டத்தை மாற்றிய ரிங்கு சிங்.. குட்டி ரெய்னா பெயருக்கு வலுக்கும் போட்டி

6,6,6.. 2 ஓவர்களில் ஆட்டத்தை மாற்றிய ரிங்கு சிங்.. குட்டி ரெய்னா பெயருக்கு வலுக்கும் போட்டி

- Advertisement-

2022ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரிலேயே மிகப்பெரிய பெயரை சம்பாதித்திருந்தாலும், குஜராத் அணிக்கு எதிராக யாஷ் தயாள் வீசிய ஓவரில் 5 பந்தில் 5 சிக்சர்களை விளாசி மிரட்டினார் ரிங்கு சிங். அன்று முதல் ரிங்கு சிங்கின் பெயர் இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் உச்சரிக்கப்படத் தொடங்கியது. இதனால் ரிங்கு சிங் பேட்டிங் மீதான எதிர்பார்ப்பும் எக்கச்சக்கமாக எகிறியது.

அந்த எதிர்பார்ப்புக்கு ஏற்ப ரிங்கு சிங் கடந்த ஐபிஎல் சீசனில் 14 போட்டிகளில் விளையாடி 474 ரன்களை குவித்தார். பெரும்பாலான நேரங்களில் ரிங்கு சிங் களமிறங்கும் போது கேகேஆர் அணி மோசமான நிலையிலேயே இருக்கும். இருந்தும் ரிங்கு சிங் அணியை கடைசி நேரத்தில் போராடி சரியான இடத்திற்கு கொண்டு செல்வார்.

- Advertisements -

டி20 கிரிக்கெட்டை மிக எளிதாக புரிந்துகொண்ட வீரராக ரிங்கு சிங் களத்தில் செயல்பட்டார். இந்த நிலையில் ஐபிஎல் தொடரில் சிறப்பாக ஆடிய ரிங்கு சிங்கிற்கு இந்திய அணியில் இடம் கிடைத்தது. அயர்லாந்து அணிக்கு எதிரான டி20 தொடரின் முதல் போட்டிலேயே அறிமுகம் செய்யப்பட்டார். ஆனால் அந்த போட்டியில் மழை காரணமாக அவருக்கு பேட்டிங் செய்யும் வாய்ப்பு கிடைக்கவில்லை.

இந்த நிலையில் 2வது போட்டியில் ரிங்கு சிங்கிற்கு பேட்டிங் செய்யும் வாய்ப்பு கிடைத்தது. சஞ்சு சாம்சன் ஆட்டமிழந்த பின் களம் புகுந்த ரிங்கு சிங், 18 ஓவர்கள் வரை நிதானம் காட்டினார். ஆனால் 19வது ஓவரில் 2 சிக்சர்கள் மற்றும் 1 ஒரு பவுண்டரியை விளாசினார். பின்னர் 20வது ஓவரிலும் மீண்டும் ஒரு அசத்தலான சிக்சரை விளாசினார்.

- Advertisement-

இதன் மூலம் 21 பந்துகளில் 3 சிக்சர் மற்றும் 2 பவுண்டரி என்று 38 ரன்களை விளாசினார். கடைசி நேரத்தில் ரிங்கு சிங் ஆடிய அதிரடி ஆட்டமே இந்திய அணி 185 ரன்கள குவிக்க காரணமாக அமைந்தது. இந்த நிலையில் பேட்டிங் செய்த முதல் இன்னிங்ஸிலேயே ஆட்டநாயகன் விருதை அசத்தியுள்ளார் ரிங்கு சிங்.

இதனால் பல்வேறு தரப்பினரும் ரிங்கு சிங்கை பாராட்டி வருகின்றனர். இந்திய டி20 அணிக்கான நம்பர் 5 பேட்ஸ்மேன் கிடைத்துவிட்டார் என்று ரசிகர்களும் சமூக வலைதளங்களில் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். ரிங்கு சிங்கின் எழுச்சி, இந்திய அணியின் மிடில் ஆர்டரில் மிகப்பெரிய நம்பிக்கையை ரசிகர்களிடையே ஏற்படுத்தியுள்ளது.

சற்று முன்