- Advertisement -
Homeகிரிக்கெட்சிஎஸ்கேவுக்கு எதிரா ப்ரித்வி ஷாவை வெச்சு போட்ட ஸ்கெட்ச்.. டெல்லி போட்ட மாஸ்டர் பிளான் இதான்.....

சிஎஸ்கேவுக்கு எதிரா ப்ரித்வி ஷாவை வெச்சு போட்ட ஸ்கெட்ச்.. டெல்லி போட்ட மாஸ்டர் பிளான் இதான்.. ரிஷப் பந்த் வெளிப்படை..

-Advertisement-

கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பாக கார் விபத்து ஒன்றில் சிக்கி இருந்த ரிஷப் பந்த், நீண்ட நாட்களுக்கு பிறகு தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் தான் கம்பேக் கொடுத்திருந்தார். ஐபிஎல் தொடரில் ஆடுவாரா என்ற சந்தேகம் இருந்த நிலையில் தொடர்ந்து கடினமாக பயிற்சி மேற்கொண்டு அவர் கிரிக்கெட் ஆடத் தேர்வானது மட்டும் இல்லாமல் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் கேப்டனாக மீண்டும் அவர் களமிறங்குவார் என்ற தகவலும் வெளியாகி இருந்ததால் டெல்லி அணியின் ரசிகர்களும் உற்சாகமகினர்.

ஆனால் ரிஷப் பந்த் தலைமையில் டெல்லி ஆடிய முதல் இரண்டு போட்டிகளில் பரிதாபமாக தோல்வி அடைந்திருந்தனர். இன்னொரு பக்கம் ரிஷப் பந்த் பேட்டிங் பெரிதாக எடுபடவில்லை. நீண்ட நாட்கள் கழித்து கிரிக்கெட் ஆடியதால் விரைவில் அவர் நல்ல ஃபார்முக்கு திரும்பிடுவார் என்றும் ரசிகர்கள் அவரை விமர்சனம் செய்யாமல் தொடர்ந்து ஆதரவு அளித்து வந்தனர்.

அப்படி ஒரு சூழலில் தான், சென்னை அணிக்கு எதிராக டெல்லி மோதிய மூன்றாவது போட்டியில் அரைச்சதம் அடித்து பட்டையை கிளப்பி இருந்தார் ரிஷப் பந்த். மேலும் இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 191 ரன்கள் எடுக்க தொடர்ந்து ஆடிய சென்னை அணியால் டெல்லி அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியவில்லை. ருத்துராஜ் மற்றும் ரச்சின் ரவீந்திரா ஆகியோர் சொற்ப ரன்களில் அவுட் ஆக மிட்செல் மற்றும் ரஹானே ஆகியோர் ஆறுதலான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தனர்.

ஆனால் அவர்கள் அவுட்டான பின்னர் ஜடேஜா மற்றும் ஷிவம் துபே ஆகியோர் ரன் எடுக்க சிரமப்பட, கடைசி கட்டத்தில் வந்த தோனி இந்தத் தொடரில் பேட்டிங் இறங்கிய முதல் போட்டியிலேயே அமர்க்களம் செய்திருந்தார். சிஎஸ்கே அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்த போதிலும் தொடர்ந்து தோனியின் பேட்டிங்கை தான் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

-Advertisement-

இந்த நிலையில் முதல் வெற்றிக்குப் பின் பேசியிருந்த டெல்லி கேப்டன் ரிஷப் பந்த், “எங்கள் அணியின் பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர். நாங்கள் தவறுகளில் இருந்து நிறைய விஷயங்களை கற்றுக் கொள்ள வேண்டும் என்பதை பற்றி பேசி இருந்தோம். பிரித்வி ஷா தொடர்ந்து கடினமாக உழைத்து வருகிறார். அதனால் அவருக்கு இதுதான் வாய்ப்பு கொடுப்பதற்கு சரியான நேரம் என நாங்களும் நினைத்து முடிவு எடுத்தோம்.

பந்து வீச்சாளர் முகேஷ் குமார் எங்கள் அணிக்காக டெத் ஓவர்களில் சிறப்பாக செயல்படுகிறார். நான் சமீப காலமாக கிரிக்கெட் போட்டியில் விளையாடாமல் இருந்ததால் எனக்கான ஆட்டத்திற்காக நான் நேரம் எடுத்துக் கொண்டேன். ஒரு கிரிக்கெட் வீரராக நான் எனது 100 சதவீதத்தை கொடுக்க வேண்டும். ஆனால் என்னால் போட்டியை மாற்ற முடியும் என்பதிலும் நான் நம்பிக்கையுடன் இருந்தேன்.

ஒன்றரை ஆண்டுகளாக எனது பேட்டிங்கில் நான் இறங்காமல் இருந்து வந்ததால் இன்னும் கிரிக்கெட் வீரராக நிறைய விஷயங்களை கற்றுக் கொள்ள உள்ளேன்” என ரிஷப் பந்த் கூறியுள்ளார்.

-Advertisement-

சற்று முன்