- Advertisement 3-
Homeவிளையாட்டுகொண்டாடிய இந்திய வீரர்களுக்கு மத்தியில்.. சைலண்டாக ரசிகர்கள் மனதை வென்ற ரிஷப் பந்த்..

கொண்டாடிய இந்திய வீரர்களுக்கு மத்தியில்.. சைலண்டாக ரசிகர்கள் மனதை வென்ற ரிஷப் பந்த்..

- Advertisement 1-

17 ஆண்டுகளுக்கு பிறகு டி20 உலக கோப்பை தொடரை இந்திய அணி கைப்பற்றினாலும் ஒரு சில விஷயங்கள் தொடர்ந்து சொதப்பலாகவே தான் இருந்து வந்தது. பந்து வீச்சை பொறுத்த வரையில் இந்திய அணி மொத்தமாக எட்டு போட்டிகளிலும் ஃபுல் மார்க் வாங்கி இருந்தாலும் பேட்டிங்கை பொறுத்த வரையில் சில தடுமாற்றங்கள் இறுதி போட்டிக்கு வரைக்குமே இருந்தது.

சூர்யகுமார் யாதவ் அரையிறுதி போட்டியில் சிறப்பாக பேட்டிங் செய்த நிலையில் இறுதி போட்டியில் தேவையில்லாத ஷாட் அடித்து அதுவும் இந்திய அணி விக்கெட் இழந்து தடுமாறி கொண்டிருந்த போது வந்த வேகத்தில் நடையை கட்டியிருந்தார். இறுதிப் போட்டி என்ற ஒரு சுயநினைவு இல்லாதது போல் அவரது பேட்டிங் அமைந்திருந்த நிலையில் கடுமையான விமர்சனங்களும் அவரை சுற்றி உருவாகி இருந்தது.

ஆனால், சூர்யகுமார் யாதவ் கடைசி ஓவரில் பிடித்த கேட்ச் தான் தென் ஆப்பிரிக்க அணி தோல்வி அடைவதற்கு முக்கிய காரணமாக இருந்தது. மிக ரிஸ்க்கான கேட்சை மிக அசால்டாக எடுத்ததும் அதுவரை விமர்சித்த அனைவருமே பாராட்ட தொடங்கியதுடன் இந்த ஒரு கேட்ச் உங்களை பல ஆண்டுகளுக்கு ரசிகர்கள் மத்தியில் நிலைத்து நிற்க வைக்கும் என்றும் கூட குறிப்பிட்டு இருந்தனர்.

ஏறக்குறைய சூர்யகுமார் யாதவை போல தான் பேட்டிங்கில் பெரிய அளவில் விமர்சனங்களையும் எதிர்ப்பையும் சம்பாதித்தார் ரிஷப் பந்த். அதாவது ஆரம்பத்தில் லீக் போட்டிகளில் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி இருந்த ரிஷப் பந்த், மூன்றாவது வீரராக உள்ளே வந்தாலும் முதல் பந்தில் இருந்து தேவையில்லாத ஷாட்டை அடித்து ஆடுவது போல தான் இருந்தது.

- Advertisement 2-

இதனால் அவரது மைனஸ் என்ன என்பதை எதிரணி பந்து வீச்சாளர்கள் எளிதாக கண்டுபிடித்ததால் பெரிய அளவில் ரிஷப் பந்த்தால் பேட்டிங்கில் தாக்கத்தை ஏற்படுத்த முடியாமல் போனது. அரை இறுதியில் 4 ரன்களில் அவுட்டான அவர், இறுதிப் போட்டியில் இரண்டாவது பந்திலேயே தேவை இல்லாமல் பந்துகளை வித்தியாசமாக அடிக்க நினைத்து டக் அவுட்டாகி இருந்தார்.

இக்கட்டான சூழலில் இருந்த போதிலும் பேட்டிங் எப்படி ஆடுவது என்பது என்று தெரியாமல் ஆடி வந்தது போன்று அவரது ஆட்டம் அமைந்திருந்ததாக ரசிகர்கள் சுட்டிக்காட்டி விமர்சனம் செய்தனர். அப்படி ஒரு சூழலில் இறுதி போட்டியில் இந்திய அணி கோப்பையை வென்ற பின்னர் ரிஷப் பந்த செயல் ஒன்று அனைவரையும் மனமுருக வைத்துள்ளது.

இந்திய அணி வீரர்கள் கோப்பையை கைப்பற்றியதும் ஆனந்த கண்ணீர் வடித்து அதனை பெரிதாக கொண்டாடிக் கொண்டிருக்க, இன்னொரு பக்கம் தென்னாபிரிக்க அணி முதல் முறையாக உலக கோப்பையை வெல்லும் எளிதான வாய்ப்பை இழந்ததால் மனம் உடைந்து போயிருந்தனர். அப்படி இருந்த வீரர்கள் அனைவருக்கும் அருகே சென்ற ரிஷப் பந்த், அவர்களை தேற்றி இருந்ததுடன் மட்டும் இல்லாமல் வார்த்தைகளை கூறி ஆறுதலையும் கொடுத்திருந்தார்.

பேட்டிங்கில் கோட்டை விட்டாலும் இது போன்ற சம்பவங்களால் ரசிகர்களின் மனதையும் ரிஷப் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்