- Advertisement -

பேட்டிங்ல சொதப்பியும் இந்தியா உலக கோப்பை வெல்ல காரணமா இருந்த ரிஷப் பந்த் செயல்.. இத நோட் பண்ணலயே..

இந்திய கிரிக்கெட் அணியின் பந்து வீச்சாளர்களே இந்த முறை டி20 உலக கோப்பை வெல்வதற்கு பெரிய பங்கு வகித்திருந்தார்கள் என்பது தான் நிதர்சனமான உண்மை. கோலி, ரோஹித், சூர்யகுமார், ரிஷப் பந்த், ஷிவம் துபே என அதிரடி பேட்ஸ்மேன்கள் பலர் இருந்தாலும் அவர்கள் தொடர்ச்சியாக நல்ல பங்களிப்பை அளிக்காமல் இருந்தனர். ஒரு வீரர் ஒரு போட்டியில் ஆடும்போது மற்றொரு வீரர் அடுத்தடுத்த போட்டிகள் ஆடுவது தான் இந்திய அணியின் பேட்டிங் லைன் அப் வழக்கமாக இருந்தது.

ஆனால் ஒரு போட்டியில் கூட இந்திய அணியின் பந்து வீச்சாளர்கள் அவர்களின் ரசிகர்களை தளர விடாமல் மிகச் சிறப்பாக பந்து வீசி அசத்தி இருந்தனர். பும்ரா, அர்ஷ்தீப் சிங், ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல், குல்தீப் யாதவ் என அனைவருமே பந்து வீச்சு வேரியேஷன்களை காட்ட, அது இறுதிப்போட்டி வரைக்கும் அவர்களுக்கு கை கொடுத்திருந்தது.

- Advertisement -

இதனால் இந்திய அணியை எதிர்த்து எந்த அணியினாலும் வெற்றி பெற முடியாமல், அவர்களை அசைத்து பார்க்க கூட முடியாமல் இருந்து வந்ததும் குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு விபத்தில் சிக்கி தற்போது மீண்டும் இந்திய அணிக்குள் இணைந்திருந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பந்த் இந்த முறை பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் லீக் போட்டி ஆரம்பத்தில் சிறந்த பேட்டிங்கை வெளிப்படுத்தி இருந்தாலும் சூப்பர் 8 மற்றும் நாக் அவுட் போட்டிகளில் நல்ல பங்களிப்பை அளிக்கத் தவறி விட்டார் என்றே சொல்லலாம். அதிலும் இறுதிப் போட்டியில் ரோஹித் ஷர்மா முதலில் அவுட் ஆகி இக்கட்டான நிலையில் இந்திய அணி இருந்த போது பொறுப்பை உணராமல் அதிரடியாக ஆட நினைத்து இரண்டாவது பந்திலேயே டக் அவுட்டாகி ஏமாற்றம் அளித்திருந்தார்.

- Advertisement -

இறுதிப் போட்டியில் இப்படியா பொறுப்பில்லாமல் ஆடுவது என ரிஷப் பந்த்தை அதிகம் பேர் விமர்சனம் செய்திருந்தனர். ஆனால் அதே வேளையில் இந்த போட்டியின் திருப்புமுனையாக இருந்தது ரிஷப் பந்தின் செயல் தான் என பலரும் குறிப்பிட்டு வருகின்றனர். கடைசி 4 ஓவர்களில் 26 ரன்கள் தென் ஆப்பிரிக்க அணியின் வெற்றிக்கு தேவைப்பட்ட போது 6 விக்கெட்டுகள் கைவசம் இருந்தது. அந்த சமயத்தில் தனது முழங்காலில் ஏதோ காயமாக கூறி பிசியோவை ரிஷப் பந்த் மைதானத்தில் வரவழைக்க, ஒரு சில நிமிடம் போட்டி தாமதமானது.

இதனால், அதிரடியாக ஆடிக் கொண்டிருந்த தென்னாபிரிக்க அணியின் வேகமும் இந்த இடைவேளையால் குறைந்து போனது. பின்னர் தொடர்ந்து ஆடி இருந்த தென்னாபிரிக்க அணி, அடுத்த பந்திலேயே கிளாசன் விக்கெட்டை இழக்க, ஹர்திக் பாண்டியா போட்டியில் திருப்புமுனையை ஏற்படுத்தியிருந்தார். இதிலிருந்து பின்னர் மீள முடியாமல் தான் தெனாப்பிரிக்க அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

Recent Posts