- Advertisement -
Homeவிளையாட்டுதிடீரென மாறிய விராட் கோலி முகம்.. மறுகணமே கட்டியணைத்து மன்னிப்பு கேட்ட ரிஷப் பந்த்.. சிரிச்சே...

திடீரென மாறிய விராட் கோலி முகம்.. மறுகணமே கட்டியணைத்து மன்னிப்பு கேட்ட ரிஷப் பந்த்.. சிரிச்சே சமாளிச்சுட்டாருயா..

- Advertisement-

வங்கதேச அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற நெருக்கடிக்கு மத்தியில் நான்காவது நாளில் அவர்கள் ஆடிய ஆட்டம் இன்னும் பல நாட்களுக்கு டெஸ்ட் அரங்கில் நினைவில் நிற்க போகிறது. அந்த அளவுக்கு வந்தவர், போனவர்கள் என அனைத்து இந்திய பேட்ஸ்மேன்களும் அதிரடி ஆட்டத்தை கையில் எடுத்ததால் இந்திய அணி மிக எளிதாக குறைந்த ஓவர்களிலேயே நினைத்ததை விட அதிக ரன்களை சேர்த்ததுடன் வங்கதேச அணிக்கு நெருக்கடியையும் கொடுத்துள்ளது.

முதல் இன்னிங்ஸில் வங்கதேச அணி 233 ரன்களுக்கு ஆல் அவுட்டாக, தொடர்ந்து தங்களின் பேட்டிங்கை தொடங்கியிருந்த இந்திய அணி ஆரம்பத்திலிருந்து அதிரடி ஆட்டத்தை கையில் எடுத்திருந்தது. முதல் மூன்று ஓவர்களில் 50 ரன்களை கடந்த இந்திய அணி, புதிய சாதனையை உருவாக்கியதுடன் நிறுத்திக் கொள்ளாமல் தங்களின் பேட்டிங் முடிவது வரைக்கும் அதே ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தது.

- Advertisement -

34.4 ஓவர்களில் 284 ரன்கள் சேர்த்த இந்திய அணி தங்களின் இன்னிங்சையும் டிக்ளேர் செய்திருந்தது. நினைத்ததை விட கிட்டத்தட்ட ஒரு செஷனில் இந்திய அணி தங்களின் பேட்டிங்கை முடித்து வங்கதேச அணியை விட அதிக ரன்கள் அடித்துள்ளதால் இந்த டெஸ்டில் மிகப்பெரிய ஒரு திருப்புமுனை தற்போது உருவாகியுள்ளது.

வங்கதேச அணியும் இரண்டு விக்கெட்டுகளை இழந்துள்ள சூழலில், கோலி மற்றும் ரிஷப் பந்த் ஆகியோர் இணைந்து பேட்டிங் செய்த போது நடந்த ஒரு சம்பவம் மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகிறது. முதல் டெஸ்டில் ரன் சேர்க்கவே தடுமாறிய விராட் கோலி, இந்த போட்டியில் 34 பந்துகளில் 47 ரன்கள் எடுத்திருந்தார்.

- Advertisement-

ஆனால் அதற்கு முன்பாகவே ரிஷப் பந்த் காரணமாக விராட் கோலி அவுட்டாகும் நிலை உருவாகியிருந்தது. விராட் கோலி அடித்த பந்து அவருக்கு அருகில் செல்ல மறுபுறம் நின்ற பந்த் வேகமாக ரன் ஓட முயன்றார். இதனால் கோலியும் முன்னோக்கி வேகமாக ஓட, திடீரென பந்த் நின்றதும் மீண்டும் கிரீசுக்கு செல்ல விராட் கோலி முனைந்தார்.

ஆனால் அதற்குள் வங்கதேச பந்துவீச்சாளர் வேகமாக ஓடி வந்து மிக எளிதாக ரன் அவுட் செய்யும் வாய்ப்பை பெற்றிருந்தாலும் பந்தை த்ரோ செய்து அதனை இழந்திருந்தார். ஸ்டம்புக்கு மிக அருகில் இருந்தும் அவரால் ரன் அவுட் செய்ய முடியாமல் போனது கோலிக்கு அதிர்ஷ்டமாக மாறி இருந்தது.

இப்படியும் ஒரு வாய்ப்பை மிஸ் செய்வாரா என வங்கதேச பந்துவீச்சாளரை விமர்சனம் செய்து வரும் அதே வேளையில் பந்த்தின் முடிவை பார்த்து விராட் கோலி அதிருப்தியுடன் நின்றார். ஆனால், மறுகணமே கோலி அருகே வந்த ரிஷப் பந்த், சிரித்துக் கொண்டே வர அதை பார்த்து கோலியும் சிரிக்க இருவரும் கட்டி தழுவி கொண்டனர்.

சற்று முன்