- Advertisement -
Homeவிளையாட்டுடிராவிட் மாதிரி வர முடியாது.. கம்பீர் அதுல ரொம்ப பிடிவாதம்.. வெளிப்படையாக பேசிய ரிஷப் பந்த்..

டிராவிட் மாதிரி வர முடியாது.. கம்பீர் அதுல ரொம்ப பிடிவாதம்.. வெளிப்படையாக பேசிய ரிஷப் பந்த்..

- Advertisement-

இந்திய அணியில் கடந்த 3 ஆண்டுகள் வெற்றிகரமான பயிற்சியாளராக செயல்பட்டு வந்த ராகுல் டிராவிட் இருந்த போது ஒரு டி20 உலக கோப்பையை சொந்தமாக்கி இருந்தது. டி20 உலக கோப்பை தொடருடன் ராகுல் டிராவிட் பதவிக்காலமும் முடிய இலங்கை அணிக்கு எதிரான தொடர் முதல் இந்திய அணியின் பயிற்சியாளராக கவுதம் கம்பீர் செயல்பட்டு வருகிறார்.

இதில் முதலாவதாக நடந்த டி20 தொடரை இந்திய அணி அபாரமாக வென்றிருந்தாலும் அடுத்து நடந்த ஒரு நாள் தொடரை அவர்களால் வெல்ல முடியவில்லை. இதில் கம்பீரின் பயிற்சி தொடர்பாகவும் நிறைய விமர்சனங்கள் உருவாகியுள்ள நிலையில் தற்போது ஒரு மாதமாக இந்திய அணி எந்த கிரிக்கெட் போட்டிகளிலும் ஆடாமல் இருந்து வருகிறது.

இதனைத் தொடர்ந்து பங்களாதேஷ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரும் செப்டம்பர் மாதம் 19 ஆம் தேதி ஆரம்பமாக உள்ளது. அதிலிருந்து இந்திய அணிக்கு சிறிய இடைவெளியில் கிரிக்கெட் தொடர்கள் நடைபெற இருக்கும் சூழலில், நிச்சயம் கம்பீர் தன் மீதான விமர்சனங்களை உடைத்தெறிந்து இந்திய அணியை சிறப்பாக தயார் செய்வார் என தெரிகிறது.

மேலும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணி முன்னேறுவதற்கும் அடுத்தடுத்து நிறைய டெஸ்ட் தொடர்கள் இருப்பதால் அவர்களுக்கு மிகப்பெரிய ஒரு பலப்பரீட்சை காத்திருக்கிறது என்றே சொல்லலாம். இதனிடையே இந்திய அணியின் முன்னணி விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பந்த், புதிய பயிற்சியாளரான கம்பீர் குறித்து தற்போது சில கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

- Advertisement-

இது பற்றி சமீபத்தில் ரிஷப் பந்த் கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒன்றில் கம்பீர் புதிய பயிற்சியாளராக மாறியதற்கு பின்னர் இந்திய அணியில் நடந்த மாற்றங்கள் என்ன என்ற கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதில் தெரிவித்த ரிஷப் பந்த், “ராகுல் டிராவிட் ஒரு மனிதராகவும், ஒரு பயிற்சியாளராகவும் சமநிலையில் இருப்பார். அதில் நல்ல விஷயங்களும், கெட்ட விஷயங்களும் உள்ளது.

ஏனென்றால் கிரிக்கெட்டில் நிறைய பாசிட்டிவான விஷயங்கள் உள்ளன. இதில் அவர் எந்த விஷயத்தில் கவனம் செலுத்துவார் என்பதை பொறுத்து நன்மையும், தீமையும் இருக்கும். ஆனால் கவுதம் கம்பீர் சற்று ஆக்ரோஷமான ஒருவர். அவர் எப்போதும் நீங்கள் வெற்றி பெற வேண்டுமென ஒரு பக்கமாக தான் இருப்பார்.

இதனால் நீங்கள் சரியான சமநிலையில் இருந்து அதில் மேம்படுவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். இது தான் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளின் ஒரு பகுதி” என ரிஷப் பந்த் தெரிவித்துள்ளார்.

சற்று முன்