- Advertisement 3-
Homeவிளையாட்டுராகுலுக்கு விழுந்த மாதிரி எனக்கு டெய்லி திட்டு விழும், ஆனா... கே எல் ராகுல் -...

ராகுலுக்கு விழுந்த மாதிரி எனக்கு டெய்லி திட்டு விழும், ஆனா… கே எல் ராகுல் – சஞ்சீவ் விஷயத்தில் ரிஷப் சொன்ன பதில்..

- Advertisement 1-

டி 20 லீக் போட்டிகளின் வரலாற்றிலேயே மிகச் சிறந்த ஒரு தொடர் என்னவென்றால் நிச்சயம் பலரும் ஐபிஎல்லை தான் தேர்வு செய்வார்கள். இந்திய வீரர்கள் தொடங்கி மற்ற அனைத்து நாட்டில் உள்ள வீரர்களும் இந்த தொடரில் பங்கெடுத்து பட்டையை கிளப்புவதால் நிச்சயம் அனைவரையும் கவரும் வகையில் அமைந்திருக்கும்.

ஓவருக்கு சிக்ஸர்கள் மற்றும் ஃபோர்களை பறக்க விடுவதை ஐபிஎல் தொடரில் ஆடும் வீரர்கள் வழக்கமாக கொண்டுள்ள நிலையில், இந்த சீசனில் ஏராளமான சாதனைகளும் அடித்து நொறுக்கப்பட்டு இருந்தது. இந்திய வீரர்கள் வெவ்வேறு அணியில் ஆடுவதன் காரணமாக ரசிகர்களுக்கும் இது ஒரு மிகப் பொழுதுபோக்கான டி 20 தொடராக இருக்கும்.

அப்படி ஒரு சூழலில் இதில் ஆடும் அணிகள் தோல்வி அடைந்தாலும் அவர்களின் உரிமையாளர்கள் பெரிதாக எதற்காகவும் அலட்டிக் கொள்ள மாட்டார்கள். இதனைத் தாண்டி டிரெஸ்ஸிங் ரூமில் ஏதாவது குறைகளை அவர்கள் தெரிவித்தாலும், பொதுவெளியில் தங்கள் அணியில் உள்ள கேப்டன் அல்லது வீரர்களிடம் விமர்சனங்களையோ அல்லது கோபமாகவோ கடிந்து கொள்ள மாட்டார்கள்.

ஆனால் கடந்த ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி மிக மோசமாக ஒரு போட்டியில் ஹைதராபாத் அணிக்கு எதிராக தோல்வி அடைந்திருந்த சமயத்தில் அந்த அணியின் கேப்டன் கே எல் ராகுலிடம், உரிமையாளர் சஞ்சீவ் கோயின்கா பேசியிருந்த விஷயங்கள் பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.

- Advertisement 2-

பவுண்டரி லைனுக்கு அருகே கே எல் ராகுலிடம் கோபமாக வார்த்தைகளை விட்டு திட்டிக் கொண்டிருந்தார் சஞ்சீவ் கோயின்கா. அதுமட்டுமில்லாமல் கே எல் ராகுல் ஏதோ பெரிய தவறு செய்தது போல அவர் சொன்னதையும் ஏற்காமல் சஞ்சீவ் மறுத்து பேசியது அந்த வீடியோ மூலம் தெரிய வந்தது. மேலும் இதனை பார்த்த ரசிகர்கள் கடும் கொந்தளிப்புக்கும் ஆளானார்கள். இதனால் சஞ்சீவ் கோயின்காவின் நடவடிக்கையும் பெரிய அளவில் எதிர்ப்புகளை சம்பாதித்த.

அப்படி ஒரு சூழலில் தான் இது பற்றி இந்திய வீரர் ரிஷப் பந்த் தற்போது சில கருத்துக்களை தெரிவித்துள்ளார். “உண்மையில் அந்த நேரத்தில் என்ன நடந்தது என்பது எனக்கு புரியவில்லை. ஆனால் அதை பார்க்கும்போது ஏதோ சண்டை நடந்தது போல் தான் எனக்கு தோன்றியது. அதில் தெளிவாக என்ன நடந்தது என்பது தெரியவில்லை என்றாலும் உண்மையில் ஏதோ ஒரு பிரச்சனை வெடித்துள்ளது.

ஒரு போட்டியில் நாம் தோல்வியடையும் சமயத்தில் நிறைய விஷயங்கள் வெளிப்படையாக பேசப்படும். வீடியோவை அந்த சமயத்திலேயே நான் பார்த்திருந்தால் உங்களுக்கு அது பற்றி இன்னும் அதிகமாக பதில் தெரிவித்திருப்பேன். அந்த சம்பவத்தை போல நானும் தினந்தோறும் திட்டு வாங்கிக் கொண்டுதான் இருக்கிறேன். நான் ரொம்ப பிடிவாதமானவன்” என ரிஷப் பந்த் கூறியுள்ளார்.

சற்று முன்