- Advertisement -
Homeவிளையாட்டுரொம்ப வாய் பேசி 2 ரன்னில் அவுட்டான ரியான் பராக்.. ஆனாலும் முதல் இந்திய வீரராக...

ரொம்ப வாய் பேசி 2 ரன்னில் அவுட்டான ரியான் பராக்.. ஆனாலும் முதல் இந்திய வீரராக படைத்த சரித்திர சம்பவம்..

- Advertisement-

இந்திய கிரிக்கெட் அணி டி20 உலக கோப்பையை வென்ற கொண்டாட்டத்திலேயே கடந்த பத்து நாட்களாக இருந்து வந்த சூழலில் இந்திய ரசிகர்களை சிறிதாக பாதித்துள்ளது ஒரு முக்கியமான தோல்வி. இந்திய அணி டி20 உலக கோப்பையை வென்ற அடுத்த பத்து தினங்களுக்குள் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரும் அறிவிக்கப்பட்டு இருந்தது.

உலக கோப்பையில் ஆடிய பல வீரர்களுக்கு இந்த தொடரில் வாய்ப்பு அறிவிக்கப்பட்டிருந்ததால் சுப்மன் கில் தலைமையில் வாஷிங்டன் சுந்தர், ருத்துராஜ் கெய்க்வாட், அபிஷேக் ஷர்மா ரியன் பராக், துருவ் ஜூரேல் என சமீபத்திய டி20 தொடர்களில் கலக்கிய அதிகம் வீரர்கள் தான் இடம் பிடித்திருந்தனர்.

அதிலும் ராஜஸ்தான் அணிக்காக இந்த ஐபிஎல் தொடரில் மிக முக்கியமான பங்களிப்பை பேட்டிங்கில் அளித்த ரியான் பராக், ஜிம்பாப்வேவுக்கு எதிரான இந்த டி20 தொடரில் இடம் பெற்றிருந்தது பெரிய அளவில் பேசு பொருளாக மாறி இருந்தது.

இதற்கு மிக முக்கிய காரணம் உலகக்கோப்பை தொடரை குறித்து அவர் தெரிவித்திருந்த சில கருத்துக்கள் தான். டி20 உலக கோப்பை அணியில் அவர் இடம் பெறுவார் என கருதப்பட்டு வந்த நிலையில் அவருக்கான வாய்ப்பு உடனடியாக கிடைத்துவிடவில்லை. இதனிடையே உலகக் கோப்பைத் தொடர் நடந்து கொண்டிருந்த சமயத்தில் பேசியிருந்த ரியன் பராக், தான் இடம்பெறவில்லை என்பதால் டி20 உலக கோப்பை போட்டிகளை பார்க்க மாட்டேன் என்றும் இறுதிப்போட்டியில் ஏதாவது அணிகள் முன்னேறினால் அப்போது அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கலாம் என்றும் சர்ச்சையான கருத்துகளை தெரிவித்து இருந்தார்.

- Advertisement-

ஒரு இந்திய வீரராக இருந்து கொண்டு இந்திய அணி ஆடும் போட்டிகளை பார்க்க மாட்டேன் என அவர் கூறியது கிரிக்கெட் பிரபலங்கள் மத்தியிலேயே சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இதற்கு மத்தியில் ஜிம்பாவே தொடரிலும் அவர் இடம்பிடிக்க நிச்சயம் பேட்டிங்கில கலக்குவார் என்று தான் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சர்வதேச டி20 போட்டியில் தனக்கு கிடைத்த முதல் வாய்ப்பே சரியாக பயன்படுத்த தவறிட்டார் ரியன் பராக். இரண்டு ரன்கள் மட்டுமே எடுத்திருந்த அவர் சத்தாரா பந்துவீச்சில் அவுட்டாகி இருந்தார்.

இந்த பேட்டிங்கிற்காகவா இப்படி வாய் பேச வேண்டும் என்றும் ரசிகர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர். ஆனால் அதே வேளையில் இந்திய கிரிக்கெட்டிலேயே மிக முக்கியமான ஒரு சரித்திரத்தையும் ரியான் பராக் தற்போது படைத்துள்ளார். அதாவது அசாம் மாநிலத்தில் இருந்து முதல் முறையாக ஒரு வீரர் இந்திய அணிக்காக ஆடி உள்ளார் என்ற பெருமை தான் அது.

சர்வதேச போட்டிகளில் மட்டுமில்லாமல் இதற்கு முன்பாக கடந்த 2018 ஆம் ஆண்டு நடந்த U 19 உலக கோப்பை அணியிலும் ரியான் பராக் இடம் பிடித்திருந்தார். அப்போதும் அசாம் மாநிலத்தில் இருந்து U 19 உலக கோப்பையில் இடம் பிடித்த முதல் வீரர் என்ற பெருமையையும் அவர் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்