- Advertisement 3-
Homeவிளையாட்டுநானே டீம்ல இல்ல.. அப்புறம் எதுக்கு வேர்ல்டு கப்.. இந்த வயசுலயே திமிர் பேச்சு.. ரசிகர்கள்...

நானே டீம்ல இல்ல.. அப்புறம் எதுக்கு வேர்ல்டு கப்.. இந்த வயசுலயே திமிர் பேச்சு.. ரசிகர்கள் கோபத்துக்கு ஆளான ரியான்..

- Advertisement 1-

டி 20 உலக கோப்பை போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இந்திய கிரிக்கெட் அணி தங்களின் முதல் லீக் போட்டியில் அயர்லாந்தை ஜூன் 5 ஆம் தேதியன்று சந்திக்கிறது. முன்னதாக, கனடா, அமெரிக்கா, பப்புவா நியூ கினியா, நமீபியா உள்ளிட்ட சிறிய அணிகள் மோதிய போட்டிகள் தான் பெரும்பாலும் நடைபெற்றிருந்தது.

ஆனாலும் இவர்கள் மோதிய அனைத்து போட்டிகளுமே பலம் வாய்ந்த அணிகள் மோதிய உணர்வை தான் கொடுத்திருந்தது. அதிலும் நமீபியா மற்றும் ஓமன் ஆகிய அணிகள் மோதி இருந்த போட்டி, கடைசி பந்து வரை விறுவிறுப்பாக செல்ல, சூப்பர் ஓவரும் நடைபெற்றிருந்தது. இதே போல, இரண்டு முறை டி 20 உலக கோப்பையை வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக ஆடி இருந்த பப்புவா நியூ கினியா அணி குறைந்த ஸ்கோரை இலக்காக நிர்ணயித்த போதும் எளிதாக அவர்களை வெல்லவிடவில்லை.

முடிந்தவரையில் போட்டி கொடுத்து சண்டை போட்ட பப்புவா நியூ கினியா, கடைசி கட்டத்தில் தான் தோல்வி அடைந்திருந்தது. இப்படி சிறிய சிறிய அணிகள் கூட டி 20 உலக கோப்பையில் எதிரணியினருக்கு பயம் காட்டி வருவதால் லீக் போட்டிகள் அனைத்தும் விறுவிறுப்பாக செல்லும் என்று தான் தெரிகிறது.

ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள இந்தியா அணி, பாகிஸ்தானை தவிர சந்திக்கும் அணிகள் அனைத்தும் சிறிய அணிகள் தான். ஆனால், அமெரிக்கா, கனடா உள்ளிட்ட அணிகள் முதல் போட்டியில் அடித்த ரன்கள் உள்ளிட்ட விஷயங்கள் நிச்சயம் ரோஹித் அண்ட் கோவிற்கு குடைச்சலை கொடுக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement 2-

அப்படி இருக்கையில், இளம் இந்திய வீரரான ரியான் பராக், டி 20 உலக கோப்பையை பற்றி தெரிவித்த கருத்து தற்போது அதிகம் வைரலாகி வருகிறது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக ஐபிஎல் தொடரில் சிறப்பாக ஆடி 500 ரன்களுக்கு மேல் அடித்திருந்த ரியான் பராக், டி 20 உலக கோப்பைத் தொடரில் நிச்சயம் தேர்வாவார் என்று தான் எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் சஞ்சு சாம்சன், ஷிவம் துபே உள்ளிட்ட பலரும் முந்திக் கொள்ள ரிங்கு சிங், ரியான் பராக் ஆகியோருக்கான வாய்ப்பும் மறுக்கப்பட்டிருந்தது. இதனிடையே, சமீபத்தில் எந்த 4 அணிகள் அரையிறுதி போகும் என்ற கேள்விக்கு பதில் பேசி இருந்த ரியான் பராக், “இந்த 4 அணிகளை கணித்தால் நான் ஒரு தலைப்பட்சமாக பதில் சொல்ல வேண்டும். ஆனால் உண்மையை சொல்ல வேண்டுமென்றால் டி 20 உலக கோப்பையை பார்க்க எனக்கு விருப்பமே இல்லை.

கடைசியில் யார் ஜெயிக்க போகிறார்கள் என்பதை பார்த்து நான் மகிழ்ச்சி அடைவேன். நான் உலக கோப்பை ஆடும் போது டாப் 4 அணிகள் எவை என்பது பற்றி பேசுகிறேன்” என ரியான் பராக் கூறியது இந்திய ரசிகர்கள் மத்தியிலேயே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

சற்று முன்