- Advertisement 3-
Homeவிளையாட்டு4வது ஆஷஸ் போட்டி.. ராபின்சன்னை நீக்கி இங்கிலாந்து.. களமிறங்கும் ஜாம்பவான் வீரர்!

4வது ஆஷஸ் போட்டி.. ராபின்சன்னை நீக்கி இங்கிலாந்து.. களமிறங்கும் ஜாம்பவான் வீரர்!

- Advertisement 1-

இங்கிலாந்து – ஆஸ்திரேலியா இடையிலான ஆஷஸ் டெஸ்ட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதுவரை 3 போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில், ஆஸ்திரேலிய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. குறிப்பாக ஹெட்டிங்லே மைதானத்தில் இங்கிலாந்து அணி கொடுத்துள்ள கம்பேக், அந்நாட்டு ரசிகர்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

3வது டெஸ்ட் போட்டியில் ஆண்டர்சன், ஓலி போப் மற்றும் டங்க் ஆகியோரை இங்கிலாந்து அணி நீக்கம் செய்துவிட்டு, கிறிஸ் வோக்ஸ், மார்க் வுட் மற்றும் மொயின் அலி ஆகியோரை பிளேயிங் லெவனில் சேர்த்தது. இதில் மூன்று வீரர்களுமே இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு காரணமாக அமைந்தனர். இதனால் 4வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து பிளேயிங் லெவன் எப்படி இருக்கும் என்று கேள்வி எழுப்பப்பட்டது.

நாளை மறுநாள் ஆஷஸ் தொடரின் 4வது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் நடக்கவுள்ளது. ஓல்டு ட்ரஃபோர்ட் மைதானத்தில் ஆண்டர்சன் பெயரில் ஸ்டாண்ட் அமைக்கப்பட்டுள்ள சூழலில், 4வது போட்டியில் ஆண்டர்சன் களமிறக்கப்படுவாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது. ஆனால் ஆஷஸ் தொடரின் முதல் 2 போட்டிகளில் ஆடிய ஆண்டர்சன், எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.

இதற்கு இங்கிலாந்து அணி கேப்டன் பென் ஸ்டோக்ஸ் தான் காரணமாக அமைந்துள்ளார். அனைத்து பிட்ச்-களையும் பிளாட்டாக அமைக்க கேட்டுக் கொண்டதால், பிட்ச்சில் எவ்வித உதவியும் இல்லாமல் பவுலர்கள் பந்துவீசி வருகிறார்கள். இதனால் 4வது போட்டியில் ஆண்டர்சன் களமிறங்குவாரா என்ற கேள்வி எழுந்தது.

- Advertisement 2-

இந்த நிலையில் ஆஷஸ் டெஸ்ட் தொடரின் 4வது டெஸ்ட் போட்டியில் ஆண்டர்சன் நிச்சயம் களமிறங்குவார் என்று தகவல் வெளியாகியுள்ளது. இங்கிலாந்து அணியின் ராபின்சன் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக ஆண்டர்சனை கொண்டு வர இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

181 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 688 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள ஆண்டர்சன், 700 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வீரர் என்ற சாதனையை படைப்பார் என்ற எதிர்பார்க்கப்படுகிறது. மீதமுள்ள இரு போட்டிகளில் ஆண்டர்சன் களமிறங்கினால், சாதனையை படைக்க வாய்ப்புள்ளதாக பார்க்கப்படுகிறது.

சற்று முன்