- Advertisement 3-
Homeவிளையாட்டுகபில் தேவ் செஞ்சதே தான்.. சூர்யகுமார் மட்டும் அப்படி பண்ணலைனா.. 41 வருஷம் முன்னாடி நடந்த...

கபில் தேவ் செஞ்சதே தான்.. சூர்யகுமார் மட்டும் அப்படி பண்ணலைனா.. 41 வருஷம் முன்னாடி நடந்த அதே மேஜிக்..

- Advertisement 1-

இந்திய கிரிக்கெட் அணி டி20 உலக கோப்பையில் தென்னாபிரிக்கா அணியை கடைசி ஓவரில் வீழ்த்தியதற்கு அணியில் ஆடி இருந்த ஒவ்வொரு வீரர்களின் பங்கும் மிகப் பெரிதாக இருந்தது. ஆனால் அவற்றை எல்லாம் தாண்டி சூர்யகுமார் யாதவ் கடைசி ஓவரில் பிடித்த கேட்ச் மிக மிக முக்கியமான ஒரு திருப்புமுனையாகவும் அமைந்திருந்தது.

கடைசி ஓவரில் தென்னாபிரிக்காவின் வெற்றிக்கு 16 ரன்கள் தேவைப்பட்ட போது அதிரடி வீரர் டேவிட் மில்லர் களத்தில் இருந்தார். அப்போது ஹர்திக் பாண்டியா வீசிய முதல் ஃபுல் டாஸ் பந்தை அவர் சிக்ஸரை நோக்கி வேகமாக பறக்க விட, அனைவருமே 6 ரன்கள் போய்விட்டது என்று தான் நினைத்தனர். ஆனால் அங்கே வேகமாக ஓடி வந்த சூர்யகுமார் யாதவ் மிக லாவகமாக அந்த கேட்சை எடுத்ததுடன் மட்டுமில்லாமல் தனது கால் சிக்ஸ்ர் லைனில் படாமல் பந்தை தூக்கிப் போட்டு ஒரு பக்கம் குதித்து விட்டு மீண்டும் அந்த கேட்சை விக்கெட்டாக மாற்றி இருந்தார்.

கண் இமைக்கும் நேரத்தில் இந்த சம்பவங்கள் நிகழ்ந்து விட மிக அபாரமாக சூரியகுமார் கேட்ச் பிடித்திருந்தது பலரையும் ஒரு நிமிடம் வியக்க வைத்திருந்தது. தென் ஆப்பிரிக்க வீரர்கள் மற்றும் ரசிகர்கள் அனைவருமே இதனால் உடைந்து போக, இந்திய அணியின் வெற்றியும் அதன் பின்னர் எளிதாக இருந்தது.

இதனால் இந்திய அணியை பொருத்தவரையில் அனைவரது பங்களிப்பு சிறப்பாக இருந்தாலும் இந்த ஒரு கேட்ச் அந்த போட்டியின் முக்கியமான ஒரு தருணம் என்றும் அனைவரும் குறிப்பிட்டு வருகின்றனர். அப்படி ஒரு சூழலில் இந்திய அணியின் முன்னாள் வீரரான ரோஜர் பினி சில கருத்துக்களை கூறியுள்ளார்.

- Advertisement 2-

கடந்த 1983 ஆம் ஆண்டு இந்திய அணி முதல் உலகக் கோப்பையை வென்ற போது விவ் ரிச்சர்ட்ஸ் கேட்சை மிக ஒரு நீண்ட தூரம் ஓடிச் சென்று அதனை விக்கெட்டாக மாற்றி இருந்தார் கேப்டன் கபில்தேவ். அதேபோலவே சூர்யகுமார் யாதவ் பிடித்த கேட்ச் இருப்பதாக கூறும் ரோஜர் பின்னி, “கபில் தேவ் 1983 இல் பிடித்த கேட்ச் மிக அபாரமாக இருந்தது. அவர் பின்னோக்கி ஓடியதுடன் பந்தில் கண்ணை வைத்துக்கொண்டு அந்த கேட்சையும் எடுத்து மிக எளிதாக போட்டியை மாற்றி இருந்தார். இது ஒரு தலை தடகள வீரரின் வெளிப்பாடு ஆகும்.

அதேபோலத்தான் சூர்யகுமாரும் பவுண்டரி லைனுக்கு அருகே அதேபோன்று நிலைமையை தான் எதிர் கொண்டிருந்தார். கபில் தேவ் அந்த கேட்சை தவற விட்டிருந்தால் நாம் தோற்று போயிருக்கலாம் என்பது போல சூர்யகுமாரும் அந்த கேட்சை விட்டிருந்தால் தோல்வி தான். அந்த இரண்டு கேட்சுகளும் மிக முக்கியமானது” என நெகழ்ச்சியுடன் ரோஜர் பின்னி கூறியுள்ளார்.

சற்று முன்