வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான அடுத்தடுத்த இரண்டு போட்டிகளில் தொடர் தோல்வியை அடுத்து ஹர்திக் பாண்டியாவின் கேப்டன்சியை பலரும் குறை கூற துவங்கியுள்ளனர். அதே சமயம் மீண்டும் ரோகித் சர்மா கேப்டன் ஆகி டி20 அணியை வழிநடத்த வேண்டும் என்ற கருத்தையும் ரசிகர்கள் பலர் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் ரோகித் சர்மா, யுஎஸ்ஏ மற்றும் கரீபியனில் நடக்கும் டி20 உலக கோப்பையில் தான் ஒரு முறை விளையாட வேண்டும் என்று தனது விருப்பத்தை அவர் கூறியுள்ளார். அவரின் இந்த கருத்தை தொடர்ந்து, 2024 ஆம் ஆண்டு அமெரிக்காவில் நடக்க உள்ள டி20 உலக கோப்பையில் ரோகித் சர்மா நிச்சயம் பங்கு பெறப் போகிறார் என்ற வதந்திகள் மிக வேகமாக பரவத் தொடங்கின.
இந்த நிலையில் இது குறித்து பிசிசிஐ எந்த முடிவையும் இதுவரை எடுக்கவில்லை என்று தெரிய வந்துள்ளது. ஒரு நாள் போட்டிக்கான உலகக் கோப்பை முடிந்த பிறகு அஜித் அகர்கர் இதுகுறித்து ரோஹித் சர்மாவிடம் பேசுவார் என்று தெரிகிறது.
பிசிசிஐ அதிகாரி ஒருவர் இன்சைட் ஸ்போர்ட்ஸ் இடம் இது குறித்து பேசுகையில், “இது ஒரு நாள் உலகக் கோப்பைக்காண வருடம், அதன் காரணமாக ரோஹித் மற்றும் கோலியின் முழுமையான போக்கஸ் அதில் மட்டுமே உள்ளது. இந்த சமயத்தில் அவர்கள் டி20 போட்டிகளில் அல்லது டி20 உலக கோப்பையில் விளையாடுவார்களா என விவாதிப்பது சரியாக இருக்காது. அஜித் அகர்கர் இதுகுறித்து நிச்சயம் ரோஹித் மற்றும் கோலி இடம் பேசி நல்ல ஒரு தீர்வை காண்பார் என்று அவர் கூறியுள்ளார்.
இந்த நிலையில் ரோகித் சர்மா மீண்டும் t20 அணிக்கு கேப்டன் ஆவாரா என்பது குறித்து பிசிசி அதிகாரி கூறுகையில், இதுவரை ரோகித் சர்மா இந்திய டி20 அணியில் இடம் பெறுவதற்கான எந்த ஒரு டிஸ்கஷனும் நடைபெறவில்லை. அவர் இதுவரை டி20 இல் இருந்து ரிட்டயர் ஆவதாக அறிவிக்கவும் இல்லை.
ஒரு வேலை அப்படி டி20 போட்டியில் அவர் விளையாடினால் ஒரு சாதாரண பிளேயராக விளையாடுவாரா இல்லை கேப்டனாக விளையாடுவாரா என்பதெல்லாம் எல்லோரும் விவாதித்து எடுக்க வேண்டிய ஒரு முடிவு. எங்களைப் பொறுத்தவரை விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகிய இருவரும் மூன்று விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் இதுவரை சிறப்பாகவே செயல்பட்டு வருகின்றனர் என்று அவர் கூறியுள்ளார்