- Advertisement 3-
Homeவிளையாட்டுநான் சொல்றேன்ல.. ஜடேஜா பேச்சைக் கேட்டு பல்பு வாங்கிய ரோஹித்.. முதல் நாளே ஸ்டார்ட் பண்ணிட்டாங்க..

நான் சொல்றேன்ல.. ஜடேஜா பேச்சைக் கேட்டு பல்பு வாங்கிய ரோஹித்.. முதல் நாளே ஸ்டார்ட் பண்ணிட்டாங்க..

- Advertisement 1-

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் சிறப்பாக நடந்து முடிந்துள்ளது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஸ்டோக்ஸ் முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். சமீப காலமாக டெஸ்ட் போட்டியில் அதிரடி ஆட்டத்தை கடைப்பிடித்து வரும் இங்கிலாந்து அணி, இந்திய அணிக்கு எதிராக வெற்றி காணுமா அல்லது சுழற்பந்து வீச்சு தாக்குதலில் சிக்கி தடுமாறுமா என்ற எதிர்பார்ப்புக்கு மத்தியில் அவர்கள் பேட்டிங் இறங்கினர்.

அந்த வகையில் முதல் விக்கெட்டிற்கு அவர்கள் 12 ஓவர்களில் 55 ரன்கள் சேர்த்ததால் நிச்சயம் நல்ல ஒரு ஸ்கோரை இந்திய அணிக்கு எதிராக எட்டுவார்கள் என்று அனைவரும் கருதினர். ஆனால் அதன் பின்னர் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சு எடுபட ஆரம்பிக்க, அடுத்தடுத்து விக்கெட்களை இழந்து ஆட்டம் கண்டது இங்கிலாந்து அணியின் பேட்டிங் வரிசை.

அஸ்வின், ஜடேஜா, அக்சர் படேல் என அனைத்து சுழற்பந்து வீச்சாளர்களும் தங்கள் பங்குக்கு விக்கெட்டை எடுத்துக் கொண்டே இருந்ததால் இங்கிலாந்து அணியால் பெரிய அளவில் அதிரடி ஆட்டத்தை கடைபிடிக்க முடியவில்லை. அந்த அணியின் கேப்டன் ஸ்டோக்ஸ் 88 பந்துகளில் மூன்று சிக்ஸர்கள் மற்றும் ஆறு ஃபோர்களுடன் மொத்தம் 70 ரன்கள் எடுத்து அவுட் ஆகி இருந்தார். மற்ற வீரர்கள் சொற்பரன்களில் ஆட்டம் இழந்ததால் அந்த அணி 246 ரன்கள் ஆல் அவுட்டானது.

இந்திய அணி தரப்பில் அஸ்வின் மற்றும் ஜடேஜா ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுகளும், பும்ரா மற்றும் அக்சர் படேல் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றி இருந்தனர். தொடர்ந்து அடிய இந்திய அணி, முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 23 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 119 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணியின் தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் 70 பந்துகளில் 76 ரன்கள் எடுத்து அவுட் ஆகாமல் களத்தில் உள்ளார்.

- Advertisement 2-

அவருடன் களம் இறங்கிய கேப்டன் ரோஹித் ஷர்மா, 24 ரன்கள் எடுத்து அவுட்டானார். நல்ல ஒரு தொடக்கத்தை இந்திய அணி கொடுத்துள்ளதால் இரண்டாம் நாள் ஆட்டத்தில் அதிக ரன்கள் சேர்த்து இங்கிலாந்து அணிக்கு இரண்டாவது இன்னிங்ஸில் நெருக்கடி கொடுக்கும் என்றே தெரிகிறது. இந்த நிலையில் முதல் நாளில் ஜடேஜா காரணமாக ரோஹித் ஏமாற்றம் அடைந்து தொடர்பான செய்தி அதிகம் வைரலாகி வருகிறது.

இந்த போட்டியின் முதல் நாளிலேயே இரு அணிகளும் பல டிஆர்எஸ் ரிவ்யூக்களை வீணாக்கி உள்ளது என்று தான் சொல்ல வேண்டும். அந்த வகையில் ஜோ ரூட் ஆட வந்த போது மிகவும் முக்கியமான சமயத்தில், ஜடேஜா வீசிய பந்தை மடக்கி லெக் சைடு ஆட நினைத்தார். ஆனால் பந்து நேராக அவரது பேடில் பட்டதால் விக்கெட்டிற்கு இந்திய வீரர்கள் அப்பீல் செய்தனர்.

ஆனால், நடுவர் இதற்கு அவுட் கொடுக்க மறுக்க, பின்னர் கேப்டன் ரோஹித்திடம் டிஆர்எஸ் அப்பீல் செய்யுமாறு ஜடேஜா அறிவுறுத்தியதாக தெரிகிறது. ரோஹித்திற்கு விருப்பம் இல்லை என்ற போதிலும் ஜடேஜா சொன்னதால் அவரும் அப்பீல் செய்ய, பேட்டில் பட்டதால் முடிவும் அவுட்டில்லை என வந்தது. ஆனால் அதே வேளையில், டிஆர்எஸ்ஸில் சில குழப்பங்கள் இருந்ததால் தான் இது அவுட்டில்லை என்றும் முடிவு வந்ததாக சர்ச்சை ஒன்றும் கிளம்பி உள்ளது.

சற்று முன்