இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு ஐ.பி.எல் தொடரின் மிகமுக்கியமான இரண்டாவது குவாலிபயர் போட்டியானது நேற்று அகமதாபாத் நகரில் நடைபெற்றது. இந்த போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும், ஹார்டிக் பாண்டியா தலைமையிலான குஜராத் அணியும் மோதின. அதன்படி இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணியானது முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.
அதன்படி முதலில் விளையாடிய குஜராத் அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 233 ரன்களை குவித்தது. குஜராத் அணி சார்பாக அதிகபட்சமாக துவக்க வீரர் சுப்மன் கில் 60 பந்துகளை சந்தித்து 7 பவுண்டரி மற்றும் 10 சிக்ஸர்கள் என 129 ரன்கள் குவித்து அசத்தினார். அதேபோன்று தமிழக வீரர் சாய் சுதர்சன் 43 ரன்கள் குவித்தார்.
பின்னர் 234 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய மும்பை அணியானது 18.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 171 ரன்களை மட்டுமே குவித்தது. அதன் காரணமாக குஜராத் அணியானது 62 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது மட்டுமின்றி சி.எஸ்.கே அணிக்கெதிராக நடைபெறவிருக்கும் இறுதிப்போட்டியில் விளையாடவும் தகுதி பெற்றது.
இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தாங்கள் பெற்ற தோல்வி குறித்து பேசிய மும்பை அணியின் கேப்டன் ரோஹித் சர்மா கூறுகையில் : சுப்மன் கில் இந்த போட்டியில் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இருந்தாலும் நாங்கள் 25 ரன்கள் வரை கூடுதலாக வழங்கி விட்டோம். நாங்கள் சேசிங் செய்ய வரும்போது நல்ல மனநிலையுடன் தான் வந்தோம். ஆனால் எங்களால் பெரிய பாட்னர்ஷிப்பை அமைக்க முடியவில்லை.
ஆனாலும் சூரியகுமார் யாதவ் மற்றும் கேமரூன் க்ரீன் ஆகியோர் மிகச்சிறப்பாக விளையாடினர். இருப்பினும் இறுதியில் நாங்கள் தோல்வியையே சந்திக்க நேர்ந்தது. இதுபோன்ற பெரிய இலக்கினை துரத்தும் போது நல்ல பவர்பிளே அமையவேண்டும். ஆனால் நாங்கள் பவர்பிளேவின் போதே இரண்டு விக்கெட்டுகளை இழந்து விட்டோம்.
இதையும் படிக்கலாமே: ஒரே போட்டியில் ஒட்டுமொத்த ப்ளே ஆஃப் ரெக்கார்டையும் காலி பண்ணிய சுப்மன் கில். அடுத்த டார்கெட் கோலி ரெகார்ட் தான்.
அதேபோன்று இதுபோன்ற ஒரு பெரிய இலக்கினை துரத்தும் போது ஒரு பேட்ஸ்மேன் இறுதிவரை நின்று விளையாட வேண்டியது அவசியம். குஜராத் அணிக்காக சுப்மன் கில் விளையாடியது போன்று எங்கள் அணிக்காக ஒருவர் நிலைத்து நின்று விளையாடியிருக்க வேண்டும். ஆனால் எப்போது என்ன நடக்கும் என்பது நமக்கு தெரியாது. இந்த வெற்றிக்கு குஜராத் அணி தகுதியானவர்கள். மொத்தத்தில் இந்த போட்டியில் சுப்மன் கில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தியதாக ரோஹித் சர்மா பேசியது குறிப்பிடத்தக்கது.