- Advertisement 3-
Homeவிளையாட்டுஅடிப்பொலி சாரே.. ரோஹித், கோலி ஓப்பனிங்.. இந்த ஸ்பின்னர்ஸ் டீம்ல இருப்பாங்க.. லீக் சுற்றில் நடக்க...

அடிப்பொலி சாரே.. ரோஹித், கோலி ஓப்பனிங்.. இந்த ஸ்பின்னர்ஸ் டீம்ல இருப்பாங்க.. லீக் சுற்றில் நடக்க போகும் ட்விஸ்ட்..

- Advertisement 1-

டி 20 உலக கோப்பையில் இந்திய அணி எப்படி களமிறங்கும் என்பதே பெரிய குழப்பமாக தான் இருந்து வருகிறது. இந்திய அணிக்கு அமெரிக்க ஆடுகளங்கள் பெரிதாக பழக்கமில்லை என்ற சூழலில் தற்போது நடந்து வரும் போட்டிகளின் அடிப்படையில் நிச்சயம் பெரிய சவால் காத்திருக்கும் என்றே தெரிகிறது.

இந்திய அணிக்கு மொத்தம் நான்கு லீக் போட்டிகள் உள்ள நிலையில் அதன் முதலாவது போட்டி, அயர்லாந்து அணிக்கு எதிராக இன்று நடைபெற உள்ளது. இதில் இந்திய அணி எந்த வீரர்களை தேர்வு செய்யும் என்பதை தெரிந்து கொண்டாலே மீதமிருக்கும் போட்டிகளில் எப்படி வீரர்களை அமைத்துக் கொள்வார்கள் என்பதும் தெரிந்து விடும்.

அந்த வகையில் தொடக்க வீரராக ஜெய்ஸ்வால் களமிறங்குவாரா அல்லது கோலி மற்றும் ரோஹித் ஷர்மா களமிறங்குவார்களா என்பதும் பெரிய கேள்வி தான். இதற்கு அடுத்தபடியாக மிடில் ஆர்டரில் சஞ்சு சாம்சன், ஷிவம் துபே உள்ளிட்ட வீரர்களில் யாருக்கு வாய்ப்பு கிடைக்கும் என பல கேள்விகளும் இந்திய அணியை சுற்றியுள்ளது.

இதற்கெல்லாம் ரோஹித் ஷர்மா சிறப்பான பதிலை நிச்சயம் தெரிவித்து இந்திய ரசிகர்களின் மனம் வேதனை அடையும் வகையில் எதையும் செய்ய மாட்டார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி இருக்கையில் பல கிரிக்கெட் பிரபலங்களும் தங்களின் ஆலோசனைகளை கொடுத்து வருகின்றனர். அந்த வகையில் முன்னாள் இந்திய வீரரான அம்பத்தி ராயுடு இதைப்பற்றி தனது அபிப்பிராயங்களையும் தெரிவித்துள்ளார்.

- Advertisement 2-

“அமெரிக்காவில் உள்ள பிட்ச்சின் சூழலை பார்க்கும்போது நிச்சயம் ரிஷப் பந்த் மற்றும் சஞ்சு சாம்சன் என இரண்டு பேரும் அணியில் இடம் பெறுவார் என்று நான் உணர்கிறேன். சஞ்சு மிக அற்புதமாக மூன்றாவது வீரராக களமிறங்கி ஆடி வருகிறார். அவருக்கு அடுத்தபடியாக நான்காவது வீரராக சூர்யகுமார் வரவேண்டும். இதன் பின்னர் எத்தனை ஓவர்கள் முடிந்திருக்கிறது என்ற அடிப்படையில் மற்ற எந்த வீரர்களையும் நீங்கள் களமிறக்கலாம்.

ஆனால் நிச்சயம் கோலி மற்றும் ரோஹித் ஷர்மா தான் தொடக்க வீரராக களமிறங்கி மூன்றாவது மற்றும் நான்காவது வீரராக முறையே சஞ்சு சாம்சன் மற்றும் சூர்யகுமார் வர வேண்டும். இதன் பின்னர் பந்த் மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோர் வரிசையில் வரவேண்டும் என கூறியுள்ளார். இதற்கடுத்து ஜடேஜா மற்றும் அக்சர் படேல் என இரண்டு பேர் வரும் போது 8 பேட்ஸ்மேன்கள் அணியில் இருப்பார்கள். குல்தீப் யாதவ், பும்ரா மற்றும் அர்ஷ்தீப் சிங் என வரும் போது அணியும் பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலும் பேலன்ஸ் ஆன அணியாக மாறி விடும்” என ராயுடு கூறி உள்ளார்.

சற்று முன்