- Advertisement 3-
Homeவிளையாட்டுஎது டி 20 வேர்ல்டு கப்ல தோனியா.. ரோஹித்தே சொன்ன வார்த்தை.. நடந்தா நல்லா தான்...

எது டி 20 வேர்ல்டு கப்ல தோனியா.. ரோஹித்தே சொன்ன வார்த்தை.. நடந்தா நல்லா தான் இருக்கும்..

- Advertisement 1-

நடப்பு ஐபிஎல் தொடர் மிக விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இது முடிந்ததும் டி20 உலக கோப்பையும் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஆகிய நாடுகளில் வைத்து நடைபெற உள்ளது. மேலும் ஐபிஎல் தொடரில் சிறப்பாக ஆடும் இந்திய வீரர்கள், டி 20 உலக கோப்பையிலும் இடம் பிடிக்க வாய்ப்புள்ள சூழலில், அனைத்து வீரர்களுமே இந்த வாய்ப்பை கச்சிதமாக பயன்படுத்தி வருகிறார்கள்.

பேட்டிங், ஆல்ரவுண்டர் மற்றும் பௌலிங் என அனைத்திலும் வீரர்கள் சரியாக இருந்தாலும் இந்திய அணியில் தேர்வுக்கான போட்டியில் அதிகமாக இருப்பது விக்கெட் கீப்பர்கள் தான். ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு கிரிக்கெட் போட்டி ஆடி வரும் ரிஷப் பந்த், சஞ்சு சாம்சன், கேஎல் ராகுல், இஷான் கிஷன், தினேஷ் கார்த்திக் என ஏராளமான விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்கள் இந்த தொடரில் சிறந்த ஃபார்மில் இருந்து வருகின்றனர்.

அதிலும் 39 வயதாகும் தினேஷ் கார்த்திக், 200 ரன்களுக்கு மேல் 200 ஸ்ட்ரைக் ரேட்டுடன் பட்டையை கிளப்பி வருகிறார். இந்திய அணியில் இடம்பிடித்தால் நிச்சயம் சிறந்த ஒரு ஃபினிஷராகவும் இவர் இருப்பார் என எதிர்பார்க்கப்பட்டு வரும் சூழலில் மற்ற வீரர்கள் எப்படி இடம் பெறுவார்கள் என்பதும் குழப்பமாக உள்ளது.

இதற்கு மத்தியில் இந்திய அணியில் இருந்து ஏற்கனவே ஓய்வினை அறிவித்திருந்த தோனி, சென்னை அணிக்காகவும் தனக்கு கிடைக்கும் பந்துகளை சிக்ஸர்கள் பறக்கவிட்டு வருகிறார். அவரது ஆட்டத்தை பார்த்து ரசிகர்கள் சிலர் தோனிக்கு இந்திய அணியில் வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்றும் ஜாலியாக குறிப்பிட்டு வருகின்றனர்.

- Advertisement 2-

இந்த நிலையில் இந்திய கேப்டனான ரோஹித் ஷர்மா, தோனி குறித்து தெரிவித்துள்ள கருத்து தற்போது அதிகம் வைரலாகி வருகிறது. யூ டியூப் சேனல் ஒன்றின் நேர்காணலில் ரோஹித் ஷர்மா, ஆடம் கில்க்றிஸ்ட் உள்ளிட்ட பலரும் பேசியிருந்தனர். அப்போது ரோஹித்திடம் தோனி அல்லது தினேஷ் கார்த்திக் ஆகியோரில் டி 20 உலக கோப்பையில் ஆட வைக்க விரும்புகிறீர்கள் என்ற கேள்வி கேட்கப்பட்டது.

இதற்கு பதில் அளித்த ரோஹித் ஷர்மா, “அவர்களின் ஆட்டம் என்னை வெகுவாக கவர்ந்துள்ளது. தினேஷ் கார்த்திக் சிறப்பாக ஆடிய சூழலில் தோனியும் நான்கு பந்துகளை எதிர் கொண்டு 20 ரன்கள் அடித்திருந்தது அந்த போட்டியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தது. அது மட்டுமல்லாமல் அந்த ரன்கள் தான் வெற்றியின் வித்தியாசமாகவும் இருந்தது. ஆனாலும் உடல்நிலை சரியில்லாமல் இருக்கும் தோனியை சம்மதிக்க வைப்பது மிக கடினம்.

ஆனால் தினேஷ் கார்த்திக்கை சம்மதிக்க வைப்பது மிகவும் எளிது. இந்தியாவில் இடம்பிடிக்க வைக்க அவருக்கு நான் சிறிது அழுத்தத்தை கொடுத்து வருகிறேன். ஹைதராபாத் போட்டிக்கு பின்னர் அதைப்பற்றி அவரும் பேசியிருந்தார்” என கூறியுள்ளார் ரோஹித்.

சற்று முன்