- Advertisement 3-
Homeவிளையாட்டுஅவரை மாதிரி ஒருத்தர்.. கோப்பையை வென்ற கையுடன் தோனி பற்றி ரோஹித் பேசிய விஷயம்..

அவரை மாதிரி ஒருத்தர்.. கோப்பையை வென்ற கையுடன் தோனி பற்றி ரோஹித் பேசிய விஷயம்..

- Advertisement 1-

தோனி, தோனி என பல ஆண்டுகளாக இந்திய அணியின் கேப்டன்கள் மத்தியில் பரவலாக இருந்த பெயருக்கு பின்னால் தற்போது ரோஹித் ஷர்மா மிக மிக முக்கியமான ஒரு இடத்தை பிடித்து சரித்திரம் படைத்துள்ளார். நவீன கிரிக்கெட் யுகத்தில் இந்திய அணிக்கு ரோஹித் ஷர்மா ஒரு கேப்டனாக கிடைத்தது போல எந்த சர்வதேச அணியும் ஒரு கேப்டனை பார்க்கவில்லை என தைரியமாக சொல்லிவிடலாம்.

ஐசிசி கோப்பையை வெல்வதால் மட்டுமே ஒரு சிறந்த கேப்டன் யார் என்பதை தீர்மானிக்காமல் அணியை எந்த அளவுக்கு வழி நடத்துகிறார்களோ அதுவும் மிக முக்கியம். அந்த வகையில் கடந்த சில ஆண்டுகளாக ரோஹித் ஷர்மா தலைமையில் இளம் வீரர்கள் தொடங்கி சீனியர் வீரர்கள் வரை மிகச் சிறந்த ஆட்டத்தை இந்திய அணிக்காக வெளிப்படுத்தி வந்தனர்.

அது மட்டுமில்லாமல் ஒரு சில ஐசிசி தொடர்களின் நாக் அவுட் மற்றும் இறுதி போட்டிகளில் தோற்று உறக்கம் இல்லாமல் தவித்து வந்த இந்திய ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஒரு நிம்மதியையும், உற்சாகத்தையும் தற்போது ரோஹித் ஷர்மா தலைமையிலான டி20 கிரிக்கெட் அணி கொடுத்துள்ளது.

தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக நடைபெற்ற டி20 உலக கோப்பைத் தொடரின் இறுதி போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ள நிலையில், 17 ஆண்டுகளுக்குப் பிறகு டி20 உலக கோப்பையை தங்கள் வசம் ஆக்கி உள்ளனர். போட்டி கைவிட்டு போன போதும் கூட கடைசி ஓவர் வரை போராடி வெற்றியை பெற்று கொடுத்திருந்தது இந்திய கிரிக்கெட் அணி.

- Advertisement 2-

இந்த ஒரு தருணத்திற்காக ஒட்டுமொத்த இந்தியாவே பல வருடங்கள் காத்திருந்த சூழலில் அதற்கான விடையையும் ரோஹித் ஷர்மா தனது ஸ்டைலில் தெரிவித்துள்ளார். உலக கோப்பையை 13 ஆண்டுகள் கழித்து இந்தியா வென்றது ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டு வந்தாலும் ரோஹித் ஷர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் டி 20 சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாகவும் தற்போது அறிவித்துள்ளனர்.

இதனால் அடுத்து வரும் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் உள்ளிட்ட தொடர்களில் இந்திய அணி வெல்வதற்கு அவர்கள் சுதந்தரமாக தயாராகி அதில் கவனம் செலுத்தலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி ஒரு சூழலில் கோப்பையை வென்ற பின்னர் தோனி குறித்து ரோஹித் ஷர்மா தெரிவித்த கருத்து, ரசிகர் மத்தியில் கவனம் பெற்று வருகிறது.

“இந்திய அணிக்காக ரோஹித் ஷர்மா ஒரு சிறந்த வீரராக இருந்துள்ளார். அவர் அழைத்து எங்களின் வெற்றியை பாராட்டியதும் மிகச்சிறந்த ஒரு தருணமாக இருந்தது. இந்தியாவில் இருந்து ஒவ்வொருவரும் இந்த தருணம் அரங்கேற வேண்டும் என்று தான் விரும்பினர். அது தற்போது நடந்தது மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது” என ரோஹித் கூறியுள்ளார்.

சற்று முன்