- Advertisement -
Homeவிளையாட்டு150 ரன்ல அவுட்டானாலும் பரவாயில்ல.. எல்லாம் தெரிஞ்சு தான் ரிஸ்க் எடுத்தோம்.. அபார வெற்றிக்கு காரணமா...

150 ரன்ல அவுட்டானாலும் பரவாயில்ல.. எல்லாம் தெரிஞ்சு தான் ரிஸ்க் எடுத்தோம்.. அபார வெற்றிக்கு காரணமா இருந்த ஐடியா.. ரோஹித் பேட்டி..

- Advertisement-

இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் மோதிய இரண்டு டெஸ்ட் கொண்ட தொடர் தற்போது முடிவுக்கு வந்துள்ளது. இதில் முதல் டெஸ்டை சேப்பாக்கம் மைதானத்தில் இந்திய அணி எளிதாக வெற்றி பெற்றிருந்தாலும் கான்பூரில் நடந்த டெஸ்டில் இந்திய அணி வெல்வது மிகப்பெரிய சவாலாக இருந்தது. இரண்டரை நாட்கள் மழை காரணமாக ரத்தானதால் அடுத்த இரண்டு தினங்களில் இந்திய அணி வெற்றி பெற வேண்டும் என்று சூழலும் இருந்தது.

ஆனால் அதையும் மிகச் சாமர்த்தியமாக திட்டம் போட்டு தயாரான இந்திய அணி, இரண்டே நாளில் இரண்டு இன்னிங்ஸ்களையும் வேகமாக முடிப்பதற்கும் வழி வகுத்திருந்தது. வங்கதேச அணியின் 17 விக்கெட்களை மிக குறைந்த ஓவர்களில் திட்டம் போட்டு எடுத்திருந்த இந்திய அணி, முதல் இன்னிங்சில் அதிரடி ஆட்டத்தையும் ஆடி நிறைய சாதனைகளை புரிந்திருந்தது.

- Advertisement -

இதனால் இந்திய அணிக்கு 95 ரன்கள் மட்டுமே இலக்காக நிர்ணயிக்கப்பட அதனையும் மிக வேகமாக எட்டி பிடித்து இந்திய அணி வெற்றி பெற்றிருந்தது. இதனால் தொடரையும் அவர்கள் 2 – 0 என்ற கணக்கில் வெற்றி பெற்று உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில் முதலிடத்தையும் பலமாக தக்க வைத்துள்ளனர்.

வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்றதற்கு பின் பேசியிருந்த இந்திய கேப்டன் ரோஹித் ஷர்மா, “வாழ்க்கையின் ஒரு கட்டத்தில் அப்படியே நாம் நகர்ந்து கொண்டே இருக்க வேண்டும். ஒரு பகுதியில் நாம் வேறொருவருடன் பணிபுரியும் சூழல் உருவாகும். ராகுல் டிராவிட்டுடன் அற்புதமான நேரம் அமைந்திருந்தது. அதன் பின்னர் கம்பீர் உள்ளே வர அவருடன் நான் இணைந்து விளையாடி உள்ளதால் அவரது மனநிலை எப்படி இருக்கும் என்பது தெரியும்.

- Advertisement-

கம்பீர் அனைத்து வீரர்களையும் அவர்களுக்கு தோன்றுவது போல விளையாட வேண்டும் என விரும்புவார். நான்காவது நாளில் நாங்கள் விளையாட வந்த போது எவ்வளவு சீக்கிரமாக வங்கதேச அணியை ஆல் அவுட் செய்து விட்டு பேட்டிங் இறங்க வேண்டும் என நினைத்தோம். இவை அனைத்தும் அவர்கள் எவ்வளவு ரன் அடிக்கிறார்கள் என்பதை பொறுத்து தான் அமையும்.

அவர்கள் எத்தனை ரன் அடிக்கிறார்கள் என்பதை விட எத்தனை ஓவர்கள் அவர்களுக்கு வீச வேண்டும் என்பதில் தான் எங்கள் கவனம் இருந்தது. பிட்ச் பந்து வீச்சாளர்களுக்கு அதிகம் சாதகமாக இல்லை என்ற போதிலும் எங்கள் பவுலர்கள் சிறப்பாக செயல்பட்டு போட்டியை மாற்றி இருந்தனர். பேட்ஸ்மேன்களும் அது போன்ற மனநிலையில் சீக்கிரமாக ரன் அடிக்க முயன்றனர்.

அது போன்று நாங்கள் அனைவரும் பேட்டிங் செய்தது நிச்சயம் மிகப்பெரிய ரிஸ்க். ஏனென்றால் அடுத்தடுத்து அவுட்டாகி குறைந்த ரன்னே அடிக்கும் நிலை வரும். ஆனால் நாங்கள் 100 முதல் 150 ரன்களுக்குள் அவுட்டாகவும் தயாராக இருந்தோம். முடிந்த அளவுக்கு எங்கள் பக்கம் போட்டியை வைத்து முடிவை சாதகமாக மாற்ற நினைத்தோம்.

ஆகாஷ் தீப்பும் மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறார். நிறைய முதல் தர கிரிக்கெட் ஆடியுள்ள அவர், அணி என்ன நினைக்கிறதோ அதை அப்படியே செய்தும் கொடுக்கிறார். அவரிடம் கிரிக்கெட் திறனும் அசத்தலாக உள்ளது. வேகமாகவும், அதே நேரத்தில் தொடர்ச்சியாகவும் நிறைய ஓவர்கள் வீசவும் செய்கிறார்.

வீரர்கள் நிறைய பேர் தொடர்ந்து கிரிக்கெட் ஆடுவதால் காயமும் அதிகம் பேருக்கு அரங்கேறுகிறது. இதனால், அதற்கேற்ற வகையில் அணி வீரர்களை தயார் செய்து மாற்று வீரர்களையும் இடம்பெற செய்ய வேண்டும்” என ரோஹித் ஷர்மா கூறி உள்ளார்.

சற்று முன்