- Advertisement -
Homeவிளையாட்டுஅதுக்காக தான் வெயிட்டிங்.. ஷமி எப்போ ஆஸ்திரேலியா வருவாரு?.. ரோஹித் ஷர்மா பேட்டி

அதுக்காக தான் வெயிட்டிங்.. ஷமி எப்போ ஆஸ்திரேலியா வருவாரு?.. ரோஹித் ஷர்மா பேட்டி

- Advertisement-

அடிலெய்டு மைதானத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்துள்ளதால் அவர்களது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கான வாய்ப்பும் சற்று நெருக்கடியாக மாறி உள்ளது. பிங்க் பந்தில் நடைபெறும் டெஸ்ட் போட்டிகள் என்றாலே ஆஸ்திரேலியாவை அசைத்து பார்ப்பது மிகக் கடினம்.

அதில் இந்தியாவை விட அதிக அனுபவமுள்ள ஆஸ்திரேலிய அணி, முதல் நாளில் இருந்தே போட்டியை தங்களது கட்டுப்பாட்டில் தான் வைத்திருந்தது. முதல் இன்னிங்சில் இந்திய அணி 180 ரன்களில் ஆல் அவுட்டாகி இருந்த நிலையில் தொடர்ந்து ஆடியிருந்த ஆஸ்திரேலிய அணி 337 ரன்கள் சேர்த்திருந்தது. எப்போதும் போல இந்தியாவுக்கு எதிராக ஹெட் மீண்டும் ஒருமுறை சதமடித்து பட்டையைக் கிளப்பி இருந்தார்.

தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸில் 157 ரன்கள் பின்தங்கிய நிலையில் ஆடிய இந்திய அணி 175 ரன்களில் ஆல் அவுட்டாகி இருந்தது. இந்த இரண்டு இன்னிங்ஸ்களிலுமே தனது 2 வது டெஸ்டில் ஆடும் இளம் வீரர் நிதிஷ் குமார் ரெட்டி தான் அதிகபட்சமாக 40 ரன்களைக் கடந்திருந்தார். இதன் பின்னர் வெறும் 19 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிய ஆஸ்திரேலிய அணி, விக்கெட் இழப்பின்றி வெற்றி பெற்றிருந்த நிலையில் இந்திய அணியும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் இருந்து மூன்றாவது இடத்திற்கு சென்றுள்ளது.

இந்த தோல்விக்கு பின் பல விஷயங்களைப் பற்றி பேசி இருந்த இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா முகமது ஷமி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரில் இடம் பெறுவாரா என்ற கேள்விக்கும் பதிலளித்துள்ளார். “நாங்கள் தற்போது முகமது ஷமியை கண்காணித்து வருகிறோம். ஏனென்றால் சையது முஸ்டாக் அலி டிராபி தொடரில் ஆடிய போது அவரது முழங்கால் பகுதியில் வீக்கம் ஏற்பட்டது.

- Advertisement-

இதுதான் அவர் ஆஸ்திரேலியாவில் வந்து டெஸ்ட் போட்டி ஆடவும் தாமதப்படுத்தியது. நாங்கள் ஷமி விஷயத்தில் மிக கவனமாக இருக்க விரும்புகிறோம். அவரை நெருக்கடிக்கு மத்தியில் இங்கே கொண்டு வந்து பந்து வீச வைக்க நாங்கள் விரும்பவில்லை. அவருக்கு இந்திய அணிக்காக ஆடி நீண்ட காலங்கள் ஆகிவிட்டதால் இங்கே வந்து ஆட வேண்டும் என்று எந்த நிர்பந்தத்தையும் நாங்கள் விரும்பவில்லை.

ஷமியை தொடர்ந்து மருத்துவக் குழுவினர் கண்காணித்து வரும் நிலையில் அவர்களின் முடிவுப்படி நாங்கள் ஆஸ்திரேலியாவிற்கு அவரை அழைத்து வருவோம். தற்போது இருபது ஓவர் வரை ஃபீல்டிங் செய்யும் முகமது ஷமி, நான்கு ஓவர்கள் பந்து வீசவும் செய்கிறார். ஆஸ்திரேலியா வந்து அவர் இணைவதற்கான கதவுகள் எப்போதும் திறந்து தான் இருக்கிறது” என ரோஹித் ஷர்மா கூறியுள்ளார்.

சற்று முன்