- Advertisement 3-
Homeவிளையாட்டுஅர்ஷ்தீப் அப்படி பண்ணதும் மிரண்டுட்டேன்.. பாகிஸ்தானுக்கு எதிரான மேட்ச்ல இதான் பிளான் - ரோஹித்..

அர்ஷ்தீப் அப்படி பண்ணதும் மிரண்டுட்டேன்.. பாகிஸ்தானுக்கு எதிரான மேட்ச்ல இதான் பிளான் – ரோஹித்..

- Advertisement 1-

டி 20 உலக கோப்பையில் மொத்தம் 20 அணிகள் இடம் பிடித்திருந்தாலும் அதில் இந்திய அணி சுற்றி இருந்த பரவலான கருத்தை போல யாருக்கும் அமையவில்லை என்றே சொல்லலாம். கடந்த ஆண்டு நடந்த ஒரு நாள் உலக கோப்பையின் இறுதி போட்டி வரை முன்னேறி இருந்த இந்திய அணி தான் நிச்சயம் கோப்பை கைப்பற்றும் என அனைவருமே எதிர்பார்த்தனர்.

ஆனால் ஆஸ்திரேலிய அணி சிறப்பாக செயல்பட்டு அதனை தட்டிப் பறிக்க இந்த முறை நிச்சயம் இந்திய அணி தான் கோப்பையை கைப்பற்றும் என பலரும் குறிப்பிட்டு வருகின்றனர். அதற்கான சாதகங்களுடன் இந்திய வீரர்களும் இடம் பிடித்திருக்க போட்டிக்கு போட்டி வீரர்களை சுழற்சி முறையில் களமிறக்கினால் கூட இந்திய அணியால் வெற்றிகளை பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. அப்படி ஒரு சூழலில் இந்த டி20 உலக கோப்பையின் முதல் போட்டியில் இந்திய அணி அயர்லாந்தை சந்தித்திருந்தது.

வெறும் 96 ரன்களில் அவர்களை ஆல் அவுட் செய்த இந்திய அணி, இலக்கையும் எந்த வித நெருக்கடியிலும் என்று அசால்டாக எட்டிப் பிடித்திருந்தது. ஆனால் அதே வேளையில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விராட் கோலி ஒரு ரன் மட்டும் எடுத்து அவுட்டாக அவருக்கு பின்னர் வந்த சூர்யகுமாரும் இரண்டு ரன்னில் நடையை கட்டி இருந்தார்.

இன்னொரு பக்கம் ரோஹித் ஷர்மா அரைச்சதம் அடித்து பட்டையை கிளப்ப ரிஷப் பந்த் கடைசி கட்டத்தில் பௌண்டரிகளை விரட்டி இந்திய அணியின் வெற்றியை எளிதாக்கி இருந்தார். இதனிடையே ரோஹித் ஷர்மா 52 ரன்கள் எடுத்த போது திடீரென காயம் காரணமாக பாதியில் வெளியேறி இருந்தார். இதனை தொடர்ந்து போட்டி வென்றதற்கு பின் பற்றி பேசி இருந்த ரோஹித் ஷர்மா, “பெரிய காயம் எதுவும் இல்லை. நான் டாஸின் போதே இதனை பற்றி சொல்லியிருந்தேன். உண்மையை சொல்ல வேண்டுமென்றால் இந்த பிட்ச்சிலிருந்து என்ன எதிர்பார்ப்பது என்பதே தெரியவில்லை.

- Advertisement 2-

ஐந்து மாதங்கள் மட்டுமே பழக்கம் உள்ள இந்த பிட்ச்சில் எப்படி ஆடுவது என்பதும் புதிர் தான். ஆனால் பந்து வீச்சாளர்களுக்கு இது போதுமான பிட்ச்சாக பார்க்கிறேன். அவர்கள் என்ன முடியுமோ அதனை சிறப்பான நிலையில் தொடர்ச்சியாக செய்திருந்தனர். இதில் டெஸ்ட் போட்டிகள் அதிகமாக ஆடாத அர்ஷ்தீப் சிங், முதல் இரண்டு விக்கெட் எடுத்து நல்ல ஒரு ஆரம்பத்தை எங்களுக்காக அமைத்துக் கொடுத்தார்.

இங்கே நான்கு ஸ்பின்னர்களையும் களமிறக்க முடியாது என்று நினைக்கிறேன். அணியை நாங்கள் தேர்வு செய்த போது பேலன்ஸ் கரெக்டாக இருக்க வேண்டும் என்று தான் எதிர்பார்த்தோம். வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும்போது அவர்களை களமிறக்க வேண்டும் என்றும், சுழற்பந்து வீச்சுக்கான பிட்ச்சாக இருக்கும் மைதானங்களில் அவர்களையும் அதிகம் பயன்படுத்துவோம்.

இன்று கூட நான்கு வேகப்பந்து வீச்சாளர்கள் மைதானம் தான். இருந்தும் இரண்டு ஆல்ரவுண்டர் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு வாய்ப்பு கொடுத்திருந்தோம். பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியிலும் பிட்ச் எப்படி செயல்படும் என்பதை நிச்சயம் எதிர்பார்க்க முடியாது. அந்த மாதிரி போட்டியில் தான் 11 பேரும் வந்து நல்ல பங்களிப்பை அளிக்க வேண்டும். நிச்சயமாக இந்த போட்டியில் நடந்ததை பாகிஸ்தான் அணிக்கு எதிராக செயல்படுத்துவோம் என நம்புகிறோம்” என ரோஹித் கூறினார்.

சற்று முன்