- Advertisement 3-
Homeவிளையாட்டுநான் என்ன விசா ஆஃபிஸ்லயா உக்காந்து இருக்கேன்.. இங்கிலாந்து அணியில் வெடித்த சர்ச்சை.. கடுப்பான ரோஹித்..

நான் என்ன விசா ஆஃபிஸ்லயா உக்காந்து இருக்கேன்.. இங்கிலாந்து அணியில் வெடித்த சர்ச்சை.. கடுப்பான ரோஹித்..

- Advertisement 1-

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடர் நாளை (25.01.2024) ஆரம்பமாக உள்ள சூழலில் இங்கிலாந்து அணியில் ஒரு பெரிய சிக்கலும் உருவாகி தற்போது பூதாகரமாகவும் வெடித்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும். இந்திய அணிக்கு எதிராக முதல் டெஸ்டில் மோத உள்ள தங்களின் ஆடும் லெவனை சமீபத்தில் இங்கிலாந்து அணி அறிவித்திருந்தது.

இதற்கு மத்தியில் அந்த அணியில் இடம்பெற்ற 20 வயதே ஆகும் இளம்வீரர் சோயப் பஷீர் சில காரணங்களால் இந்தியா வர முடியாமல் சிக்கிக் கொண்டார். துபாயில் பயிற்சியில் ஈடுபட்டு வந்த ஷோயப் பஷீரைத் தவிர மற்ற அனைத்து இங்கிலாந்து வீரர்களுக்கும் இந்தியாவிற்கான விசா கிடைத்த நிலையில் அவருக்கு மட்டும் அதற்கான அனுமதி மறுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதனால் அங்கிருந்து இங்கிலாந்து திரும்பி இங்கிலாந்தில் இருந்து இந்தியாவிற்கு பஷீர் பயணம் மேற்கொள்ள உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த வார இறுதியில் அவர் இந்தியா வந்தடைவார் என்றும் தகவல் தெரிவிக்கும் நிலையில் இதன் காரணமாக முதல் டெஸ்ட் போட்டியில் ஆடும் வாய்ப்பை பஷீர் தவற விட்டார் என்றும் கூறப்படுகிறது.

சோயப் பஷீருக்கான விசாவை இந்தியா தரப்பில் இருந்து மறுக்கப்பட்ட நிலையில், அவர் முஸ்லீம் என்பதால் தான் இப்படி நடந்தது என்றும், பாகிஸ்தான் பாரம்பரியத்தை சேர்ந்தவர் என்பதும் ஒரு காரணம் என்றும் கடுமையான விமர்சனங்கள் உருவாகி இந்திய அணிக்கு எதிர்ப்பும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இது பற்றி கருத்து தெரிவித்திருந்த இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் கூட தான் கடுமையாக ஏமாற்றம் அடைந்ததாகவும் தெரிவித்திருந்தார்..

- Advertisement 2-

இந்த நிலையில், இங்கிலாந்து அணியின் இளம் வீரர் ஷோயப் பஷீருக்கு விசா மறுக்கப்பட்டது பற்றி சில கருத்துக்களை இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். “ஷோயப் பஷீர் இந்தியாவுக்கு வர முடியாமல் சென்றதை நினைத்து நான் வருத்தமடைகிறேன். இங்கிலாந்து அணியுடன் அவர் இந்தியாவுக்கு முதல் முறையாக வருகிறார் என நினைக்கிறேன். இந்திய அணியில் இருந்த ஒரு வீரர் இங்கிலாந்தில் செல்லும்போது விசா மறுக்கப்பட்டால் இது போன்று தான் இருக்கும்.

துரதிர்ஷ்டவசமாக இது பற்றி கூடுதல் விவரங்களை வழங்க நான் ஒன்றும் விசா அலுவலகத்தில் உட்கார்ந்து பணிபுரியவில்லை. ஆனால் அவர் விரைவில் இங்கு வந்து சேருவார் என நான் நம்புகிறேன். அத்துடன் எங்களின் நாட்டையும் ரசித்து, கிரிக்கெட்டையும் நன்றாக விளையாடுவார் என்றும் கருதுகிறேன்” என ரோஹித் ஷர்மா குறிப்பிட்டுள்ளார்.

சற்று முன்