- Advertisement -
Homeவிளையாட்டுரோஹித் இல்லாததால் ஹர்திக் பாண்டியாவிற்கு வந்த சிக்கல்.. சூர்யகுமார் எப்படி தான் சமாளிப்பாரோ..

ரோஹித் இல்லாததால் ஹர்திக் பாண்டியாவிற்கு வந்த சிக்கல்.. சூர்யகுமார் எப்படி தான் சமாளிப்பாரோ..

- Advertisement-

இந்திய அணி கண்ட சிறந்த ஆல் ரவுண்டர்களில் ஒருவராக இருந்து வரும் ஹர்திக் பாண்டியா இந்த ஆண்டு நிறைய துன்பங்களையும், சோதனைகளையும் கடந்து வந்தார் என்பது தான் நிதர்சனமான உண்மை. கடந்த ஆண்டு காயங்கள் காரணமாக நிறைய முக்கியமான தொடர்களை ஆட முடியாமல் வாய்ப்பை இழந்திருந்த ஹர்திக் பாண்டியா, இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் உடற்தகுதி பெற்று மீண்டும் கிரிக்கெட் போட்டிகளை ஐபிஎல் தொடர் முதல் ஆடத் தொடங்கி இருந்தார்.

அதிலும் ஏராளமான விமர்சனங்களும், சர்ச்சை கருத்துக்களும் தான் அவரை சுற்றி உருவாகி இருந்தது. புதிய கேப்டனாக மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஹர்திக் பாண்டியா மாறியிருக்க, ஒட்டுமொத்த ஐபிஎல் ரசிகர்களும் அவர் மீது எதிர்ப்பை தான் காட்டியிருந்தனர். இதனால் கேப்டனாகவும், பேட்ஸ்மேன் மற்றும் பந்து வீச்சாளராகவும் சிறப்பாக ஜொலிக்க முடியாமல் போனதால் கடுமையான நெருக்கடிக்கும் ஆளாகி இருந்தார் ஹர்திக் பாண்டியா.

மும்பை அணியும் ஒரு பக்கம் தொடர் தோல்விகளை சந்தித்து புள்ளி பட்டியலிலும் கடைசி இடத்தை பிடித்திருந்தது மட்டுமில்லாமல் ஹர்திக் கேப்டன்சியை மாற்ற வேண்டும் என்றும் எதிர் கருத்துக்கள் உருவானது. இப்படி இக்கட்டான சூழலில் தான் டி20 உலக கோப்பை தொடரிலும் ரோஹித் ஷர்மா தலைமையில் ஹர்திக் பாண்டியா களமிறங்கி இருந்தார்.

எந்த அளவுக்கு அவர் விமர்சனத்தை சந்தித்தாரோ அதை எல்லாம் தனது பேட்டிங் மற்றும் பந்து வீச்சால் தவிடு பொடியாக்கிய ஹர்திக் பாண்டியா, இந்திய அணி டி20 உலக கோப்பையை வெல்வதற்கும் மிக முக்கிய காரணமாக அமைந்திருந்தார். ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 தொடரில் ஓய்வில் இருந்த ஹர்திக் பாண்டியா, தற்போது இலங்கை அணிக்கு எதிரான தொடரில் மீண்டும் களமிறங்கியுள்ளார்.

- Advertisement-

இதன் முதல் போட்டி முடிவடைந்த நிலையில், 4 ஓவர்கள் பந்து வீசியிருந்த ஹர்திக் பாண்டியா ஒரு விக்கெட் கூட எடுக்காமல் 41 ரன்கள் கொடுத்திருந்தார். டி20 உலக கோப்பைத் தொடரில் பல பெரிய அணிகளுக்கு அச்சுறுத்தலாக இருந்த ஹர்திக் பாண்டியாவின் பவுலிங், இலங்கை அணிக்கு எதிராக எடுபடாமல் போனது.

இதனிடையே தான் ரோஹித் ஷர்மா கேப்டனாக இருந்த போது ஹர்திக் பாண்டியா ஆடிய டி20 போட்டிகளிலும் மற்ற கேப்டன்களுக்கு தலைமையில் அவர் ஆடிய டி20 போட்டிகளிலும் உள்ள வித்தியாசம் ரசிகர்களை வியக்க வைத்துள்ளது.

ரோஹித் ஷர்மா தலைமையில் 32 டி20 சர்வதேச போட்டிகளில் பந்து வீசியுள்ள ஹர்திக் பாண்டியா, 40 விக்கெட்டுகளை எடுத்துள்ளதுடன் இவரது எகானமியும் 7.98 ஆக உள்ளது. 21 சராசரியுடன் பந்து வீசியுள்ள அவர், மற்ற கேப்டன்கள் தலைமையில் 58 டி20 போட்டிகள் ஆடி 44 விக்கெட்டுகள் மட்டுமே எடுத்துள்ளார். அதே போல, அவரது சராசரியும் 30 ஆக இருக்க எகானமியும், 8.25 ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்