- Advertisement 3-
Homeவிளையாட்டுஅப்படியே ரோஹித் ஷர்மா மாதிரி.. அபிஷேக் ஷர்மா சதத்திற்கு பின்னால் இருந்த சுவாரஸ்ய பின்னணி..

அப்படியே ரோஹித் ஷர்மா மாதிரி.. அபிஷேக் ஷர்மா சதத்திற்கு பின்னால் இருந்த சுவாரஸ்ய பின்னணி..

- Advertisement-

ஐபிஎல் தொடரில் தனது அதிரடி ஆட்டத்தின் மூலம் ஒட்டுமொத்த கிரிக்கெட் அரங்கையும், தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தவர் தான் இளம் வீரர் அபிஷேக் ஷர்மா. இவருக்கு 20 வயதே ஆகும் நிலையில் இந்திய அணியின் அதிரடி ஆல் ரவுண்டராக இருந்த யுவராஜ் சிங் பயிற்சியில், பிரைன் லாராவின் அறிவுரைகளின் படி தனது அதிரடி ஆட்டத்தை ஒவ்வொரு ஐபிஎல் போட்டியிலும் மேம்படுத்திக் கொண்டே வந்த இவருக்கு தான் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணியில் இடம் கிடைத்திருந்தது.

டி20 உலக கோப்பை முடிவடைந்ததால் பல இந்திய வீரர்கள் பலர் இதில் ஆடாமல் போக ஒரு பொன்னான வாய்ப்பும் அபிஷேக் ஷர்மா உள்ளிட்ட பல இளம் வீரர்களுக்கும் தங்களின் திறமையை நிரூபிக்க கிடைத்திருந்தது. அப்படி ஒரு சூழலில் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டியில் ஜிம்பாப்வேவுக்கு எதிராக டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்திருந்தார் அபிஷேக் ஷர்மா.

- Advertisements -

முதல் ஓவரில் நான்கு பந்துகள் மட்டுமே சந்தித்த அவர் டக் அவுட்டாகி வெளியேற, வரும் போட்டிகளில் தனது திறமையை நிரூபிப்பதற்கான வழிகளை சிறப்பாக வகுப்பார் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. அந்த ரசிகர்களின் எதிர்பார்ப்பை கொஞ்சம் கூட பொய்யாக்காத அபிஷேக் ஷர்மா, மிகச்சிறப்பாக ஆடி சிக்ஸர்கள் மற்றும் ஃபோர்களையும் பறக்க விட்டிருந்தார்.

இதனால் ஹாட்ரிக் சிக்ஸர் அடித்து தனது முதல் சர்வதேச சதத்தையும் இரண்டாவது போட்டியிலே பதிவு செய்து சாதனை படைத்திருந்த அபிஷேக் ஷர்மா, அடுத்த பந்திலயே அவுட் ஆகி இருந்தார். இரண்டாவது டி20 போட்டியிலேயே குறைந்த பந்துகளில் சதம் அடித்த இந்திய வீரர்கள் பட்டியலிலும் டாப் 5 இடத்தில் ஒன்றை பிடித்திருந்த அவர் தற்போது மற்றொரு முக்கியமான விஷயத்தையும் ரோஹித் ஷர்மாவுக்கு நிகராக செய்துள்ளார்.

- Advertisement-

ரோஹித் ஷர்மா தனது முதல் டி20 சர்வதேச சதத்தை ஜிம்பாப்வே அணிக்கு எதிராக தான் அடித்திருந்தார். அதுவும் சிக்ஸ் அடித்து தனது 100 ரன்களை எட்டி இருந்தார் ரோஹித் ஷர்மா. அவரை போலவே அபிஷேக் ஷர்மாவும் தனது முதல் டி20 சர்வதேச சதத்தை ஜிம்பாப்வேவுக்கு எதிராக அடித்ததுடன் மட்டுமில்லாமல் ரோஹித்தை போல சிக்ஸர் அடித்து சதத்தை எட்டி இருந்தார்.

இந்த ஒற்றுமைகளை தவிர தனது முதல் சர்வதேச ரன்னை சிக்ஸராக அடித்திருந்த அபிஷேக் ஷர்மா, தனது முதல் டி20 அரை சதத்தையும் சிக்ஸ் அடித்து பூர்த்தி செய்ததுடன் நூறு ரன்களை எட்டிய போதும் சிக்ஸர் அடித்து எட்டி தனது அதிரடி திறனை நிரூபித்து காட்டியுள்ளார்.

சற்று முன்