- Advertisement 3-
Homeவிளையாட்டுரோஹித் மோசமான சாதனை.. சாஹல் அபார சாதனை.. ஒரே மேட்ச்சில் நடந்த ஐபிஎல் சீசனின் முக்கிய...

ரோஹித் மோசமான சாதனை.. சாஹல் அபார சாதனை.. ஒரே மேட்ச்சில் நடந்த ஐபிஎல் சீசனின் முக்கிய சம்பவம்..

- Advertisement-

மும்பையின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா எப்போது நியமிக்கப்பட்டாரோ அது முதல் இன்று வரை அந்த அணியை சுற்றி பல்வேறு விமர்சனங்களும், குழப்பங்களும் இருந்து தான் வருகிறது. ஹர்திக் கேப்டனாக அறிவிக்கப்பட்டதை விட ரோகித் கேப்டன் பதவியில் இருந்து மாற்றப்பட்டது தான் ரசிகர்களை வெறுப்பில் ஆழ்த்தி இருந்தது.

இதனால் மும்பை ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் அதை ஐபிஎல் தொடரில் இதுவரை அவர்கள் ஆடிய 3 போட்டிகளிலும் பிரதிபலித்திருந்தது. முதல் இரண்டு போட்டிகள் வேறு மைதானங்களில் நடந்த நிலையில் அங்கே வந்த ரசிகர்களும் ரோகித் ரோகித் என கத்தியதுடன் ஹர்திக் பாண்டியாவிற்கு கடுமையான எதிர்ப்பினை தெரிவித்து இருந்தனர்.

- Advertisements -

ஒருவேளை மும்பை வான்கடே மைதானத்தில் நடக்கும் போட்டியில் ஹர்திக் பாண்டியாவிற்கு ஆதரவு இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அங்கே இருந்த ரசிகர்களும் கூட ரோகித் என்ற பெயரை கத்தியதுடன் போட்டி முழுக்க இதனையே தொடர்ந்து செய்து கொண்டிருந்தனர். இது மும்பை அணியில் இருந்தவர்களுக்கு எரிச்சலை உண்டு பண்ண ஹர்திக்கிற்கும் கூட பெரிய நெருக்கடியாகவே அமைந்திருந்தது.

இப்படி பல பிரச்சினைகள் மும்பை அணியில் இருப்பதால் இதுவரை ஆடி முடிந்த மூன்று போட்டிகளிலும் அவர்கள் பரிதாபமாக தோல்வி அடைந்துள்ளனர். அதிலும் ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி வெறும் 125 ரன்கள் மட்டுமே எடுத்து இருந்தது. அதிலும் ரோகித் சர்மா, நமன் திர் மற்றும் பிரேவிஸ் என மூன்று வீரர்களும் வரிசையாக கோல்டன் டக்கில் அவுட் ஆகி இருந்தனர்.

- Advertisement-

இந்த மூன்று விக்கெட்டுகளையும் போல்ட் எடுக்க கடைசி கட்டத்தில் ராஜஸ்தான் அணியின் சுழற் பந்துவீச்சாளர் சாஹல் 4 ஓவர்கள் பந்து வீசி 11 ரன்கள் மட்டுமே கொடுத்து மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார். இப்படி போல்ட் மற்றும் சாஹல் என இருவரின் பந்துவீச்சில் நிலை குலைந்து போன மும்பை அணி 125 ரன்கள் மட்டுமே எடுக்க இளம் வீரரான ரியான் பராக் சிறப்பாக ஆடி ராஜஸ்தான் அணியை வெற்றி பெறச் செய்தார்.

இந்த நிலையில் இந்த போட்டியில் மிக ஒரு மோசமான சாதனையை ரோகித்தும் மிக முக்கியமான ஒரு சாதனையை சாஹலும் படைத்துள்ளனர். இந்த போட்டியில் முதல் பந்தில் ரோகித் அவுட்டாக அதன் காரணமாக ஐபிஎல் தொடரில் 17 முறை டக் ஆகியுள்ளார் ரோகித். அத்துடன் ஐபிஎல் தொடரில் அதிக முறை டக் அவுட் ஆகியுள்ள தினேஷ் கார்த்திக்கின் சாதனையும் தற்போது அவர் சமன் செய்துள்ளார்.

இன்னொரு பக்கம் சாஹல் இந்த போட்டியில் மூன்று விக்கெட்டுகளை எடுக்க ஐபிஎல் தொடரில் அதிக முறை மூன்று விக்கெட்டுகளை எடுத்த பும்ராவின் சாதனையும் சமன் செய்துள்ளார். இவர்கள் இரண்டு பேரும் ஐபிஎல் தொடரில் 20 முறை மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்