- Advertisement -
Homeவிளையாட்டுடி20 உலக கோப்பை முதல் நாள் வரை பேசாமல் இருந்த ஹர்திக், ரோஹித்.. சேர காரணமாக...

டி20 உலக கோப்பை முதல் நாள் வரை பேசாமல் இருந்த ஹர்திக், ரோஹித்.. சேர காரணமாக இருந்த ஒருத்தர்.. கசிந்த ரகசியம்..

- Advertisement-

ஐபிஎல் தொடர் மட்டுமில்லாமல், இந்திய அணி அளவிலும் இந்த ஆண்டு மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்திய சம்பவம் தான் ரோஹித் ஷர்மா மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் பதவியிலிருந்து மாற்றப்பட்டது. பொதுவாக சர்வதேச அணியில் கேப்டனாக இருக்கும் வீரர்களுக்கு நிச்சயம் ஐபிஎல் தொடரிலும் கேப்டன் பதவி வழங்கப்படும்.

ஆனால் ரோஹித் ஷர்மாவை விட குறைந்த அனுபவமே உள்ள ஹர்திக் பாண்டியாவை அணியில் இணைத்துக் கொண்டு அவருக்கு கேப்டன் பதவியையும் தாரை வார்த்தது மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம். இது பற்றி பெரிய அளவில் கிரிக்கெட் பிரபலங்கள் வரை தங்களின் கருத்துக்களை தெரிவித்து வர, இதன் தாக்கம் ஐபிஎல் தொடர் வரைக்கும் பிரதிபலித்திருந்தது.

இதற்கு மத்தியில் பும்ரா, சூர்யகுமார் யாதவ் உள்ளிட்ட வீரர்கள் ரோஹித் ஷர்மாவிற்கு ஆதரவாக இருப்பதாகவும் ஹர்திக் பாண்டியாவின் கேப்டன்சியை எதிர்ப்பதாகவும் கருத்துக்கள் வெளியானது. இன்னொரு பக்கம் ஹர்திக் பாண்டியா கேப்டனாக ஈடுபட்ட போது தனது விருப்பத்திற்கு முடிவுகளை எடுத்ததும் ரோஹித் ஷர்மாவை கட்டளையிட்டு பீல்டிங் வைத்ததும் பெரிய அளவில் ரசிகர்களை கொந்தளிக்க வைத்திருந்தது.

இதனால் அடுத்த ஐபிஎல் தொடருக்கு முன்பாக மும்பை இந்தியன்ஸ் அணி இரண்டாக உடையும் என ரசிகர்கள் குறிப்பிட்டு வர டி20 உலக கோப்பைத் தொடரில் இவர்கள் அனைவருமே இணைந்து அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தனர்.

- Advertisement-

ஐபிஎல் தொடரில் விமர்சனத்தை சம்பாதித்த ஹர்திக் பாண்டியா டி20 உலக கோப்பை தொடரில் ரோஹித்திற்கு பக்கபலமாக நின்று போட்டிகளையும் வென்று கொடுத்திருந்தார். இந்த நிலையில், டி20 உலக கோப்பை தொடங்குவதற்கு முன்பான பயிற்சியில் நடந்த சம்பவம் பற்றி மூத்த பத்திரிகையாளரான விமல் குமார் சில கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

“உலக கோப்பைக்கான முதல் நாள் பயிற்சியில் நான் சென்றிருந்த போது ஹர்திக் மற்றும் ரோஹித் ஆகியோர் வெவ்வேறு இடங்களில் அமர்ந்திருந்தனர். ஆனால் இரண்டாவது நாளில் அவர்கள் இருவரும் ஒன்றாக அமர்ந்து நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தனர். அந்த நேரம் தான் அணியை தீர்மானித்தது.

அங்கே கேமரா எதுவும் இல்லை. ரோஹித் மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகிய இருவரும் பேசிக்கொண்டு இருந்தது உண்மையில் நிஜம் தானா என எனக்குள் ஆச்சரியம் தோன்ற ஆரம்பித்திருந்தது. அடுத்த மூன்று நாட்கள் ரோஹித் மற்றும் ஹர்திக் பாண்டியா இணைந்து பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டனர்.

அதிலும் ஹர்திக் பேட்டிங் மற்றும் பவுலிங் குறித்து ரோஹித் ஷர்மா நிறைய ஆலோசனைகளை கொடுத்திருந்தார். விராட் கோலி, ரோஹித், ஹர்திக் பாண்டியா என அனைவரையும் ஒன்றிணைத்தது ராகுல் டிராவிட் தான். அந்த தலைமை மீது தான் எனக்கு அதிக தன்னம்பிக்கை இருந்தது” என விமல் குமார் கூறி உள்ளார்.

சற்று முன்