- Advertisement -
Homeவிளையாட்டுமிடில் ஆர்டரில் ஆடும் ரோஹித்.. அதுனால இப்படி ஒரு மெகா சாதனை நடக்க போகுதா.. கோலிக்கும்...

மிடில் ஆர்டரில் ஆடும் ரோஹித்.. அதுனால இப்படி ஒரு மெகா சாதனை நடக்க போகுதா.. கோலிக்கும் கிடைத்த அதிர்ஷ்டம்..

- Advertisement-

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதி வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டி பகல் இரவு ஆட்டமாக நடைபெறுகிறது. இந்த போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் நட்சத்திர வீரரான விராட் கோலி ஆகிய இருவரும் இணைந்து மிக முக்கியமான ஒரு சாதனையை படைப்பதற்கான அரிய வாய்ப்பு தற்போது உருவாகியுள்ளது.

இந்திய அணியை எடுத்துக் கொண்டால் இன்று ஆடும் லெவனில் கூட அதிகமாக அனுபவம் இல்லாத இளம் வீரர்கள் இடம்பிடித்து ஆடி வருகின்றனர். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு முன்பாக புஜாரா மற்றும் ரஹானே ஆகியோர் நிச்சயம் மீண்டும் அணியில் இணைந்து விடுவார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்தது. ஆனால் அவர்கள் யாரையும் சேர்த்துக் கொள்ளாத இந்திய அணி டெஸ்ட் போட்டிகளில் அனுபவம் இல்லாத ஹர்ஷித் ராணா மற்றும் நிதிஷ் ரெட்டி உள்ளிட்ட வீரர்களுக்கு அணியில் இடம் கொடுத்திருந்தது.

ஆரம்பத்தில் இவர்களுக்கு வாய்ப்பு கொடுத்தது அதிக எதிர் கருத்துக்களை சம்பாதித்திருந்தாலும் முதல் டெஸ்ட் போட்டி முடிவடைந்ததற்கு பின்னர் அப்படி கூறியவர்கள் அனைவருமே தங்களின் கருத்தை எண்ணி தலை குனிந்திருந்தனர். இதற்குக் காரணம் ஹர்ஷித் ராணா மற்றும் நிதிஷ் ரெட்டி ஆகிய இருவருமே முதல் அறிமுக வாய்ப்பை மிகச் சிறப்பாக டெஸ்ட் அரங்கில் பயன்படுத்திக் கொண்டனர்.

இப்படி இளம் வீரர்களும் ஒரு பக்கம் பட்டையை கிளப்பிக் கொண்டிருக்க ரோஹித், கோலி என ஒரு சில சீனியர் வீரர்களே இந்திய அணியில் இடம்பிடித்து ஆடி வருகின்றனர். இதில் கோலி மற்றும் ரோகித் ஆகியோர் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் மிக முக்கியமான ஒரு அரிய சாதனையை படைக்க உள்ளனர்.

- Advertisement-

ஒரு நாள், டி20 மற்றும் டெஸ்ட் என மூன்று வடிவிலும் தனித்தனியாக இணைந்து ஆயிரம் ரன்களை எந்த இரண்டு வீரர்களும் பார்ட்னர்ஷிப்பாக அமைத்தது கிடையாது. ஒரு நாள் மற்றும் டி20 போட்டிகளில் ஏற்கனவே ஆயிரம் ரன்களுக்கு மேல் சேர்த்துள்ள விராட் கோலி மற்றும் ரோஹித் ஆகியோர் டெஸ்டில் மட்டும் அதை இன்னும் தொடாமல் இருக்கின்றனர்.

அவர்கள் இருவரும் டெஸ்ட் போட்டிகளில் இதுவரை இணைந்து 999 ரன்கள் எடுத்துள்ள நிலையில் இன்னும் ஒரு ரன்களை அவர்கள் சேர்த்தால் மூன்று வடிவிலும் தனித்தனியாக 1000 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த முதல் இணை என்ற பெருமையை பெற்றுவிடலாம். ரோகித் தொடக்க வீரராக ஆடாமல் மிடில் ஆர்டரில் ஆட உள்ளதால் நிச்சயம் கோலியுடன் இணைந்து அவர் பாட்னர்ஷிப் அமைப்பதற்கான வாய்ப்பும் தற்போது அதிகமாக உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்