- Advertisement 3-
Homeவிளையாட்டுநான் அப்போ பவுலர், அஸ்வின் பேட்ஸ்மேன்.. எல்லாமே தலைகீழா மாற காரணம்.. ரோஹித் உடைத்த சீக்ரெட்..

நான் அப்போ பவுலர், அஸ்வின் பேட்ஸ்மேன்.. எல்லாமே தலைகீழா மாற காரணம்.. ரோஹித் உடைத்த சீக்ரெட்..

- Advertisement 1-

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் இடையேயான கடைசி டெஸ்ட் போட்டி ஆரம்பமாக உள்ள நிலையில், இந்திய கிரிக்கெட் அணி கண்ட சிறந்த வீரரான ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு இது 100 வது டெஸ்ட் போட்டியாகும். தனது கிரிக்கெட் பயணத்தில் மிக முக்கியமான மைல்கல்லை அஸ்வின் எட்டியுள்ள நிலையில், பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அத்துடன் 500 விக்கெட்டுகள் மேல் குவித்துள்ள அஸ்வின், அவரது பயணத்தில் மிக முக்கியமான இந்த டெஸ்டிலும் கூட சில முக்கியமான சாதனைகளை அடித்து நொறுக்குவதற்கான வாய்ப்பும் உள்ளது. எப்போதும் போல தனது சுழலில் மாயாஜாலம் காட்டி, இந்த முறையும் விக்கெட்டுகளை அள்ளுவார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

அந்த வகையில், அஸ்வினுடன் ஆடிய பல வீரர்கள் அவரது திறனை பற்றியும், கிரிக்கெட்டிற்கான அர்ப்பணிப்பை பற்றியும் பல விதமான கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், இந்திய அணியின் கேப்டனான ரோஹித் ஷர்மாவும் அஸ்வினை பாராட்டி பல நெகிழ்ச்சியான கருத்துக்களை குறிப்பிட்டுள்ளார்.

தோனி, கோலி, ரோஹித் என சிறந்த கேப்டன்கள் தலைமையில் அஸ்வின் ஆடி வந்துள்ளார். அந்த வகையில், ரோஹித்தின் கேப்டன்சியில் மிக சிறப்பாகவும் அஸ்வின் கலக்கி வருவதால், ரோஹித்திற்கு பிடித்தமான பந்து வீச்சாளராகவும் இருந்து வருகிறார்.

- Advertisement 2-

அப்படி ஒரு சூழலில், அஸ்வின் பற்றி பேசிய ரோஹித் , “நான் அஸ்வின் ஆடி வருவதை பல ஆண்டுகளாக பார்த்து வருகிறேன். நாங்கள் இருவரும் இணைந்து U 19 போட்டியில் ஆடி உள்ளோம். U 17 போட்டியிலும் நாங்கள் ஆடினோம். அப்போது அஸ்வின் தொடக்க பேட்ஸ்மேனாகவும், நான் பந்து வீச்சாளராகவும் இருந்தேன். ஆனால் பின்னாளில் அவர் பங்து வீச்சாளராக மாற, நானும் பேட்ஸ்மேன் ஆனேன். இது இந்திய அணிக்கு சிறப்பாக அமைந்தது என்று தான் சொல்ல வேண்டும்.

அஸ்வின் போல ஒரு வீரர் உங்கள் அணியில் இருந்தால் நீங்கள் வேறு எதை பற்றியும் சிந்திக்க வேண்டாம். அவரது கையில் பந்தை கொடுத்து விட்டால் அவராகவே ஃபீல்டிங்கை செட் செய்து எப்படி பேட்ஸ்மேனை அவுட் எடுக்க வேண்டும் என்பதையும் பிளான் செய்து விடுவார்.

நாம் கிரவுண்டில் பார்ப்பதை விட அதன் பின்னால் அந்த அளவுக்கு வேலை பார்க்கிறார் என்பது தான் உண்மை. சுமார் 40 நிமிடங்கள் வரை ஒரே ஒரு ஸ்டெம்பை வைத்து பந்துவீச்சு பயிற்சியும் மேற்கொள்வார் அஸ்வின். இந்திய அணியில் இணைந்த நாள் முதல் தற்போது வரை இப்படி ஒரு பயிற்சியை அவர் மேற்கொண்டு வருகிறார்.

அது மட்டுமில்லாமல் அஸ்வின் ஒரு டீம் பிளேயரும் கூட. ராஜ்கோட் டெஸ்டில் மிக நெருக்கடியான ஒரு சூழலில் அஸ்வின் கிளம்பிய போது, அங்கே சென்ற பின்னர் என்னை அழைத்து அணியில் மீண்டும் இணைவதற்காக விருப்பம் தெரிவித்திருந்தார். இப்படிப்பட்ட குணங்கள் உள்ள வீரர்கள் மிகவும் அரிதானவர்கள். அதேபோல அவரை மாதிரி ஒருவர் அணியில் இருந்தால் நீங்கள் தலையை இன்னும் நிமிர்த்தி நடக்கலாம்” என தெரிவித்துள்ளார்.

சற்று முன்