- Advertisement 3-
Homeவிளையாட்டுஎந்த வீரருக்கும் கிடைக்காத பாக்கியம்.. கேப்டனாக புது வரலாறு எழுத ரோஹித்திற்கு கிடைத்த வாய்ப்பு..

எந்த வீரருக்கும் கிடைக்காத பாக்கியம்.. கேப்டனாக புது வரலாறு எழுத ரோஹித்திற்கு கிடைத்த வாய்ப்பு..

- Advertisement-

இந்திய கிரிக்கெட் அணி தற்போது ரோஹித் சர்மா தலைமையில் கடந்த சில ஆண்டுகளாக சிறப்பாக செயல்பட்டிருந்த நிலையில், உலக கோப்பை மட்டும் எட்டாமல் இருந்து வந்தது. அதனையும் சமீபத்தில் நடந்த டி20 உலக கோப்பை தொடரில் கைப்பற்றியிருந்த இந்திய அணி, அந்த கொண்டாட்டத்தில் இருந்தும் இன்னும் மீளவே முடியாமல் தொடர்ந்து உற்சாகமாக இருந்து வருகின்றனர்.

இன்னொரு பக்கம் ரோஹித் ஷர்மா, விராட் கோலி மற்றும் ரவீந்திர ஜடேஜா டி20 போட்டிகளில் இருந்தும் தங்களின் ஓய்வினை அறிவித்துள்ளனர். இதனால் அந்த மூன்று பேருமே இனிமேல் டெஸ்ட் போட்டிகள் மற்றும் ஒரு நாள் போட்டியில் அதிக கவனம் செலுத்துவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisements -

இதனிடையே, உலக கோப்பையை முடித்த கையோடு இந்திய அணி மற்ற இருதரப்பு தொடர்களிலும் ஆடி வருகின்றது. ஜிம்பாவே அணிக்கு எதிரான டி20 தொடர் தற்போது நடைபெற்று வரும் நிலையில், இதற்கு அடுத்தபடியாக இலங்கையிலும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு போட்டிகள் ஆட உள்ளனர். இதன் பின்னர் பங்களாதேஷ் மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகளுக்கு எதிராக கிரிக்கெட் போட்டிகளை இந்திய அணி ஆடவுள்ளது.

அப்படி ஒரு சூழலில் தான் கேப்டனாக யாருக்கும் கிடைக்காத ஒரு வாய்ப்பும் ரோஹித் ஷர்மாவிற்கு அமைந்துள்ளது பற்றி தற்போது பார்க்கலாம். டி20 உலக கோப்பையை வென்றதும் ரோஹித் ஷர்மா டி20 சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வினை அறிவித்திருந்தார். இதே போல அடுத்த 2025 ஆம் ஆண்டும் இரண்டு முக்கியமான தொடர்கள் நடைபெற உள்ளது.

- Advertisement-

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி மற்றும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பும் நடைபெற உள்ள நிலையில் இந்த இரண்டையும் இந்திய அணி வெற்றி பெறுவதற்கான முயற்சிகளில் இந்த முறை களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முன்பு நடந்த இரண்டு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியிலும் இந்திய அணி தகுதி பெற்றிருந்தாலும் அவர்கள் முறையே நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக தோல்வியை தழுவி இருந்தனர்.

இந்த முறை அப்படி எந்த தவறையும் செய்யாமல் நிச்சயம் இறுதி போட்டிக்கு தகுதி பெற்று இந்திய அணி வெற்றிக்கனியை எட்டிப் பிடிக்கும் என்று தெரிகிறது. இன்னொரு பக்கம் சாம்பியன்ஸ் டிராபியையும் வெல்ல தகுதி உள்ள அணியாக இந்தியா இருப்பதால் இந்த இரண்டு கோப்பைகளையும் அடுத்த ஆண்டு இந்தியா வெற்றி பெற்று சொந்தமாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அப்படி நடந்தால் ரோஹித்திற்கு ஒரு சிறப்பான அதிர்ஷ்டம் வந்து சேரும். டி20 உலக கோப்பை வென்று டி20 சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு அறிவித்திருந்தார் ரோஹித் ஷர்மா. இதே போல சாம்பியன்ஸ் டிராபி வென்று ஒரு நாள் தொடரில் இருந்து ஓய்வை அறிவித்தாலும், பின்னர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை வென்று டெஸ்ட் போட்டியில் இருந்தும் ஓய்வினை அறிவித்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.

இதற்கு காரணம், மூன்று ஐசிசி கோப்பைகளை வெற்றி பெற்ற கையுடன் அனைத்து வடிவிலான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெற்று முக்கியமான ஒரு அந்தஸ்தை பெறுவதற்கான வாய்ப்பு ரோஹித் ஷர்மாவுக்கு உருவாகியுள்ளது. ஆனால், டெஸ்டில் இருந்து அடுத்த ஆண்டு ஓய்வு பெற்றாலும் ஒரு நாள் போட்டிகளில் தொடர்ந்து ஆடுவார் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

சற்று முன்