- Advertisement -
Homeவிளையாட்டுஎந்த இந்திய கேப்டனும் காணாத சரிவு.. ஒரே வருடத்தில் மோசமான சாதனைக்கு ஆளான ரோஹித்..

எந்த இந்திய கேப்டனும் காணாத சரிவு.. ஒரே வருடத்தில் மோசமான சாதனைக்கு ஆளான ரோஹித்..

- Advertisement-

ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக தற்போது நடந்து வரும் பார்டர் வாஸ்கர் டிராபி தொடரில் ரோஹித் சர்மா கேப்டனாகவும், பேட்ஸ்மேனாகவும் ஒரு இடத்தில் கூட ஜொலிக்க முடியாமல் திணறி வருகிறார். கடந்த ஜூன் மாதம் நடந்த டி20 உலக கோப்பையை இந்திய அணி வென்ற போது கேப்டனாகவும் பேட்ஸ்மேனாகவும் ஜொலித்திருந்தார் ரோஹித். இலங்கைக்கு எதிரான ஒரு நாள் தொடரிலும் பேட்டிங்கில் ஜொலித்த ரோகித் சர்மாவால் கடந்த மூன்று டெஸ்ட் தொடர்களாக சிறப்பாகவே ஆட முடியவில்லை.

கடந்த 15 டெஸ்ட் இன்னிங்ஸ்களில் ஒரே ஒருமுறை மட்டும் 52 ரன்கள் எடுத்துள்ளார் ரோஹித் சர்மா. மற்ற எந்த இன்ஸ்களிலும் 25 ரன்கள் கூட தாண்டவில்லை. இதில் அவரது சராசரியும் 10.93 ஆக தான் உள்ளது. இதனால் ஆஸ்திரேலிய தொடருடன் அவர் ஓய்வே அறிவிக்கலாம் என்பது தான் பலரின் கருத்தாக உள்ளது. இதனிடையே மெல்போன் மைதானத்தில் நடந்த நான்காவது டெஸ்ட்டில் 340 ரன்கள் என்ற இலக்கை நோக்கி இந்திய அணி பேட்டிங்கை தொடங்கியிருந்தது.

இளம் வீர் ஜெய்ஸ்வாலும், ரோகித் சர்மாவும் தொடக்க வீரர்களா களமிறங்க இருவருமே மிக பொறுமையாக ரன்களை சேர்த்திருந்தனர். 10 பந்துகளில் அவுட்டாகி செல்லும் ரோகித் சர்மா, இந்த முறை அதிக பந்துகளை எதிர்கொண்டதால் நிச்சயம் தாக்கத்தை ஏற்படுத்துவார் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

ஆனால் 40 பந்துகளில் 9 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த ரோகித் சர்மா பேட் கமின்ஸ் பந்தில் அவுட்டாகி ஏமாற்றத்தை மீண்டும் ஒருமுறை அளித்துள்ளார். இளம் வீரர் ஜெய்ஸ்வால் கூட பொறுப்பை உணர்ந்து ஆடும் சூழலில், ரோஹித் ஷர்மாவின் ஆட்டம் இப்படி இருப்பது விமர்சனத்தை சந்தித்துள்ளது. இதனால் நிச்சயம் இந்த தொடருடன் டெஸ்டில் இருந்து ரோஹித் ஷர்மா விலகுவது தான் சரியாக இருக்கும் என்பது கிரிக்கெட் பிரபலங்கள் பலரின் கருத்தாகவும் உள்ளது.

- Advertisement-

இதனிடையே கடந்த ஒரு வருடத்திற்குள் டெஸ்டில் ரோஹித் செய்த மோசமான ஒரு சம்பவத்தை பற்றி தற்போது பார்க்கலாம். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4 து டெஸ்டின் இரண்டு இன்னிங்ஸ்களிலும் ஒற்றை இலக்க ரன்களில் (3 & 9) அவுட்டாகி இருந்தார் ரோஹித் ஷர்மா. இதன் மூலம், இந்திய டெஸ்ட் கேப்டனாக ஐந்து போட்டிகளின் இரண்டு இன்னிங்ஸ்களிலும் ரோஹித் ஷர்மா இப்படி ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டாகி இருந்தார்.

அதுவும் ஒருவருட இடைவேளையில் இது அரங்கேறி இருக்க, கங்குலி 5 முறையும், மன்சூர் அலி கான் பட்டாவுடி என்ற இந்திய அணியின் முன்னாள் டெஸ்ட் கேப்டன் 6 முறையும் இரண்டு இன்னிங்ஸ்களிலும் 10 ரன்கள் கூட தாண்டாமல் அவுட்டாகி உள்ளனர்.

ஆனால் அவர்கள் யாரும் ஒரு வருட இடைவெளியில் இத்தனை முறை இரண்டு இன்னிங்ஸ்களிலும் ஒற்றை இலக்க ரன்களில் ரோஹித்தை போல அவுட்டாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்