- Advertisement 3-
Homeவிளையாட்டுசஞ்சு சாம்சனை நம்பி ரோஹித் எடுத்த பெரிய ரிஸ்க்.. கடைசில கதை இப்படி ஆயிடுச்சே..

சஞ்சு சாம்சனை நம்பி ரோஹித் எடுத்த பெரிய ரிஸ்க்.. கடைசில கதை இப்படி ஆயிடுச்சே..

- Advertisement 1-

இந்திய கிரிக்கெட் அணி டி 20 உலக கோப்பையை முன்னிட்டு அமெரிக்காவுக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பாக கிளம்பி இருந்தது. இதனிடையே அவர்களின் பயிற்சிக்காக ஒதுக்கப்பட்ட இடம் பெரிய அளவில் வசதி இல்லாமல் இருந்ததாகவும் அதிக விமர்சனங்கள் எழுந்திருந்தது.

ஆனால் இது போன்ற தடைகளை எல்லாம் கடந்து நிச்சயம் ஒரு அணியாக அவர்கள் சாதிப்பார்கள் என்ற நம்பிக்கையிலும் ரசிகர்கள் இருந்து வருகின்றனர். அது மட்டுமல்லாமல் சில வீரர்கள் புதிதாக இந்த உலக கோப்பைத் தொடரில் இடம்பெற்றுள்ளதால் ஒரு அணியாக நிச்சயம் சிறப்பான மேஜிக்கை ரோஹித் சர்மா தலைமையில் அவர்கள் செய்து காட்டுவார்கள் என்று தெரிகிறது.

அப்படி இருக்கையில் உலக கோப்பைத் தொடரின் முதல் போட்டிக்கு முன்பான தினத்தின் கடைசி பயிற்சி போட்டியில் இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதி இருந்தது. முதல் முறையாக உலகக் கோப்பை அணியில் தேர்வாகி இருந்த சஞ்சு சாம்சன், ரோஹித் ஷர்மாவுடன் சேர்ந்து தொடக்க வீரராக களமிறங்கி இருந்தார்.

ஆனால் பங்களாதேஷுக்கு எதிராக தட்டுத் தடுமாறி ரன் சேர்க்க முடியாமல் ஒரு ரன் மட்டுமே எடுத்து அவுட்டானார். இதனிடையே அவரைப் போலவே பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் உலக கோப்பை அணியில் இடம் பிடித்திருந்த ஷிவம் துபே, 16 பந்துகளில் 14 ரன்கள் மட்டுமே எடுத்து அவுட்டானார். இன்னொரு புறம் சூர்யகுமார் யாதவ், ரிஷப் பந்த், ஹர்திக் பாண்டியா உள்ளிட்டோர் கிடைத்த வாய்ப்புகளில் எல்லாம் பவுண்டரிகளை விரட்ட இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 182 ரன்கள் எடுத்திருந்தது.

- Advertisement 2-

இதனிடையே பயிற்சி போட்டி என்றாலும் நல்லதொரு தொடக்கத்தை கொடுக்க திணறிய சஞ்சு சாம்சன் மற்றும் ஷிவம் துபே ஆகியோரை பற்றி தான் ரசிகர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த இரண்டு பேருமே ஐபிஎல் தொடரில் பட்டையை கிளப்பிக் கொண்டிருக்க, டி20 உலக கோப்பை அணியில் தேர்வான பின்னர் இரண்டு பேருமே ரன் சேர்க்கவில்லை.

இதனால் டி20 உலக கோப்பையில் நிச்சயம் தங்களுக்கு கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்வார்கள் என்றே கருதப்பட்டது. ஆனால் பயிற்சி போட்டியில் இரண்டு பேருமே சொதப்பியுள்ள சூழலில் இனிவரும் முக்கியமான போட்டிகளில் அவர்களுக்கான இடம் கிடைக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

அது மட்டுமில்லாமல் இந்த பயிற்சி போட்டியில் இளம் வீரர் ஜெய்ஸ்வாலை தொடக்க வீரராக களம் இறக்காமல் சஞ்சு சாம்சனை நம்பி தொடக்க வீரராக ரோஹித் பேட்டிங் ஆட வைத்த போதும் அவர் சொதப்பி உள்ளது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்