- Advertisement 3-
Homeவிளையாட்டுஆஸியை பீஸ் பீசாக்கிய ரோஹித்.. முதல் ஆளாக டி 20 கிரிக்கெட் வரலாற்றில் செஞ்ச மெகா...

ஆஸியை பீஸ் பீசாக்கிய ரோஹித்.. முதல் ஆளாக டி 20 கிரிக்கெட் வரலாற்றில் செஞ்ச மெகா சாதனை..

- Advertisement 1-

டி20 உலக கோப்பை தொடரில் இந்திய அணி மிக முக்கியமான போட்டியில் தற்போது ஆஸ்திரேலிய அணியை எதிர்த்து ஆடி வருகிறது. இதற்கு முன்பாக லீக் சுற்றில் இந்திய அணி பாகிஸ்தான், அமெரிக்கா மற்றும் அயர்லாந்து அணிகளை வீழ்த்தி இருந்தது. தொடர்ந்து சூப்பர் 8 வாய்ப்பும் மிக எளிதாக அமைந்திருந்தது. இதனையடுத்து நடந்த சூப்பர் 8 போட்டியிலும் பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகளை அடுத்தடுத்து வீழ்த்தி இருந்தது இந்திய கிரிக்கெட் அணி.

ஆனால் இதில் பெரும்பாலான போட்டிகளில் இந்திய அணியின் பந்துவீச்சு தான் அதிகம் கைகொடுக்க, அதன் காரணமாக அவர்கள் வெற்றியையும் பெற்றிருந்தனர். ஆனால் பேட்டிங்கை பொறுத்த வரையில் விராட் கோலி, ரோஹித் சர்மா உள்ளிட்ட பலரும் மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த தவறி இருந்தனர். இனிமேல் அரையிறுதி உள்ளிட்ட நாக்அவுட் போட்டிகள் வருவதால் நிச்சயம் இந்திய அணி பேட்டிங்கில் உள்ள தவறுகளை திருத்திக் கொண்டால் தான் சரியாக இருக்கும் என்றும் ரசிகர்கள் தெரிவித்து வந்தனர்.

அப்படி ஒரு சூழலில் தான் வங்காளதேச அணிக்கு எதிரான போட்டியில் மிகச் சிறப்பாக ஆடி இருந்த இந்திய அணியில் அனைத்து பேட்ஸ்மேன்களும் நல்ல பங்களிப்பை அளித்திருந்தனர். ரோஹித் தொடங்கி கோலி, ஷிவம் துபே, ஹர்திக் பாண்டியா என அனைவருமே தங்களின் பேட்டால் ரன்கள் குவிக்க, இந்திய அணி எளிதான வெற்றியை ருசித்திருந்தது.

இதற்கிடையே ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தங்களின் கடைசி சூப்பர் 8 போட்டியிலும் இந்திய அணி மோதி இருந்தது. இந்திய அணி பெரிய ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைவதை தவிர்த்தாலே அரை இறுதிக்கு முன்னேறி விடலாம் என்ற நிலை தான் இருந்தது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சைத் தேர்வு செய்ய இரண்டாவது ஓவரிலேயே இந்தியாவுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

- Advertisement 2-

சென்ற போட்டியில் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி இருந்த கோலி, இந்த முறை டக் அவுட்டாகி ஏமாற்றம் அளித்திருந்தார். ஆனால் இன்னொரு புறம் கேப்டன் ரோஹித் ஷர்மா, ஸ்டார்க்கின் ஒரே ஓவரில் நான்கு சிக்ஸர்களுடன் 29 ரன்களை சேர்க்க 19 பந்துகளில் அரைச்சதத்தை அடித்து பட்டையை கிளப்பி இருந்தார்.

இறுதியில் 41 பந்துகளில் 8 சிக்ஸர்களுடன் 92 ரன்கள் எடுத்திருந்த ரோஹித் ஷர்மா, அவுட்டாகி தனது சதத்தையும் தவற விட்டிருந்தார். அப்படி ஒரு சூழலில், மிக முக்கியமான ஒரு சாதனையை தான் தற்போது டி 20 சர்வதேச கிரிக்கெட்டில் படைத்துள்ளார் ரோஹித் ஷர்மா. அதாவது டி20 சர்வதேச கிரிக்கெட்டில் 200 சிக்ஸர்களை அடித்த முதல் வீரர் என்ற சிறப்பை பெற்றுள்ளார். இவருக்கு அடுத்தபடியாக மார்டின் கப்தில் 173 சிக்ஸர்களுடனும், ஜோஸ் பட்லர் 137 சிக்ஸர்களுடனும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்