- Advertisement -
கிரிக்கெட்

திலக் வர்மாவே பெஸ்ட்.. ஐபிஎல் வரலாற்றில் முதல் ஆள்.. அதிக டக் அவுட் மாதிரி மற்றொரு மோசமான சாதனை படைத்த ரோஹித்..

நடப்பு ஐபிஎல் சீசனின் ஆரம்பத்தில் ரோஹித் சர்மா பேட்டிங் மிக நன்றாக இருந்தது. ஆனால் போட்டி செல்லச் செல்ல அவரது பேட்டிங் மும்பை அணிக்கு அதிகம் சாதகமான விஷயமாக அமையவில்லை. சென்னை அணிக்கு எதிரான போட்டியில் சதம் அடித்து அசத்தி இருந்த ரோஹித் ஷர்மா, இதுவரை 9 போட்டிகள் ஆடி 311 ரன்கள் எடுத்துள்ளார். அவரது ஸ்ட்ரைக் ரேட் நன்றாக இருந்தாலும் சில போட்டிகளில் தொடர்ந்து ரன் சேர்ப்பதில் தடுமாற்றம் கண்டு வருவதால் பெரிய அளவில் மும்பை அணிக்கு அது வெற்றிக்கான வழியாகவும் அமையவில்லை.

சமீபத்தில் டெல்லி அணிக்கு எதிராக நடந்த போட்டியில் 258 ரன்கள் என்ற இலக்கை நோக்கி மும்பை அணி சேசிங் செய்த போது 8 ரன்களில் அவர் அவுட்டாகி இருந்தது அதிக ஏமாற்றத்தை ரசிகர்களுக்கு அளித்திருந்தது. மேலும் இந்த போட்டியில் பத்து ரன்களில் மும்பை இந்தியன்ஸ் அணி தோல்வி அடைந்திருந்த நிலையில் ஒருவேளை ரோஹித் சர்மா ஆரம்பத்தில் அதிரடி காட்டி இருந்தால் நிச்சயம் வெற்றி பெற்று இரண்டாவது சிறந்த சேசிங் ஆகவும் ஐபிஎல் போட்டியில் அவர்கள் வரலாறு படைத்திருக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

ஆனால் இந்த போட்டியில் ரோஹித் ஷர்மா ரன் அடிக்கவே தடுமாறி இருந்தது மிகப்பெரிய ஒரு பிரச்சினையாகவும் பார்க்கப்படும் நிலையில் மோசமான ஒரு சாதனைக்கும் சொந்தக்காரர் ஆகியுள்ளார். அதாவது ஐபிஎல் தொடரில் அதிக முறை ஒற்றை இலக்க ரன்களில் அவுட் ஆன வீரர் என்ற பெருமை தான் அது. மொத்தமாக 75 முறை ஒற்றை இலக்க ரன்னில் ஐபிஎல் தொடரில் அவுட்டான முதல் வீரர் என்ற மோசமான சாதனையை தான் ரோஹித் ஷர்மா பெற்றுள்ளார்.

அதே வேளையில் அவருடன் இணைந்து மும்பை அணியில் சில சீசன்களாக ஆடி வரும் இளம் வீரர் திலக் வர்மா கடந்த 13 இன்னிங்ஸில் ஒரே ஒருமுறை தான் ஒற்றை இலக்க ரன்னில் அவுட்டாகி உள்ளார். டெல்லி அணிக்கு எதிரான போட்டியிலும் திலக் வர்மா தனியாளாக போராடியது வீணாய் போயிருந்தது.

- Advertisement -

மும்பை அணியில் இருக்கும் இளம் வீரர்கள் வரை சிறப்பாக ஆடி வரும் சூழலில் அவரைவிட அதிக அனுபவம் வாய்ந்த ரோஹித் ஷர்மா, இப்படி ஒரு மோசமான சாதனையை படைத்துள்ளதுடன் ரன் சேர்க்கவும் சமீபத்திய போட்டிகளில் தடுமாறி வருவதை ஒப்பிட்டு ரசிகர் பலரும் தங்களின் கருத்துகளையும் தெரிவித்து வருகின்றனர்.

- Advertisement -

Recent Posts