- Advertisement 3-
Homeவிளையாட்டுஎப்படிப்பட்ட சாதனைகள்.. இத எல்லாம் நெருங்கவே ஒரு யுகம் வேணும்.. ஐசிசி தொடரில் ரோஹித் பதித்த...

எப்படிப்பட்ட சாதனைகள்.. இத எல்லாம் நெருங்கவே ஒரு யுகம் வேணும்.. ஐசிசி தொடரில் ரோஹித் பதித்த தடம்..

- Advertisement 1-

இந்திய கிரிக்கெட் அணி கண்ட சிறந்த கேப்டன்களில் ஒருவராக தற்போது ரோஹித் ஷர்மா விளங்கி வருகிறார். அவரது தலைமையில் இந்திய அணி பல ஐசிசி தொடர்களின் அரையிறுதி மற்றும் இறுதி போட்டிக்கு இந்திய அணி முன்னேறி இருந்தாலும் கோப்பையை வெல்லாதது ஒரு சிறிய குறையாக தான் இருந்து வருகிறது.

ஆனால் அவை அனைத்திற்கும் இந்த டி20 உலக கோப்பைத் தொடரில் ரோஹித் ஷர்மா நிச்சயம் ஒரு பதிலை சொல்லிவிடுவார் என்று தான் தெரிகிறது. நடப்பு டி20 உலக கோப்பை தொடரில் இந்திய அணி இதுவரை 6 போட்டிகளில் ஆடி முடித்துள்ள நிலையில் ஒருமுறை கூட அவர்கள் தோல்வியை சந்திக்கவில்லை. இதே போன்றுதான் கடந்த ஆண்டு நடந்த ஒரு நாள் உலக கோப்பையிலும் இந்திய அணி ஒரு தோல்வியைக் கூட சந்திக்காமல் இறுதி போட்டிக்கு முன்னேறி அதில் மட்டும் தோல்வியடைந்து கோப்பையை தவற விட்டிருந்தது.

ஆனால் இந்த முறை அப்படி எதுவும் நிகழாமல் இந்திய அணியின் அணுகுமுறையே வித்தியாசமாக இருப்பதால் டி20 உலக கோப்பையை வெல்வது தான் அவர்களின் இலக்காக இருப்பதாகவும் தெரிகிறது. அதிலும் கேப்டன் ரோஹித் சர்மா சூப்பர் 8 சுற்றின் கடைசி போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அடித்த காட்டடி நிச்சயம் இங்கிலாந்துக்கும் பெரிய அச்சுறுத்தலை கொடுக்கும் என்று தான் தெரிகிறது.

லீக் சுற்றின் முதல் போட்டியில் அரை சதம் அடித்திருந்த ரோஹித் ஷர்மா, அதன்பிறகு எந்த போட்டிகளிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாமல் இருந்து வந்தார். இதனால் அவரது பேட்டிங் கடும் விமர்சனத்தை சந்தித்த சூழலில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நூலிழையில் சதம் அடிக்கும் வாய்ப்பையும் தவற விட்டிருந்தார். அப்படி இருந்தும் அவர் காட்டிய அதிரடி டி20 போட்டிகளில் கண்ட சிறந்த இன்னிங்ஸ் என்றும் பலர் பாராட்டும் அளவுக்கு அமைந்திருந்தது.

- Advertisement 2-

கேப்டன்சியில் அசத்தி வரும் ரோஹித் பேட்டிங்கிலும் இதே ஃபார்மை தொடர்ந்தால் நிச்சயம் இந்திய அணி டி20 உலக கோப்பையை வெல்வதை வருவது யாராலும் தடுக்க முடியாது என்பதுதான் நிதர்சனமான உண்மை. இதனிடையே டி20 உலக கோப்பையில் ரோஹித் ஷர்மா படைத்துள்ள சில முக்கியமான சாதனையை பற்றி தற்போது பார்க்கலாம்.

இந்திய அணிக்காக டி20 உலக கோப்பையில் குறைந்த வயதில் ரோஹித் சர்மா தான் ஆட்டநாயகன் விருது வென்றுள்ளார் (20 வயது 143 நாட்கள்). அதே போல, அதிக வயதில் ஆட்டநாயகன் விருது வென்றதும் ரோஹித் ஷர்மா தான் (37 வயது 55 நாட்கள்). இதே போல ஒரு நாள் உலக கோப்பையில் பவர்பிளேவில் அதிக ரன்கள் எடுத்தது ரோஹித் ஷர்மா (76 ரன்கள், ஆப்கானிஸ்தானுக்கு எதிராக). அத்துடன் டி20 உலக கோப்பையிலும் பவர்பிளே ஓவர்களில் அதிக ரன் சேர்த்தது ரோஹித் ஷர்மா தான் (51 ரன்கள், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக).

இப்படி ஐசிசி தொடரில் ரோஹித் பெயர் பின்னாடி இருக்கும் சில முக்கியமான சாதனைகளை மற்ற இந்திய வீரர்கள் தொடுவதே அரிதாக தான் இருக்கும் என்றும் தெரிகிறது.

சற்று முன்