- Advertisement 3-
Homeவிளையாட்டுசூப்பர் கேப்டனா இருந்தாலும்.. டி20 வேர்ல்டு கப்ல ரோஹித் செஞ்ச பெரிய தப்பு என்ன தெரியுமா.....

சூப்பர் கேப்டனா இருந்தாலும்.. டி20 வேர்ல்டு கப்ல ரோஹித் செஞ்ச பெரிய தப்பு என்ன தெரியுமா.. ரசிகர்களை கடுப்பாக்கிய முடிவு..

- Advertisement 1-

விராட் கோலிக்கு பிறகு இந்திய அணியை தலைமை தாங்கும் வாய்ப்பு ரோஹித் ஷர்மாவுக்கு கிடைத்திருந்த நிலையில் டெஸ்ட், ஒரு நாள் போட்டி மற்றும் டி20 என அனைத்திலும் மிகச் சிறப்பாக வழிநடத்தி வருகிறார். அவரது தலைமையில் அதிகமான வெற்றிகளை குவித்துள்ள இந்திய அணி, ஐசிசி கோப்பையை கைப்பற்ற முடியவில்லை என்றாலும் அதற்கான அசத்தலான வாய்ப்புதான் தற்போது டி20 உலக கோப்பைத் தொடர் மூலம் ரோஹித்திடம் வந்து சேர்ந்துள்ளது.

இந்தியா மற்றும் தென்னாபிரிக்கா அணிகள் டி20 உலக கோப்பை தொடரின் இறுதி போட்டியில் மோத உள்ளது. இந்த இரு அணிகளுமே இந்த தொடர் முழுக்க ஒரு போட்டியில் கூட தோல்வி அடையாமல் முக்கியமான ஒரு கட்டத்திற்கு வந்துள்ளது. இதனால் யார் அந்த பயணத்தை தொடர்ந்து வெற்றியுடன் கோப்பையைத் தட்டி தூக்குவார்கள் என்பதை அறியவும் ரசிகர்கள் ஆவலாக இருந்து வருகின்றனர்.

இரண்டு அணிகளிலும் பலம் வாய்ந்த பந்து வீச்சாளர்கள், பேட்ஸ்மேன்கள் என இருப்பதால் அவர்கள் மாறி மாறி மோதும் போது மிகச் சிறப்பான ஒரு சுவாரஸ்யமான போட்டியாகவும் டி20 உலக கோப்பைத் தொடரின்
ஃபைனல் அமையும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. ஆனால் அதே வேளையில் இந்த போட்டிக்கு நடுவே மழை குறுக்கிட வாய்ப்பு அதிகம் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

இறுதிப்போட்டி என்பதால் ரிசர்வ்டு தினம் இருந்தாலும் அந்த தினத்திலும் மழை பெய்வதற்கான வாய்ப்பு அதிகம் இருப்பதாக தகவல்கள் கூறும் நிலையில், இரண்டு நாட்களிலும் போட்டியை நடத்த முடியாமல் போனால் இந்தியா மற்றும் தென்னாபிரிக்கா ஆகிய இரு அணிகளும் கோப்பையை பகிர்ந்து கொள்வார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement 2-

இந்த தொடரில் இந்திய அணியின் கேப்டனாக எந்த குறையும் இல்லாமல் சிறப்பாக ரோஹித் சர்மா வழிநடத்தி வந்தாலும் அவர் எடுத்த ஒரே ஒரு முடிவு மிக தவறானது என ரசிகர்கள் தற்போது சுட்டிக்காட்டி வருகின்றனர். கோலியின் பேட்டிங் வரிசை மாற்றப்பட்டிருந்தது அதிக அளவில் கேள்விகளை எழுப்பி இருந்தாலும் இன்னொரு பக்கம் ஃபார்மில் இல்லாத ஷிவம் துபேவிற்கு தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்பட்டு வருவதும் அதிக அளவில் பேசு பொருளாக மாறி உள்ளது.

ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காக சிறப்பாக ஆடிவந்த ஷிவம் துபேவால் உலக கோப்பைத் தொடரில் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்த முடியவில்லை. ரிங்கு சிங் என ஃபினிஷர் ரோலில் அற்புதமாக ஆடியிருந்த வீரரை மாற்றிவிட்டு ஷிவம் துபேவுக்கு டி20 உலக கோப்பையில் வாய்ப்பு கிடைத்திருந்த நிலையில் அதனை ஒட்டுமொத்தமாக அவர் பயன்படுத்த தவறி விட்டார்.

அவருக்கு பதிலாக ஜெய்ஸ்வால் அல்லது சாம்சன் உள்ளிட்ட வீரர்களை பயன்படுத்தும் வாய்ப்பு இருந்த போதிலும் ரோஹித் அந்த முடிவை எடுக்காதது ஏன் என்பது மிகப்பெரிய குழப்பமாகவே இருந்து வருகிறது. முன்னதாக டி20 உலக கோப்பை தொடரில் ரிங்கு சிங் இடத்தில் ஷிவம் துபே தேர்வானதும் அதிக எதிர்ப்புகள் தான் கிளம்பியிருந்தது.

இது பற்றி அந்த சமயத்தில் பேசி இருந்த ரோஹித் ஷர்மா, அணியில் நல்ல காம்பினேஷன் வேண்டும் என்பதற்காக தான் ரிங்கு சிங்கிற்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்றும் இனிவரும் ஐசிசி தொடர்களில் அவர் நிச்சயம் பங்குபெறுவார் என்றும் குறிப்பிட்டிருந்தார். அணியின் காம்பினேஷனுக்காக ரோஹித் எடுத்த முடிவு, ஷிவம் துபேவின் ஃபார்ம் அவுட் காரணமாக அதிக விமர்சனத்தை தான் தற்போது சந்தித்து வருகிறது .

சற்று முன்