- Advertisement 3-
Homeவிளையாட்டு5 வேர்ல்டு கப்பா கோலி காத்து வந்த ரெக்கார்ட்.. ஒரே மேட்சில் தூள் தூளாக்கிய ரோஹித்...

5 வேர்ல்டு கப்பா கோலி காத்து வந்த ரெக்கார்ட்.. ஒரே மேட்சில் தூள் தூளாக்கிய ரோஹித் ஷர்மா..

- Advertisement 1-

நடப்பு டி 20 உலக கோப்பைத் தொடரில் இந்திய கிரிக்கெட் அணி தங்களின் முதல் போட்டியில் அயர்லாந்து அணியை எதிர்த்து ஆடி இருந்தது. நிறைய சிறிய அணிகள் உலக கோப்பைத் தொடரில் தாக்கத்தை ஏற்படுத்தி இருந்ததால், இந்திய அணிக்கும் அயர்லாந்து அணி நெருக்கடி கொடுக்குமா என்ற கேள்வி இருந்தது. ஆனால், அப்படி எதுவும் நடக்காமல் இந்திய அணி எளிதாக ஆடி இருந்தது.

முதலில் பந்து வீச்சைத் தேர்வு செய்த இந்திய கிரிக்கெட் அணி, அயர்லாந்து அணியின் எந்த வீரர்களையும் ரன் சேர்க்க விடாமல், கட்டுக்கோப்பாக பந்து வீசி இருந்தது. இதில் சிக்கித் திணறிய அயர்லாந்து அணி, வெறும் 96 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டாகி இருந்தது.

தொடர்ந்து எளிய இலக்கை எட்டிப் பிடிக்க நினைத்த இந்திய அணியும் மிக கூலான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தது. கோலி 1 ரன்னிலும், சூர்யகுமார் யாதவ் 2 ரன்னிலும் அவுட் ஆனாலும் இந்திய அணியின் வெற்றியை ரிஷப் பந்த் மற்றும் ரோஹித் ஷர்மா ஆகியோர் உறுதி செய்திருந்தனர். அதே போல பந்து வீச்சிலும் கூட பும்ரா, ஹர்திக் பாண்டியா, அர்ஷ்தீப் சிங் உள்ளிட்ட அனைவருமே நல்ல பங்களிப்பை அளித்திருந்தனர்.

இதன் காரணமாக, இந்திய அணியின் வெற்றியும் எளிதாக அமைந்திருந்த நிலையில், இனி வரும் போட்டிகளிலும் அவை தொடரும் என தெரிகிறது. அதே வேளையில், பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி அடுத்து ஆட இருப்பதால் நிச்சயம் போட்டி மிகுந்த சவாலாக இருக்கும் என்று தான் எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement 2-

அதுமட்டுமில்லாமல் இந்தியா, பாகிஸ்தான் போன்ற பல பல பெரிய அணிகளுக்கு அமெரிக்கா பிட்ச் புதிதாக இருப்பதுடன் மட்டுமில்லாமல் மைதானங்களும் புதிதாக வடிவமைக்கப்பட்டிருந்தது. இதன் காரணமாக வேகபந்து வீச்சுக்கு அல்லது சுழற்பந்து வீச்சுக்கு சாதகமா என்பதே பலமுறை கணிக்க முடியாத அளவில் தான் உள்ளது.

அடுத்தடுத்து போட்டி நடைபெற்றாலும் தான் பிட்ச்சின் தன்மை அறிந்து கொள்ள முடியும் என்ற நிலையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் என இரண்டு அணிகளிலும் வேகப்பந்து வீச்சாளர்கள் நிறைய இருப்பதால் பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் தான் போட்டி அமையும் என தெரிகிறது.

அப்படி இருக்கையில் உலக கோப்பை தொடரில் கடந்த ஐந்து முறை விராட் கோலி தக்க வைத்த பெருமையை முதல்முறையாக ரோஹித் சர்மா தட்டிப் பதித்துள்ளார். 2007 ஆம் ஆண்டு ஆரம்பமான டி20 உலக கோப்பை தொடர் முதல் 2022 வரை இந்திய அணிக்காக முதலில் அரைசதமடித்த வீரர்களை பற்றி தற்போது பார்க்கலாம்.

2007 ஆம் ஆண்டு ராபின் உத்தபாவும், 2009 ஆம் ஆண்டு கௌதம் கம்பீரும், 2010 ல் நடந்த டி 20 உலக கோப்பை போட்டியில் சுரேஷ் ரெய்னாவும் இந்திய அணிக்காக முதல் அரை சதத்தை அடித்திருந்தனர். இதனை தொடர்ந்து 2012, 14, 16, 21 மற்றும் 22 ஆகிய ஐந்து ஆண்டுகளில் தொடர்ச்சியாக இந்திய அணிக்காக முதல் அரைச்சதத்தை டி 20 உலக கோப்பையில் அடித்த வீரராக விராட் கோலி தான் இருந்து வந்தார்.

அப்படி இருக்கையில் தான் இந்த முறை ரோஹித் ஷர்மா இந்திய அணிக்காக முதல் அரை சதத்தை அடித்து கோலியின் தொடர் சாதனைக்கு முட்டுக்கட்டை போட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்